ஹயுண்டாய் நிறுவனம் வரும் பிப்ரவரியில், 4 மீட்டருக்கு குறைவான SUV வாகனத்தை வெளியிடுகிறது.
published on ஜனவரி 11, 2016 04:10 pm by saad
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஒரு புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தும் விஷயத்தில் ஹயுண்டாய் நிறுவனத்தினர் மிகச் சரியாக செயல்படுவதில் கெட்டிக்காரர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கச்சிதமான SUV வாகனங்கள் மீதான மோகம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்பதை ஹயுண்டாய் நன்றாகவே உணர்திருக்கிறது. கார் ஆர்வலர்கள் மத்தியில் நன்மதிப்பையும் செல்வாக்கையும் பெற்றுள்ள இந்த கொரிய நாட்டு கார் தயாரிப்பாளர்கள், மாருதி நிறுவனம் விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் அதே 4 மீட்டருக்கு குறைவான SUV பிரிவில் ஒரு வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிரிவில் இது ஹயுண்டாய் நிறுவனத்தின் முதல் முயற்சியாகும். இந்த முற்றிலும் புதிய SUV எளிட் i20 மற்றும் ஹயுண்டாய் க்ரேடா கார்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் விதமாக இருக்கும் என்றும் தெரிய வருகிறது.
இது மட்டும் அல்ல , 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் SUV/ க்ராஸ்ஓவர் பிரிவு வாகன வரிசையில் , வேறு எந்த கார் தயாரிப்பாளரையும் விட அதிகப்படியான வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி , முற்றிலும் புதிய ஒரு உயரத்திற்கு இந்த பிரிவை ஹயுண்டாய் நிறுவனம் எடுத்து செல்லும் என்று சொல்லப்படுகிறது. அறிமுகமாக உள்ள இந்த கச்சிதமான 4 - மீட்டர் உயரத்திற்கு குறைவான SUV பிரிவைச் சேர்ந்த இந்த வாகனங்கள் எளிட் i20, i20 ஆக்டிவ் மற்றும் க்றேடாவில் உள்ளது போன்ற பிரண்ட் வீல் ட்ரைவ் ( முன்சக்கர - ட்ரைவ் ) அம்சத்துடன் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சொல்லும் போது , இஞ்சின் ஆப்ஷனும் கூட நன்கு சோதிக்கப்பட்டு , புழக்கத்தில் உள்ள அதே 1.4 லிட்டர் மற்றும் 1.6 மோட்டார் தான் இந்த புதிய வாகனத்திலும் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அறிமுகமான பின் , போர்ட் ஈகோஸ்போர்ட், மஹிந்திரா TUV 300 மற்றும் விரைவில் அறிமுகமாக உள்ள மாருதி நிறுவனத்தின் விடாரா ப்ரீஸா ஆகிய வாகனங்களுடன் போட்டியிடும்.
நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி இந்த காம்பேக்ட் SUV வாகனங்களின் ஆரம்ப விலை INR 7 லட்சம்-7.5 லட்சங்களாக இருக்கும் என்று தெரிய வருகிறது. அறிமுகத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி மாதம் நடை பெற உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஒரு புறம் செய்திகள் கசிந்தாலும் , ஆட்டோ எக்ஸ்போ முடிந்த பின்னரே இந்த காம்பேக்ட் SUVயின் அறிமுகம் இருக்கும் என்று இன்னொரு செய்தி தெரிவிக்கிறது. அடுத்த மாதம் நடக்க உள்ள ஆட்டோ ஷோவில் ஹயுண்டாய் தனது டக்ஸன் SUV வாகனங்களை அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. அதனுடன் இணைந்து இந்த புதிய வாகனமும் அரங்கேற்றம் செய்யப்படலாம் என்றும் சில யூகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க