ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் vs மாருதி சுசுகி ஸ்விஃப்ட் vs ஃபோர்டு ஃபிகோ: விலைகள் என்ன சொல்கின்றன?
ஹூண்டாய் கிராண்டு ஐ10 க்காக ஆகஸ்ட் 30, 2019 11:56 am அன்று dhruv ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 63 Views
- ஒரு கருத்தை எழுதுக
கிராண்ட் i10 நியோஸ் அதன் போட்டி வாகனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையை கொண்டுள்ளது மற்றும் தானியங்கு வசதியுடன் (Automatic transmission) பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் கிடைக்கும்.
ஹூண்டாய் இந்தியாவில் i10 வரிசையில் மூன்றாம் தலைமுறை வாகனமாக கிராண்ட் i10 நியோஸை அறிமுகப்படுத்தியுள்ளது .இது ஏராளமான பெட்ரோல் வகைகள் மற்றும் மூன்று டீசல் வகைகளில் கிடைக்கிறது. இந்த இரண்டு என்ஜின்களும் தானியங்கு (AMT) விருப்பத்தேர்வுடன் வருகின்றன. எனவே இந்த காரின் வகைகள் அதன் போட்டி வாகனங்களுடன் எவ்வாறு மோதும் என்பதை கீழே பார்க்கலாம்.
-
கிராண்ட் i10ன் அடிப்படை வகை காரின் விலை மற்ற கார் தயாரிப்பாளர்களுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
அனைத்து கார்களிலும் தானியங்கு (AMT) வசதியுடன் கூடிய வகை கிடைக்கின்றது, ஆனால் கிராண்ட் i10 நியோஸ் மிகக்குறைந்த விலையில் தானியங்கு வசதியை வழங்குகிறது.
-
ஃபிகோ-வில் ஒரே ஒரு தானியங்கி வகை கார் கிடைக்கிறது, எனவே தெரிவுகள் குறைவாக இருக்கின்றன.
-
இங்குள்ள மற்ற இரண்டு AMT வகை கார்களுடன் ஒப்பிடும்போது ஃபிகோ கார் மட்டுமே வழக்கமான தானியங்கி - 6-வேக முறுக்குவிசை மாற்றி (6- speed Torque converter) வசதியினை வழங்குகின்றது.
-
கிராண்ட் i10 நியோஸை இரண்டு வகைகளில் தானியங்கு வசதியுடன் வாங்க முடியும்.
-
ஸ்விஃப்ட் காரில் மூன்று வகைகளை தானியங்கு வசதியுடன் வாங்கலாம், இது புதிதாக கார் வாங்குபவர்களுக்கு அவர்கள் விருப்பப்படும் வகையினை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.
-
கிராண்ட் i10இன் உச்ச வசதி வகை தான் இருப்பதிலேயே விலை குறைவானது கிட்டதட்ட ரூ.8 லட்சமாக (Ex-showroom) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஃபோர்டு ஃபிகோ மற்றும் இறுதியாக மாருதி ஸ்விஃப்ட் ஆகியவை வருகின்றன.
-
இந்த பட்டியலில் தானியங்கு வசதியை முழுமையாக வழங்கும் கார் ஸ்விஃப்ட் மட்டுமே.
டீசல்
-
டீசல் கார்களில், ஃபிகோவின் அடிப்படை மாடல் கார் தான் விலை குறைவானது. அது சுமார் ரூ.6 லட்சம் (Ex-showroom) முதல் தொடங்குகிறது
-
பெட்ரோல் வகை போலன்றி, கிராண்ட் i10ல் இரண்டு மேனுவல் வகைகளும் தனித்தன்மையான தானியங்கு (AMT) வகையும் கிடைக்கின்றன.
-
ஃபிகோ டீசல், தானியங்கு வசதியுடன் கிடைப்பதில்லை , மேலும் இதன் உச்சபட்ச விலை ரூ .7.54 லட்சம். இதன்மூலம் இங்கு குறிப்பிட்டுள்ள மூன்று கார்களில் குறைந்த விலையில் உச்ச வசதி வகையை வழங்குவது ஃபிகோ தான்.
-
கிராண்ட் i10 நியோஸ் ஒரேயொரு வகையில் தானியங்கு வசதியை வழங்குகிறது, அதே நேரத்தில் ஸ்விஃப்ட் மூன்று வகைகளில் தானியங்கு வசதியை வழங்குகிறது, இதனால் அவரவர் பணநிலைக்கு தக்கபடி அதிக வாடிக்கையாளர்கள் தானியங்கு வசதி காரை வாங்கும் வாய்ப்பை ஸ்விப்ட் வழங்குகிறது.
-
பெட்ரோல் காரைப் போலவே, ஸ்விஃப்ட் விலை உயர்ந்த டீசல் வகை காரை விற்பனை செய்கிறது, அதன் உச்ச வசதி வகையின் அதிக பட்ச விலை கிட்டத்தட்ட ரூ.9 லட்சம் (Ex-showroom).
இதையும் படியுங்கள்: ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ரூ .4.99 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இது மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோவை விட விலை குறைவானது.
மேலும் படிக்க: கிராண்ட் i10 டீசல்