ஹூண்டாய் வெர்னா 2023 ரூ 10.90 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது ; அதன் போட்டியாளர்களை விடவும் ரூ.40,000 வரை குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
modified on மார்ச் 22, 2023 10:23 am by tarun for ஹூண்டாய் வெர்னா
- 48 Views
- ஒரு கருத்தை எழுதுக
முற்றிலும் புதிதான வடிவமைப்புடன் , பெரிதான பரிமாணங்களுடன், சிறப்பான இன்ஜின்கள் மற்றும் பல அம்சங்களை இந்தக் கார் பெற்றிருக்கிறது!
- புதிய வெர்னாவின் விலை ரூ.10.90 லட்சம் முதல் ரூ.17.38 லட்சம் வரை.
- மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடன் கிடைக்கின்றன.
- இன்டெகிரேட்டட் டூயல் டிஸ்பிளேக்கள், மின்சார சன்ரூஃப், ஹீட்டட் மற்றும் வெண்ட்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறுகிறது.
- பாதுகாப்புக்காக ஆறு ஏர்பேக்குகள், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், TPMS மற்றும் ADAS ஆகியவை இந்த காரில் இருக்கின்றன.
- ஹோண்டா சிட்டி, VW விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளது.
புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா இறுதியாக விற்பனைக்கு வந்துள்ளது! பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இருந்தே கார் தயாரிப்பாளர் ஏற்கனவே இந்த செடானுக்கான 8,000 மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளார், மேலும் வாடிக்கையாளளுக்கு விநியோகம் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த செடான் இப்போது பெட்ரோலில் மட்டுமே கிடைக்கிறது மேலும் ரூ.10.90 லட்சம் முதல் ரூ.17.38 லட்சம் வரையிலான நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது (எக்ஸ்-ஷோரூம், டெல்லி).
வேரியண்ட்கள் மற்றும் விலை
வேரியண்ட்கள் |
1.5 -லிட்டர் MT |
1.5 -லிட்டர் CVT |
1.5 -லிட்டர்-டர்போ-பெட்ரோல் MT |
1.5-லிட்டர்-டர்போ-பெட்ரோல் DCT |
E |
ரூ 10.90 லட்சம் |
N.A. |
N.A. |
N.A. |
S |
ரூ 11.96 லட்சம் |
N.A. |
N.A. |
N.A. |
SX |
ரூ 12.99 லட்சம் |
Rs 14.24 lakh |
ரூ 14.84 லட்சம் |
ரூ 16.08 லட்சம் |
SX (O) |
ரூ 14.66 லட்சம் |
Rs 16.20 லட்சம் |
ரூ 15.99 லட்சம் |
ரூ 17.38 லட்சம் |
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூமுக்கானவை
பெட்ரோல்-மேனுவல் வகைகளை விட CVT வேரியண்ட்கள் ரூ. 1.54 லட்சம் வரை கூடுதலான விலையை பெறுகின்றன, அதே சமயம் DCT ஆனது டர்போ மேனுவலைக் காட்டிலும் ரூ. 1.4 லட்சம் வரை அதிகமாக இருக்கிறது.
பவர்டிரெயின் |
1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.5-லிட்டர்டர்போ-பெட்ரோல் |
பவர் | 115PS |
160PS |
டார்க் |
144Nm |
253Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-MT / CVT |
6-MT / 7-DCT |
எரிபொருள் சிக்கனம் |
18.6 கிமீலி / 19.6 கிமீலி |
20 கிமீலி / 20.6 கிமீலி |
ஐந்தாம் தலைமுறை வெர்னாவில் இருந்த 1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் இன்ஜின் அப்படியே இதிலும் கொடுக்கப்பட்டுளது, ஆனால் டீசல் இன்ஜின் இப்போது நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், 120PS, 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டுக்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 160PS மற்றும் 253Nm -ஐ உற்பத்தி செய்கிறது, இது ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் -ன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோலின் வெளியீட்டை விட 10PS மற்றும் 3Nm அதிகமாகும், இதுவே வெர்னாவை அதன் செக்மென்ட்டில் மிகவும் சக்திவாய்ந்த செடானாக ஆக்குகிறது.
இரண்டு இன்ஜின்களும் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வருகின்றன, பிந்தையது பேடல் ஷிஃப்டர்களுடன் வரும்.
பெரிதான பரிமாணங்கள்
பரிமாணங்கள் |
பழைய வெர்னா |
புதிய வெர்னா |
வித்தியாசம் |
நீளம் |
4,440 மிமீ |
4,535 மிமீ |
+95 மிமீ |
அகலம் |
1729 மிமீ |
1,765 மிமீ |
+36 மிமீ |
உயரம் |
1475 மிமீ |
1,475 மிமீ |
- |
வீல் பேஸ் |
2600 மிமீ |
2,670 மிமீ |
+70 மிமீ |
புதிய வெர்னா அதன் முன்னோடியை விட நீளமாகவும் அகலமாகவும் இருக்கிறது, இருப்பினும் அது அதே உயரத்தைக் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 70 மிமீ அதிகரித்து இப்போது இந்த செக்மென்ட்டில் மிக நீளமானதாக இருக்கிறது. 528 லிட்டர் பூட் ஸ்பேஸுடன், புதிய வெர்னா அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது அதிகபட்ச இடத்தை வழங்குகிறது.
தொழில்நுட்பம் நிறைந்த கேபின்
வெர்னா ஏற்கனவே சிறப்பம்சங்களைக் கூடுதலாகக் கொண்டதாகவே இருப்பதால் இந்த செக்மெண்டில் தனித்து தெரிகிறது. இதன் சில சிறப்பம்சங்கள் இதோ:
- முழு LED விளக்குகள்
- எலக்ட்ரிக் சன்ரூஃப்
- டூயல் ஸ்கிரீன் டிஸ்பிளேஸ் (10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டலைஸ்டு இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்)
- ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
- 8-ஸ்பீக்கர் களைக் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம்
- வயர்லெஸ் சார்ஜர்
- குரூஸ் கண்ட்ரோல்
- பேடில் ஷிஃப்டர்கள்
- ஆம்பியண்ட் லைட்டிங்குகள்
- டச்- எனபிள்டு கிளைமேட் மற்றும் ஆடியோ கன்ட்ரோல் பேனல்
- ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள்
- பவர்டு முன் ஓட்டுனர் இருக்கை
- பின்புற ஏசி வென்ட்கள்
- பின்புற ஜன்னல் திரைச்சீலைகள்
டூயல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேக்கள், போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்களை இந்த செக்மெண்டில் முதலாவதாகக் கொண்டுள்ளதாக இந்த செடான் இருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு
ஹூண்டாய் வெர்னா சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை ஸ்டேண்டர்டாகவே வழங்குகிறது, இதில் பின்வருவன அடங்குகின்றன:
- ஆறு ஏர்பேக்குகள்
- ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள்
- தானியங்கி ஹெட்லேம்ப்கள்
- த்ரீ-பாயிண்ட் சீட் பெல்ட்கள் (அனைத்து பயணிகளுக்கும்)
- பின்புற டீஃபாகர்
ஹை எண்ட் வேரியண்ட்களில் ESC, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. அதனுடன், செடான் அதன் டாப்-எண்ட் டிரிமில் ADAS (மேம்பட்ட டிரைவர்-அசிஸ்ட் அமைப்புகள்) வழங்குகிறது, இதில் பின்வருவன அடங்கும்:
- முன்பக்க மோதல் எச்சரிக்கை மற்றும் தவிர்ப்பு உதவி அமைப்பு
- பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங்
- லேன் கீப் அசிஸ்ட்
- முன்னால் செல்லும் வாகனம் புறப்படுவதை உணர்த்தும் அமைப்பு
- ஹை பீம் அசிஸ்ட்
- பின்புற போக்குவரத்து மோதல் எச்சரிக்கை மற்றும் உதவி அமைப்பு
- அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல்
- லேன் ஃபாலோ அசிஸ்ட்
இருப்பினும், இவற்றையெல்லாம் ஹோண்டா சிட்டி அதன் ஸ்ட்ராங்-ஹைபிரிட் பதிப்பில் 2022 -ல் முதன்முதலில் வழங்கியதால் இதை செக்மெண்ட்-ஃபர்ஸ்ட் அம்சங்களாக எடுத்துக் கொள்ள முடியாது, மேலும் இந்த வசதிகளை இப்போது ஸ்டேண்டர்டு பதிப்பிலும் இவற்றை கொடுக்கிறது.
நிறங்கள்
இந்த புதிய வெர்னா ஏழு நிறங்களில் கிடைக்கிறது, அவற்றின் பெயர்கள்:
- டைட்டன் கிரே
- டெல்லூரியன் பிரொளவுன்
- டைபூன் சில்வர்
- ஃபியரி ரெட்
- அட்லஸ் வொயிட்
- அபிஸ் பிளாக்
- ஸ்டாரி நைட்
வொயிட் மற்றும் ரெட் நிற ஷேட்களை பிளாக் ரூஃப்களுடன் தேர்வு செய்யலாம், ஆனால் டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்கள் டர்போ வேரியண்ட்களுக்கு மட்டுமே பிரத்தியேகமானவையாக இருக்கின்றன.
உத்தரவாதம் மற்றும் பராமரிப்பு
ஹூண்டாய் நிறுவனம் வெர்னாவுக்கு மூன்று ஆண்டுகள் / வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கான நிலையான உத்தரவாதத்தையும், ஐந்து வருட பழுது மற்றும் பராமரிப்பு பேக்கேஜ் மற்றும் ரோட் சைடு அசிஸ்டன்ஸ் உதவியையும் வழங்குகிறது. விரும்பினால் உத்தரவாதத்தை ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க உரிமையாளர்களுக்கு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டில் மிகக் குறைந்த பராமரிப்புச் செலவை வெர்னா கொண்டுள்ளது என்று கார் தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது.
இதையும் படியுங்கள்: ஃபோக்ஸ்வாகன் விர்டஸின் 1.5-லிட்டர் TSI மற்றும் 1.0-லிட்டர் TSI வேரியண்ட்களுக்கு இடையே சர்வீஸ் செலவுகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பதை இங்கே பாருங்கள்
போட்டியாளர்கள்
ஹூண்டாய் வெர்னா, அதன் சமீபத்திய அவதாரத்தில், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் ஆகியவற்றுடன் அதன் போட்டியைத் தொடர்கிறது, அதே நேரத்தில் அவுட்டேட்டட் மாருதி சுஸுகி சியாஸுக்கு பிரீமியம் மாற்றாக தோன்றுகிறது. இந்த விலை வரம்பில், பிரீமியம் காம்பாக்ட் எஸ்யூவிகள் மற்றும் சில நடுத்தர அளவிலான எஸ்யூவிகளில் இருந்து ஒரு காரைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன்களும் உள்ளன.
0 out of 0 found this helpful