புத்தம் புதிய எலன்ட்ராவின் முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டது ஹூண்டாய்: அட்டகாசமான தோற்றம்!
ஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019 க்கு published on aug 20, 2015 09:12 am by அபிஜித்
- 11 பார்வைகள்
- 25 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: ஹூண்டாயின் D- பிரிவை சேர்ந்த நெக்ஸ்-ஜென் எலன்ட்ராவின் முதல் படத்தை (டீஸர்), முதல் முறையாக டிஜிட்டல் உருவத்தில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புமின்றி மௌனம் காக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஆட்டோ ஷோவில் இது குறித்து பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் அறிமுகம் குறித்து கூறுகையில், அது அடுத்த ஆண்டு தான் அறிமுகமாகும் என்பதால், அநேகமாக இந்தியன் ஆட்டோ எஸ்போ 2016ல் அறிமுகம் ஆகலாம் என்று தெரிகிறது.
தற்போது வெளியாகி உள்ள முதல் படத்தில், பக்க பகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், முன்புற முனையின் ஒரு பகுதி மட்டுமே பார்க்க கூடிய நிலையில் உள்ளது. இதன்மூலம் கொரியன் கார் தயாரிப்பு நிபுணரான ஹூண்டாயின் எதிர்கால வடிவமைப்பு எண்ணத்தை புரிந்து கொள்வது எளிதாகிறது. இதன்படி அதன் வெளிப்புற வடிவமைப்பு அடிப்படையில் மாற்றம் செய்து, அதன் ஒப்பீடு திறன்களை உயர்த்தியதாக காட்டி, ஏற்கனவே இருக்கும் ஸ்போர்ட்டி எலன்ட்ராவின் உருவத்தை முற்றிலும் மாற்றி அமைக்கலாம் என்று தெரிகிறது. இந்த காரில் நீளமான பேனட்டில் செல்லும் கேரக்டர் லைன்கள், ஷோல்டர் லைன் மற்றும் கீழ்பக்க லைன் ஆகியவை நேர்த்தியாக மிரட்டும் வகையில் அமைந்துள்ளன. மேலும், முன்புறத்தில் கோபத்துடன் பார்ப்பது போன்ற முன்புற விளக்குகளின் (ஹெட்லேம்ப்) பக்கவாட்டில் இடைவெளியுடன் கூடிய கிரில், பக்க பகுதியில் சித்தரிக்கப்பட்ட டைமண்ட் கட் அலாய் வீல்கள்- கொத்து போன்ற அமைப்பை கொண்ட ரூட் லைனை நோக்கி செல்லுகின்றன.
உட்புறத்தை பொறுத்த வரை, இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இன்னும் பல முதல் படங்கள் (டீஸர்கள்) விரைவில் வெளியாகலாம். இதில் 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சங்கள், டூவல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், வெப்பத்தன்மை / குளிர் தன்மை கொண்ட சீட்கள், அழகான மேற்கூரைகள் ஆகியவற்றை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
என்ஜினை பொறுத்த வரை, வெளிநாட்டு சந்தைகளுக்கு ஹூண்டாய் தரப்பில் 1.6 லிட்டர் 175bhp T-GDi மோட்டார் (பெட்ரோல்) என்ஜினும், இந்திய அம்சங்கள் கொண்ட காரில், தற்போது பயன்பாட்டில் உள்ள என்ஜினே தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016 எலன்ட்ராவின் சேஸ் 53% அதிக உறுதி வாய்ந்த ஸ்டீல் மூலம் செய்யப்பட்டு, இழுவை திறன் 0.27 இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் எலன்ட்ரா உட்படும் பிரிவில், ஒரு சிறந்த ஏரோடைனாமிக் வாகனமாக இது அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- Renew Hyundai Elantra 2015-2019 Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful