சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Hyundai Ioniq 5 இந்தியாவில் விற்பனை எண்ணிக்கையில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது

ஹூண்டாய் லாங்கி 5 க்காக நவ 28, 2023 09:43 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஐயோனிக் 5 இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1,000 -யூனிட் என்ற விற்பனையை எண்ணிக்கையைக் கடந்துள்ளது.

  • 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் ஐயோனிக் 5 -யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

  • இது இந்தியாவில் ஹூண்டாயின் விலையுயர்ந்த EV ஆகும்.

  • இது 72.6 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது, அதன் 217PS இ-மோட்டரில் இருந்து 631 கிமீ தூரத்தை வழங்குகிறது.

  • போர்டில் உள்ள அம்சங்களில் டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்ஸ், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.

  • விலை ரூ.45.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) மற்றும் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட காராக இது உள்ளது.

ஹூண்டாய் ஐயோனிக் 5 ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகவே இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நிறைவு செய்யவுள்ளது. ஜூலை 2023 -ல் 500 யூனிட்களை எட்டிய ஐந்து மாதங்களுக்குள், எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் நமது இந்திய சந்தையில் 1,000-யூனிட் விற்பனையைத் தாண்டியுள்ளதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த EV காரின் ரீகேப் இங்கே:

இதுவரை வெளியானவற்றில் விலை உயர்ந்த ஹூண்டாய் கார்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐயோனிக் 5 அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​இந்தியாவில் விற்கப்படும் ஹூண்டாய் நிறுவனத்தின் விலையுயர்ந்த EV மற்றும் காராக இது மாறியது. டிசம்பர் 2022 -ல் முன்பதிவு தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் 650 -க்கும் மேற்பட்ட ஆர்டர்களை எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் பெற்றது.

இங்கு இது மிகவும் விலையுயர்ந்த ஹூண்டாய் என்றாலும், லோக்கல் அசெம்பிளி அதாவது ஐயோனிக் 5, ரூ. 45.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) பணத்திற்கு ஏற்றது. சூழலை அமைக்க, ஐயோனிக் 5 -ன் நேரடி போட்டியாளரான கியா EV6 RWD ஆனது, முழுமையாக இறக்குமதி செய்யப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட யூனிட்டுகளுக்கு (CBU) விதிக்கப்படும் கூடுதல் வரிகளின் காரணமாக, இங்கு, ரூ.60.95 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் மற்றும் சார்ஜிங் விவரங்கள்

இந்தியா-ஸ்பெக் ஐயோனிக் 5 ஆனது 217 PS மற்றும் 350 Nm உற்பத்தி செய்யும் ஒற்றை மோட்டாருடன் 72.6 kWh பேட்டரி பேக்கை பெறுகிறது. இது ரியர்-வீல் டிரைவ் ட்ரெய்னுடன் (RWD) வருகிறது மற்றும் ARAI-ன் கிளைம்டு 631 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது.

ஹூண்டாய் இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்களை வழங்கியுள்ளது: 21 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை நிரப்பக்கூடிய 150 kW சார்ஜர் . மற்றொன்று ஒரு மணி நேரத்தில் அதே சார்ஜை ஏற்றக்கூடிய 50 kW சார்ஜர்.

இதையும் படிக்கவும்: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள்

இது என்ன அம்சங்களை கொடுக்கிறது?

ஹூண்டாய் ஐயோனி 5 -ல் இரட்டை 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்றொன்று டிரைவர் இன்ஸ்ட்ரூமென்டேஷன்), பவர்டு முன் மற்றும் பின் இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஹூண்டாய் EV ஆனது ஆறு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் பல அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

விலை மற்றும் போட்டியாளர்கள்

ஹூண்டாய் ஐயோனிக் 5 உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்டு ரூ. 45.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் ஒரே நேரடி போட்டியாளர் கியா EV6 ஆக இருக்கிறது. மேலும் இது வால்வோ XC40 ரீசார்ஜ், BMW i4, மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா என்யாக் iV ஆகியவற்றுக்கும் போட்டியாளராக இருக்கும்.

இதையும் படிக்கவும்: ஷோரூம்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் மாற்றம் செய்யும் ஹூண்டாய்.... மேலும் சிறப்பு உபகரணங்களையும் அறிமுகப்படுத்துகிறது

மேலும் படிக்க: ஹூண்டாய் ஐயோனிக் 5 ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Hyundai லாங்கி 5

N
nirpal singh sidhu
Nov 28, 2023, 5:09:51 PM

Very nice car good job

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை