• English
  • Login / Register

ஹூண்டாய் க்ரேடாவிற்கான மாருதியின் பதில்: விட்டாரா?

published on நவ 24, 2015 05:17 pm by raunak for மாருதி கிராண்டு விட்டாரா

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில் வேவுப் பார்க்கப்பட்ட விட்டாரா கார், அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிறகு நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியாவில் தனது பொது அறிமுகத்தை பெற உள்ளது.

ஜெய்ப்பூர்: ஒரு காரின் அறிமுகத்தின் போதே, அது சலித்துப் போன தோற்றத்தை கொண்டதாக தோன்றும் சந்தையில் நீங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் S-கிராஸை எழுத்துப்பூர்வமாக க்ரேடா பின்னுக்கு தள்ளியுள்ளது. ஒவ்வொரு மாத விற்பனை ஒப்பீட்டிலும், இவ்விரண்டில் முதலில் அறிமுகமான கார், மற்றதை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு யூனிட் விற்பனை ஆகிறது. ஒரு சக்திவாய்ந்த என்ஜினை கொண்டிருந்தாலும், வாடிக்கையாளர்களை S-கிராஸ் அவ்வளவாக கவரவில்லை. எனவே அதற்கான பதிலாக தற்போது மாருதியின் தரப்பில் உள்ள தயாரிப்பிற்கு விட்டாரா என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஏனெனில் இது ஐரோப்பிய சந்தையில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. விட்டாரா இந்தியாவிற்கு வரும் நிலையில், ஐரோப்பாவிற்கு க்ரேடா செல்கிறது. தற்போது அந்நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் கிராண்ட் விட்டாரா, உள்ளூரில் தயாரிக்கப்படாத காரணத்தால் அவ்வாகனத்தின் விலை ரூ.20 லட்சத்திற்கும் மேலான வாகன பட்டியலில் அமைந்து, மிக அதிக விலை கொண்டதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விட்டாரா காரை உள்ளூரில் அதிகளவில் விற்பனை செய்யும் வகையில், ஹூண்டாய் க்ரேடாவின் விலையோடு இது ஒத்துப் போவதாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் இந்த காரின் விற்பனை, பிரிமியம் நெக்ஸா டீலர்ஷிப்களில் நடைபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஹூண்டாய் க்ரேடாவை எதிர்த்து போட்டியிடும் வகையில் விட்டாரா காரில் அம்சங்கள் முதல் மோட்டார்கள் வரையில் உள்ள எல்லா நற்பண்புகளை கொண்டுள்ளதால், மாருதி இப்படி விலை நிர்ணயித்துள்ளது ஒரு சரியான முடிவாகவே தெரிகிறது. ஃபியட்டின் 1.6-லிட்டர் மல்டிஜெட் என்று அறியப்படும் DDiS320 என்ஜினை கொண்டுள்ள S-கிராஸ் - 120 PS/320 Nm வெளியீடை அளித்து, 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனைப் பெற்றுள்ளது. விட்டாரா காரில் இந்த பிரிவிலேயே சிறப்பான முடுக்குவிசையான 320 Nm-யை கொண்டுள்ள நிலையில், இதை S-கிராஸில் காண முடிவதில்லை. க்ரேடா, S-கிராஸ் மற்றும் விட்டாரா ஆகிய மூன்றையும் பார்த்தால், இதில் விட்டாராவும், க்ரேடாவும் மட்டுமே பார்வைக்கு ஒரு SUV-வை போல தோற்றம் அளிக்கிறது. அதனாலேயே அவை இப்போது விற்பனையும் ஆகிறது.

மேலும், அந்நிறுவனத்தின் மூலம் விட்டாராவில், ஆல்கிரிப் AWD டெக்னாலஜி அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதை S-கிராஸில் அளிப்பதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கலாம். ஏனெனில் விட்டாராவை சர்வதேச அளவில் கிடைக்க செய்ய உள்ளதால், அதற்காக அதை ஒருவேளை நிறுத்தி வைத்திருக்கலாம். மேலும் டஸ்டரை தவிர, இந்த பிரிவில் வேறு எந்த வாகனத்திலும் இந்த AWD அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பெலினோவில் அறிமுகம் செய்யப்பட்ட 7-இன்ச் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் ஆப்பிள் கார்பிளே அமைப்பை கொண்டுள்ளது.


இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதிக்கு என்று ஒரு அலங்காரமான தயாரிப்பு எப்போதும் இருக்கும். இதனாலேயே எக்ஸ்போவில் இந்த வாகன தயாரிப்பாளருக்கு, எப்போதும் பெரிய கூடாரங்களில் ஒன்று ஒதுக்கப்படுவது வழக்கம். தற்போது நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள யூனிட்கள், அநேகமாக பிப்ரவரியில் நடைபெற உள்ள இந்த ஷோவில் காட்சிக்கு வைப்பதற்காக இருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த முறை இந்நிறுவனத்தின் கூடாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட சியஸ் மற்றும் S-கிராஸ் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. அதன் அறிமுகம் குறித்து கூறுகையில், க்ரேடாவின் பிரபலத்தை வைத்து பார்த்தால், அதை முடிந்த வரை விரைவில் அறிமுகம் செய்யும் முயற்சிகளை மாருதி நிறுவனம் மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti கிராண்டு விட்டாரா

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience