ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது

ஹூண்டாய் வெர்னா க்கு modified on மார்ச் 14, 2020 01:35 pm by rohit

  • 19 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனை நிலையங்களில் ரூபாய் 25,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம்

Hyundai Verna facelift front

  • இந்த செடான் மூன்று பிஎஸ்6 இயந்திரங்களுடன் வழங்கப்படும்.

  • முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் புற வடிவமைப்பு, புதிய உலோக சக்கர வடிவமைப்பு மற்றும் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள் ஆகியவற்றைப் பெறுகிறது.

  • இது கம்பியில்லா மின்னேற்றம், மின்சார சூரிய ஒளித்திறப்பு மேற்கூரை மற்றும் காற்றோட்ட அமைப்புடைய முன் இருக்கைகள் போன்ற சிறப்பம்சங்களைப் பெறும்.

  • இதில் 45 க்கும் அதிகமான இணைக்கப்பட சிறப்பம்சங்களுடன் ப்ளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பமும் இடம்பெறும்.

  • முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னா, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டிக்கு தொடர்ந்து போட்டியாக இருக்கும்.

ஹூண்டாய் சமீபத்தில் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவை காட்சிப்படுத்தியது மேலும் அதில் ஆற்றல் இயக்கி விருப்பங்களை வழங்கியது. இப்போது, இது முகப்பு மாற்றம் செய்யப்பட்ட செடானை முழுவதுமாக காட்சிப்படுத்தியுள்ளது மேலும் முன்பணமாக ரூபாய் 25,000 த்துடன் அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது.

இந்த செடான் மூன்று பிஎஸ் 6-இணக்கமான இயந்திரங்களுடன் வரும்: 1.5 லிட்டர் பெட்ரோல் (115 பிஎஸ் / 144 என்எம்), 1.5 லிட்டர் டீசல் (115 பிஎஸ் / 250 என்எம்), மற்றும் வென்யூவிடமிருந்து 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டார் (120பிஎஸ் / 172என்‌எம்) பெறும். ஹூண்டாய் 1.5 லிட்டர் இயந்திரத்திற்கு 6 வேகக் கைமுறையுடன் தரமாக வழங்கவுள்ளது. உள் எரிபொருள் இயந்திர பெட்ரோல் அலகு சிவிடி உடன் வழங்கப்படும், டீசல் இயந்திரம் ஒரு தானியங்கி முறை பற்சக்கர பெட்டி விருப்பத்தைப் பெறும். 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட மோட்டார், 7-வேக டிசிடி பற்சக்கர பெட்டியை மட்டுமே பெறும்.

Hyundai Verna facelift

ஃபேஸ்லிப்டில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தவரை, வெர்னாவின் முன்புறம் முழுவதுமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கண்களில் தென்படக்கூடிய முதல் விஷயம், குரோம் அடுக்குகளுக்குப் பதிலாகக் கறுப்பு நிற தேன்கூடு வடிவ அமைப்பிலான பெரிய மற்றும் பரந்த முன்பாக பாதுகாப்பு சட்டகம் ஆகும். மேலும், இது இப்போது ஒரு முக்கோண வடிவிலான மூடுபனியில் பிரகாசமாக எரியக்கூடிய அழகான விளக்கில் பொருத்தப்பட்டுள்ள படவீழ்த்தி மூடுபனியில் பிரகாசமாக எரியக்கூடிய விளக்குகளை கொண்டுள்ளது. ஹூண்டாய் எல்இடி முகப்புவிளக்குகளை முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவில் வழங்கவுள்ளது. பக்கவாட்டு அமைப்பைப் பார்க்கும்போது, கவனிக்கத்தக்க ஒரே மாற்றம் புதிய இயந்திர வெட்டு இரட்டை-தொனி உலோக சக்கர வடிவமைப்பு மட்டுமே. முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவின் பின்புறத்தில், எல்இடி ளக்குகள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பின்புற மோதுகைத் தாங்கியின் குரோம் ஆகியவை அழகுபடுத்துகிறது.

ஹூண்டாய் வெர்னாவின் உட்புற அமைவை இன்னும் காட்சிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது சிறப்பம்சம் நிறைந்த தயாரிப்பாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 45 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட சிறப்பம்சங்கள், கம்பியில்லா மின்னேற்றம், காற்றோட்ட அமைப்புடைய முன் இருக்கைகள் மற்றும் சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை ஆகியவற்றுடன் கார் தயாரிப்பு நிறுவனம் அதன் சமீபத்திய ப்ளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்துடன் செடானை வழங்கும். இது தானியங்கி முறையிலான பொருட்கள் வைக்கும் இடத் திறப்பு, பின்புற யூஎஸ்பி மின்னேற்றி மற்றும் ஆர்காமிஸ் ஒலி அமைப்புடன் வரும்.

Hyundai Verna facelift rear

முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவின் விலை ரூபாய் 8 லட்சத்திலிருந்து ரூபாய் 14 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி சியாஸ், 2020 ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ரேபிட், டொயோட்டா யாரிஸ் மற்றும் வோக்ஸ்வாகன் வென்டோ போன்றவற்றுடன் இது தொடர்ந்து போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: இறுதி விலையில் வெர்னா

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் வெர்னா

Read Full News
அதிக சேமிப்பு!
% ! find best deals on used ஹூண்டாய் cars வரை சேமிக்க
பயன்படுத்தப்பட்ட <cityname> இல் <modelname>ஐ காண்க

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

Ex-showroom Price New Delhi

trendingசேடன்-

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி
×
We need your சிட்டி to customize your experience