சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வகையின் விவரங்கள் வெளியிடப்பட்டன

published on மார்ச் 18, 2020 01:57 pm by dinesh for ஹூண்டாய் வெர்னா 2020-2023

இது எஸ், எஸ்+, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய நான்கு வகைகளில் வழங்கப்படும்.

  • அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவானது ரூபாய் 25,000 முன்பணத்துடன் நடந்து வருகிறது.

  • டீசல் இயந்திரத்தை கொண்ட வெர்னா மூன்று வகைகளில் வழங்கப்படுகிறது: எஸ் +, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ)

  • வெர்னா 1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திரம் மூன்று வகைகளைப் பெறுகிறது: எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ).

  • 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் டிசிடி உடன் உயர்-சிறப்பம்சம் பொருந்திய எஸ்.எக்ஸ் (ஓ) வகையில் மட்டுமே கிடைக்கிறது.

  • கிரெட்டாவைப் போலவே, முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவும் 1.0 லிட்டர் டர்போ இயந்திரத்துடன் கைமுறை செலுத்துதல் முறையை நீக்குகிறது.

  • முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவின் விலைகள் ரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 14 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் மார்ச் மாதத்தில் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவை அறிமுகப்படுத்த உள்ளது, மேலும் காம்பாக்ட் செடானுக்கான அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவுகள் ஏற்கனவே ரூபாய் 25,000 முன்பணத்துடன் நடந்து வருகின்றன. அறிமுகப்படுத்தப்பட்டவுடன், கார் தயாரிப்பு நிறுவனம் இப்போது புதுப்பிக்கப்பட்ட செடானின் வகை வாரியான இயந்திர விவரங்களை வெளியிட்டுள்ளது. எனவே அதைப் பற்றிப் பார்ப்போம்.

முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னா எஸ், எஸ் +, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகிய நான்கு வகைகளில் கிடைக்கும். இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திர விருப்பங்களுக்கு தலா மூன்று வகைகள் மட்டுமே வழங்கப்படும். எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) வகைகளில் பெட்ரோல் வெர்னா வழங்கப்படும் அதுபோல, , டீசல் செடான் எஸ் +, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகியவற்றில் கிடைக்கும். 1.0-லிட்டர் டர்போ அலகு உயர்-சிறப்பம்சம் பொருந்திய எஸ்எக்ஸ் (ஓ) வகைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே ஒரு விரிவான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது:

எஸ்

எஸ்+

எஸ்‌எக்ஸ்

எஸ்‌எக்ஸ்(ஓ)

பெட்ரோல்

1.5 லிட்டர் உடன் 6எம்‌டி

-

1.5 லிட்டர் உடன் 6எம்‌டி அல்லது சி‌வி‌டி

1.5 லிட்டர் உடன் 6எம்‌டி அல்லது சி‌வி‌டி /1.0 லிட்டர் டர்போ உடன் 7-டி‌சி‌டி.

டீசல்

-

1.5 லிட்டர் உடன் 6எம்‌டி

1.5 லிட்டர் உடன் 6எம்‌டி அல்லது 6ஏ‌டி

1.5 லிட்டர் உடன் 6எம்‌டி அல்லது 6ஏ‌டி

வகை விவரங்களுடன், கார் தயாரிப்பு நிறுவனம் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவுக்கான வண்ண தேர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது.

  • ஃபேன்டம் பிளாக்

  • ஃபயரி ரெட்

  • போலார் ஒயிட்

  • டைய்பூன் சில்வர்

  • டைட்டன் க்ரே

  • ஸிடர்ரி நைட்

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் வரக்கூடிய சில வாரங்களில் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 14 லட்சம் வரை இருக்கும். இது வரவிருக்கும் ஐந்தாவது தலைமுறை ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஸ்கோடா ரேபிட், வோக்ஸ்வாகன் வென்டோ மற்றும் டொயோட்டா யாரிஸ் போன்ற கார்களுக்கு தொடர்ந்து போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: இறுதி விலையில் வெர்னா

d
வெளியிட்டவர்

dinesh

  • 61 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹூண்டாய் வெர்னா 2020-2023

Read Full News

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
எலக்ட்ரிக்
Rs.41 - 53 லட்சம்*
Rs.11.53 - 19.13 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை