டக்ஸான், க்ரெட்டா போன்ற தயாரிப்புகளுக்கு ஹூண்டாய் இந்த ஜனவரியில் 2.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது

ஹூண்டாய் டுக்ஸன் 2016-2020 க்கு published on ஜனவரி 17, 2020 03:41 pm by rohit

 • 48 பார்வைகள்
 • ஒரு கருத்தை எழுதுக

கோனா எலக்ட்ரிக், வெனியூ மற்றும் எலண்ட்ரா போன்ற முகப்பு மாற்றம் செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கான சலுகைகள் தொடர்ந்து பட்டியலிலிருந்து வெளிவிடப்படுகின்றன

Hyundai Offering Discounts Of Up To Rs 2.5 Lakh On The Tucson, Creta, And Others This January

ஹூண்டாய் தனது பல மாதிரி வகை கார்களுக்கான பல்வேறு சேமிப்புகள் மற்றும் சலுகைகளை தற்போது வழங்குகிறது. இந்த சலுகைகள் 2020 ஜனவரி மாதம் இறுதி வரை மட்டுமே இருக்கும். ஒவ்வொரு மாதிரி வகைக்காகச் சலுகைகளைச் சுருக்கமாக இங்குக் காண்போம்:

ஹூண்டாய் சான்ட்ரோ

Hyundai Santro

 

சலுகைகள்

சான்ட்ரோ (2019 மாதிரி)

சான்ட்ரோ (2020 மாதிரி)

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 30,000

ரூபாய் 20,000

பரிமாற்றம் செய்வதற்கான சலுகை

ரூபாய் 20,000

ரூபாய் 20,000

நிறுவனம் அளிக்கும் தள்ளுபடி

ரூபாய் 5,000

ரூபாய் 5,000

மொத்த சலுகைகள்

55,000 ரூபாய் வரை

45,000 ரூபாய் வரை

 • ஹூண்டாய் 3-வருட/எல்லையில்லா கிமீ நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் 3-வருடச் சாலையோர உதவி அமைப்புடன் (ஆர்‌எஸ்‌ஏ) மேலே கூறிய சலுகையையும் சேர்த்து சான்ட்ரோவை வழங்குகிறது.  

 • சான்ட்ரோவின் அனைத்து வித பெட்ரோல் வகைகளுக்கும் இந்த சலுகைகள் செல்லுபடியாகக் கூடியது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

Hyundai Grand i10

சலுகைகள்

கிராண்ட் ஐ10 (2019 மாதிரி)

கிராண்ட் ஐ10 (2020 மாதிரி)

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 40,000

ரூபாய் 25,000

பரிமாற்றம் செய்வதற்கான சலுகை

ரூபாய் 30,000

ரூபாய் 20,000

நிறுவனம் அளிக்கும் தள்ளுபடி

ரூபாய் 5,000

ரூபாய் 5,000

மொத்த சலுகைகள்

75,000 ரூபாய் வரை

ரூபாய் 50,000

 • சான்ட்ரோவை போல், கிராண்ட் ஐ10க்கும் 3-வருட/எல்லையில்லா கிமீ நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் ஆர்‌எஸ்‌ஏ சேவை வழங்கப்படுகிறது.

 • ஹூண்டாய் ஆனது கிராண்ட் ஐ10-ன் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளுக்கும் இந்த சலுகைகளை வழங்குகிறது. 

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்

Hyundai Grand i10 Nios

சலுகைகள்

கிராண்ட் ஐ10 நியாஸ் (2019 மாதிரி)

கிராண்ட் ஐ10 நியாஸ் (2020 மாதிரி)

நுகர்வோருக்கானச் சலுகை

30,000 ரூபாய் வரை

30,000 ரூபாய் வரை

பரிமாற்றம் செய்வதற்கான சலுகை

ரூபாய் 10,000

ரூபாய் 10,000

மொத்த சலுகைகள்

40,000 ரூபாய் வரை

40,000 ரூபாய் வரை

 • கிராண்ட் ஐ 10 நியாஸ்-ன் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளுக்கும் இந்த சலுகைகள் செல்லுபடியாகக் கூடியது. 

 • இது பிற ஹூண்டாய் மாதிரிகளுக்கு வழங்கப்பட்டதை போலவே 3-வருட ஆர்‌எஸ்‌ஏ சேவையுடன் சேர்த்து 3-வருட/எல்லையில்லா கிமீ நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் வழங்குகிறது.  

ஹூண்டாய் எலைட் ஐ20

Hyundai Elite i20


வகைகள்

நுகர்வோருக்கான சலுகை

பரிமாற்றம் செய்வதற்கான சலுகை

நிறுவனம் அளிக்கும் தள்ளுபடி

எலைட் ஐ20 எரா & மேக்னா+ (2019 மாதிரி)

ரூபாய் 10,000

ரூபாய் 20,000

ரூபாய் 5,000

எலைட் ஐ20 ஸ்போர்ட்ஸ்+ & அதிகமாக (2019 மாதிரி)

ரூபாய் 40,000

ரூபாய் 20,000

ரூபாய் 5,000

எலைட் ஐ20 எரா & மேக்னா+ (2020 மாதிரி) 

ரூபாய் 10,000

ரூபாய் 20,000

ரூபாய் 5,000

எலைட் ஐ20 ஸ்போர்ட்ஸ்+ & அதிகமாக (2020 மாதிரி)

ரூபாய் 20,000

ரூபாய் 20,000

ரூபாய் 5,000

 • ஹூண்டாய் ஆனது ரூபாய் 65,000 வரையிலான மொத்த சலுகைகளுடன் எலைட் ஐ20 யினை வழங்குகிறது. 

 • இந்த சலுகைகள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளுக்கும் செல்லுபடியாகக் கூடியது. 

 • மேலும், 3-வருட ஆர்‌எஸ்‌ஏ சேவையுடன் சேர்த்து 3-வருட/எல்லையில்லா கிமீ நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் நீங்கள் பெறலாம்.

 • மேலும், ஹூண்டாய் 2020 ஆம் ஆண்டு மத்தியில் எலைட் ஐ20 இன் மூன்றாவது-தலைமுறையை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

Hyundai Xcent

 

சலுகைகள்

பெட்ரோல் எஸ் மற்றும் பெட்ரோல் எஸ்‌எக்ஸ் தவிர எக்ஸ்சென்டின் அனைத்து வகைகளுக்கும்

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 60,000

பரிமாற்றம் செய்வதற்கான சலுகை

ரூபாய் 30,000

நிறுவனம் அளிக்கும் தள்ளுபடி

ரூபாய் 5,000

மொத்த சலுகைகள்

95,000 ரூபாய் வரை

 • ஹூண்டாய் ஆனது எக்ஸ்சென்டின் பெட்ரோல் எஸ் வகை தயாரிப்பை ரூபாய் 5.39 லட்சத்திற்கும், பெட்ரோல் எஸ்‌எக்ஸ் வகை தயாரிப்பை ரூபாய் 5.99 லட்சத்திற்கும் வழங்குகிறது (டெல்லி விற்பனை கடை).

 • ஹூண்டாயின் பிற கார்களை போலவே, எக்ஸ்சென்ட் 3-வருட உத்தரவாத தொகுப்புடன் ஆர்‌எஸ்‌ஏ சேவையையும் வழங்குகிறது.

 • இந்த சலுகைகள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளுக்கும் செல்லுபடியாகக் கூடியது. 

 • அதே சமயம், ஹூண்டாய் ஜனவரி 21-இல் ஆராவை அறிமுகப்படுத்தும். இது வெனியூ வகையிலிருந்து 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் அமைப்பை சேர்த்து மூன்று பி‌எஸ்6-பெட்ரோல் இயந்திரங்களுடன் வழங்கப்படும்.  

ஹூண்டாய் க்ரெட்டா

Hyundai Creta

 

சலுகைகள்

க்ரெட்டா 1.6 வகைகள் மட்டும் (2019 மாதிரி)

க்ரெட்டா 1.6 வகைகள் மட்டும் (2020 மாதிரி)

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 75,000

ரூபாய் 60,000

பரிமாற்றம் செய்வதற்கான சலுகை

ரூபாய் 30,000

ரூபாய் 30,000

நிறுவனம் அளிக்கும் தள்ளுபடி

ரூபாய் 10,000

ரூபாய் 10,000

மொத்த சலுகைகள்

ரூபாய் 1.15 லட்சம் வரை 

ரூபாய் 1 லட்சம் வரை

 • க்ரெட்டாவின் இரண்டாவது-தலைமுறை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, மேலும் ஹூண்டாய் ஆனது இதன் தற்போதைய-தலைமுறையை ரூபாய் 1.15 லட்சம் வரையிலான சலுகைகளுடன் வழங்குகிறது.  

 • ஹூண்டாயின் பொருத்தமான எஸ்‌யு‌வி தயாரிப்பின் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளுக்கும் 3-வருட/எல்லையில்லா கிமீ நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் ஆர்‌எஸ்‌ஏ சேவையுடன் சேர்த்து அதே சலுகைகளுடன் வருகிறது.

ஹூண்டாய் வெர்னா

Hyundai Verna

 

சலுகைகள்

வெர்னா (2019 மாதிரி)

வெர்னா (2020 மாதிரி)

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 20,000

ரூபாய் 10,000

பரிமாற்றம் செய்வதற்கான சலுகை

ரூபாய் 30,000

ரூபாய் 30,000

நிறுவனம் அளிக்கும் தள்ளுபடி

ரூபாய் 10,000

ரூபாய் 10,000

மொத்த சலுகைகள்

60,000 ரூபாய் வரை

50,000 ரூபாய் வரை

 • ஹூண்டாய் வாகனம் ரூபாய் 60,000 வரை மொத்த சேமிப்புகளுடன் வழங்கப்படுகிறது. 

 • இந்த சலுகைகள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளுக்கும் செல்லுபடியாகக் கூடியது. 

 • மேலும் இது 3-வருட/எல்லையில்லா கிமீ நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் 3-வருட ஆர்‌எஸ்‌ஏ சேவையையும் வழங்குகிறது.

 • ஹூண்டாய் ஆனது முகப்பு மாற்றப்பட்ட வெர்னா தயாரிப்பை 2020 ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஹூண்டாய் டஸ்கான்

Hyundai Tucson

 

சலுகைகள்

டஸ்கான் (2019 மாதிரி)

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 1.25 லட்சம்

பரிமாற்றம் செய்வதற்கான சலுகை

ரூபாய் 75,000

நிறுவனம் அளிக்கும் தள்ளுபடி

ரூபாய் 50,000

 •  டஸ்கான்-இன் விலை ரூபாய் 18.76 லட்சத்திலிருந்து துவங்குகிறது, இது தற்போது ரூபாய் 2.5 லட்சம் மொத்த சலுகைகளுடன் வருகிறது.

 • இந்த சலுகைகள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளுக்கும் செல்லுபடியாகக் கூடியது. 

 • தூக்கக்கூடிய பின்புற கதவுகள் உடைய ஹூண்டாயின் எஸ்‌யு‌வி தயாரிப்புகளுக்கு 3-வருட ஆர்‌எஸ்‌ஏ சேவையையும், 3-வருட/எல்லையில்லா கிமீ நீட்டிக்கப்பட்ட உத்தரவாத தொகுப்பையும் பெறலாம். 

மேலும் படிக்க : டஸ்கான் தானியங்கி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் டுக்ஸன் 2016-2020

Read Full News
 • ஹூண்டாய் சாண்ட்ரோ
 • ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்
 • ஹூண்டாய் க்ரிட்டா
 • ஹூண்டாய் வெர்னா
 • ஹூண்டாய் டுக்ஸன்

trendingஇவிடே எஸ்யூவி

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience