ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் vs மாருதி ஸ்விஃப்ட் vs ஃபோர்டு ஃபிகோ vs கிராண்ட் i 10: விவரக்குறிப்புகள் ஒப்பீடு
published on செப் 03, 2019 02:46 pm by sonny for ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் 2019-2023
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய நியோஸ் அளவு மற்றும் செயல்திறன் அடிப்படையில் எந்த நிலையில் உள்ளது?
புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ரூ .5 லட்சம் முதல் ரூ .7.99 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம், இந்தியா) விலை வரம்புடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஹூண்டாயின் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக்கின் மூன்றாம் தலைமுறை பதிப்பாகும் மற்றும் இது புதிய வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன் பிரிவு போட்டியாளர்களுடன் புதிய கிராண்ட் i 10 நியோஸின் ஒப்பீட்டை இங்கே பார்க்கலாம்:
பரிமாணங்கள்
அளவீடுகள் |
நியோஸ் |
ஸ்விப்ட் |
ஃபிகோ |
கிராண்ட் i10 |
நீளம் |
3805mm |
3840mm |
3941mm |
3765mm |
அகலம் |
1680mm |
1735mm |
1704mm |
1660mm |
உயரம் |
1520mm |
1530mm |
1525mm |
1520mm |
சக்கர அச்சிடை நீளம் (Wheelbase) |
2450mm |
2450mm |
2490mm |
2425mm |
தரையிளக்கம் (Ground clearance) |
1163mm |
1174mm |
1165mm |
|
டயர்கள் |
1165/70(R14)/ 1175/60(R15) |
1165/80(R14)/ 1185/65(R15) |
1175/65(R14)/ 1195/55(R15) |
1165/65(R14) |
பூட் ஸ்பேஸ் |
2260 லிட்டர்கள் |
2268 லிட்டர்கள் |
2 257 லிட்டர்கள் |
2256 லிட்டர்கள் |
இரண்டாம் தலைமுறை கிராண்ட் i10 ன் உயரத்தைத் தவிர மற்ற எல்லா அம்சங்களிலும் மூன்றாம் தலைமுறை கிராண்ட் i10 நியோஸ் சிறப்பாகவே உள்ளது . போட்டி கார்களை விட இது குள்ளமாக இருந்தாலும் சக்கர அச்சிடை நீளம் (Wheelbase) ஸ்விப்ட்டின் நீளத்தை போலவே உள்ளது. ஃபிகோ தான் இந்த பட்டியலில் மிகவும் நீளமானது மற்றும் நீளமான சக்கர அச்சிடை நீளத்தையும் பெற்றுள்ளது.இருப்பினும் இது சரக்குகள் வைக்க குறைந்த இடத்தையே கொண்டுள்ளது. ஆனால் ஸ்விப்ட் அதிகமான சரக்குகளுக்கான இடத்தைக் கொண்டுள்ள உயரமான , அகலமான ஒரு வண்டியாகும்.
எஞ்சின்கள்
ஹூண்டாய் புதிய கிராண்ட் i10 நியோஸை 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் வழங்குகிறது, இவை இரண்டும் 5-வேக மேனுவல் அல்லது 5 வேக தானியங்கு என்ற இரண்டு தெரிவுகளுடன் கிடைக்கின்றது. பெட்ரோல் எஞ்சின் ஏற்கனவே BS6 விதிமுறைகளுக்குட்பட்டு உள்ளது, அதே நேரத்தில் 1.2 லிட்டர் டீசல் அலகு பிற்காலத்தில் புதுப்பிக்கப்படும். கிராண்ட் i10 நியோஸின் பவர் ட்ரெயின்கள் அதன் போட்டியாளர்களுடன் எப்படி ஒப்பிடப்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
பெட்ரோல்
- |
கிராண்ட் i10 நியோஸ் |
மாருதி ஸ்விப்ட் |
ஃபோர்டு ஃபிகோ |
கிராண்ட் i10 |
எஞ்சின் |
1197cc |
1197cc |
1194cc/ 1497cc |
1197cc |
ஆற்றல் |
883PS |
883PS |
996PS/ 123PS |
883PS |
முறுக்கு விசை |
113Nm |
113Nm |
120Nm/ 150Nm |
114Nm |
விசைஊடிணைப்பு (Transmission) |
5MT / 5AMT |
5MT / 5AMT |
5MT / 6AT |
5MT / 4AT |
காலி எடை (Kerb weight) |
- |
885-855kg |
1016-1026 கிலோ / 1078 கிலோ |
- |
நிறுவனம் சொல்லும் எரிபொருள் திறன் (Claimed FE) |
20.7kmpl / 20.5kmpl |
21.21 kmpl |
20.4 kmpl/ 16.3 kmpl |
19.4 kmpl/ 17.5 kmpl |
உமிழ்வு வகை (Emission type) |
BS6 |
BS6 |
BS4 |
BS4 |
போர்ட் பிகோவின் பெட்ரோல் பவர் ட்ரெயின்கள் தான் இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் வேகமானவை. 6-வேக முறுக்கு மாற்றி தானியங்கு வசதியுடன் கிடைக்கும் ஒரே காரும் இது தான். இதற்கிடையில், நியோஸ் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் என்ஜின்கள் செயல்திறனைப் பொறுத்தவரை சமமாக உள்ளது, இவை இரண்டுமே BS6 விதிமுறைகளுட்பட்டவை.
இதையும் படியுங்கள்: ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் vs மாருதி சுசுகி ஸ்விப்ட் vs போர்ட் பிகோ: விலைகள் என்ன சொல்கின்றன?
இருப்பினும்,இப்பட்டியலில் ஸ்விப்ட் சிறந்த எரிபொருள் திறன் கொண்ட மாடலாகும் மற்றும் மிகப்பெரிய எஞ்சின் கொள்திறன் கொண்ட பிகோ ஆட்டோமேட்டிக் இப்பட்டியலில் விலை மலிவான தேர்வாகும். நியோஸ் , பெட்ரோல் ஃபிகோவை விட சற்று கூடுதல் எரிபொருள் திறன் வாய்ந்தது.
டீசல்
- |
கிராண்ட் i10 நியோஸ் |
மாருதி ஸ்விப்ட் |
போர்ட் ஃபிகோ |
கிராண்ட் i10 |
எஞ்சின் |
1186cc |
1248cc |
1498cc |
1186cc |
ஆற்றல் |
75PS |
75PS |
100PS |
75PS |
முறுக்கு விசை |
190Nm |
190Nm |
215Nm |
190Nm |
விசை ஊடிணைப்பு (Transmission) |
5MT/5AMT |
5MT/5AMT |
5MT |
5MT |
காலி எடை (Kerb weight) |
- |
955-990kg |
1046-1057kg |
- |
நிறுவனம் சொல்லும் எரிபொருள் திறன் (Claimed FE) |
26.2kmpl |
28.40 kmpl |
25.5 kmpl |
24.8 kmpl |
உமிழ்வு வகை (Emission type) |
BS4 |
BS4 |
BS4 |
BS4 |
கிராண்ட் i10 நியோஸின் டீசல் எஞ்சின் அதன் செயல்திறனுக்காக மீண்டும் ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடப்படுகிறது. போர்டின் ஹேட்ச்பேக் வகை தான் இந்த பட்டியலில் மிகப்பெரிய டீசல் எஞ்சினுடன் அதிக செயல்திறனை வழங்குகிறது. மாருதி டீசல் மிகவும் எரிபொருள் திறனுள்ள தேர்வாகும், அதே நேரத்தில் பிகோ குறைந்த எரிபொருள் செயல்திறன் கொண்டது. எல்லா ஹேட்ச்பேக்குகளும் 24 KMPLக்கு மேல் சான்றளிக்கப்பட்ட எரிபொருள் செயல்திறனை வழங்குகின்றன.
மேலும் படிக்க: கிராண்ட் i10 நியோஸ் AMT
0 out of 0 found this helpful