• English
  • Login / Register

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மீண்டும் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, விரைவில் அறிமுகமாகும்

published on மார்ச் 02, 2020 02:52 pm by sonny for ஹூண்டாய் வெர்னா 2020-2023

  • 38 Views
  • ஒரு கருத்தை எழுதுக

உருவ மறைப்புடன் இருந்தாலும், ரஷ்ய-சிறப்பம்சம் பொருந்திய ஹூண்டாய் செடானைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது 

  • முகப்பு மாற்றப்பட்ட வெர்னா அறிமுகத்திற்கு முன்பு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. 

  • இது சமீபத்தில் வெளியிடப்பட்ட ரஷ்ய-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியை ஒத்த தோற்றத்தை அளிக்கிறது. 

  • புதிய வெர்னாவின் உட்புற முகப்பு பக்கமானது இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட மிகப்பெரிய ஒளிபரப்பு திரையுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

  • இதில் க்ரெட்டாவின் புதிய தலைமுறையிலிருந்து பெறப்பட்ட  1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்கள் உடைய புதிய பி‌எஸ்6 ஆற்றல் இயக்கிகள் இடம்பெறுகிறது. 

  • முகப்பு மாற்றப்பட்ட வெர்னா ஏப்ரல் 2020-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hyundai Verna Facelift Spied Again, Launch Soon

ஹூண்டாய் வெர்னா ஆனது முகப்பு மாற்றத்தையும், புதுப்பிக்கப்பட்ட அளவிலான பி‌எஸ்6 ஆற்றல்  இயக்கிகளையும் பெறுகிறது. வரவிருக்கும் முகப்புமாற்றப்பட்ட மாதிரி தற்போது சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இது பார்ப்பதற்குக் கிட்டத்தட்டச் சமீபத்தில் வெளியான ரஷ்ய-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியைப் போல் தெரிகிறது. 

India-bound Hyundai Verna Facelift Revealed; Launch Soon

சோதனை ஓட்டம் செய்யப்பட்ட மாதிரியானது சோலாரிஸ் என்றழைக்கப்படும் ரஷ்ய-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியில் உள்ள அதே உலோகச்சக்கரங்களையும், வலைப்பின்னலுடைய மோதுகைத் தாங்கியையும் பெற்றுள்ளது. இதன் பின்பக்க முனையும் புதிய சோலாரிஸ் மாதிரியை ஒத்த தோற்றத்தை அளிக்கிறது. சீன-சிறப்பம்சம் பொருந்திய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பற்றி முன்னர் பார்த்ததைப் போலவே, மிகவும் அழகானத் தோற்றத்தை அளிக்கிறது, ஹூண்டாய் மிகவும் நுட்பமான ஃபேஸ்லிஃப்ட்டைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்ததைப் போல் தெரிகிறது. இதன் விளைவாக, வெர்னா அதன் சிறந்த விளிம்புகளில் சிலவற்றை இழக்கும்.

India-bound Hyundai Verna Facelift Revealed; Launch Soon

உட்புறத்தைப் பொறுத்தவரை, புதிய வெர்னாவானது 8.0- அங்குல தொடுதிரை ஒளிபரப்பு காட்சியமைப்பு மற்றும் புதிய காற்றோட்ட அமைப்புகள் உடைய புதுப்பிக்கப்பட்ட முன்புற தளவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐஆர்விஎம்-ல் காணப்படுவதைப் போல, முகப்பு மாற்றப்பட்ட செடான் ஆனது ப்ளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கும். இது தற்போதைய மாதிரியின் அதே திசைதிருப்பி, காலநிலை கட்டுப்பாட்டுத் திரை மற்றும் கருவித்தொகுப்பு ஆகியவற்றைப் பெறும். வெர்னாவானது தொடர்ந்து சூரிய திறப்பு மேற்கூரை, காற்றோட்டமான முன் இருக்கைகள், கம்பியில்லா மின்னூட்ட தளம் மற்றும் ஆறு காற்றுப்பைகள் என அதன் வசதிகளை வழங்கும். 

India-bound Hyundai Verna Facelift Revealed; Launch Soon

புதிய தலைமுறை க்ரெட்டாவுடன் பகிரப்பட்ட புதிய பிஎஸ்6 இயந்திர விருப்பங்களுடன் ஹூண்டாய் நிறுவனம் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவை புதுப்பிக்கும். இருப்பினும், இது 1.5 லிட்டர் பெட்ரோல் (115பி‌எஸ் /114என்‌எம்) மற்றும் டீசல் (115பி‌எஸ்/250என்‌எம்) இயந்திரங்களை மட்டுமே பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் (140பி‌எஸ்/242என்‌எம்) இனி கிடைக்காது. இரண்டுமே பிஎஸ்6 என்ஜின்களும் ஒரு தானியங்கி விருப்பத்தைப் பெறும். தற்போதைய பிஎஸ்4 என்ஜின்கள் - 1.4 லிட்டர் டீசல், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்கள்- ஏப்ரல் 2020 க்குள் நிறுத்தப்படும்.

2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்னர் இருக்கும் மாதிரியின்  நுழைவு-விவரங்களுக்கு இணையாக விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் உயர் வகை மாதிரி விலைமதிப்பற்றதாக இருக்கும். தற்போது, வெர்னாவின் விலை ரூபாய் 8.18 முதல் ரூபாய் 14.08 வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) கிடைக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் மாதிரி  மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி, மாருதி சுசுகி சியாஸ், பிஎஸ்6 ஸ்கோடா ரேபிட் மற்றும் பிஎஸ்6 வோக்ஸ்வாகன் வென்டோ போன்றவற்றுக்குப் போட்டியாக களமிறங்கும்.

மேலும் படிக்க: வெர்னா தானியங்கி 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai வெர்னா 2020-2023

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience