ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: படங்கள்: உட்புறம், சிறப்பு அம்சங்கள் மற்றும் பிற
published on செப் 05, 2019 03:17 pm by sonny for ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் 2019-2023
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாயின் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக்கின் சமீபத்திய தலைமுறையைப் பற்றி விரிவாகப் பாருங்கள்
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் மிட்-சைஸ் ஹேட்ச்பேக் இந்தியாவில், ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பின் அடிப்படையில் இது முந்தைய மாடலைக் காட்டிலும் ஏராளமான மாற்றங்களைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக முன்பை விட ஸ்போர்ட்டியாகத் தோற்றமளிக்கிறது. இனி கிராண்ட் ஐ 10 நியோஸைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்
வெளிப்புறத் தோற்றம்
புதிய முன்புறத்தோற்றம், ஹூண்டாயின் அலை அடுக்கு கிரில்லின் சமீபத்திய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்தமாக மேலும் ஸ்போர்ட்டியான தோற்றம் ஏற்படுத்துவதுடன் அதிகரிக்கப்பட்ட அகலத்தையும் மறைமுகமாக எடுத்துக்காட்டுகிறது. புதிய நியோஸ், 1680 மிமீ அகலத்துடன், அதாவது முன்பிருந்த கிராண்ட் ஐ 10 ஹேட்ச்பேக்கை விட 20 மிமீ கூடுதலான அகலத்துடன் உள்ளது.
புதிய ப்ரொஜெக்டர் ஃபாக் லைட்ஸ், காற்றுத் திரைகளுக்குக் கீழே ஒரு ஸ்போர்ட்டி ஏர் வென்ட் போலக் காட்சியளிக்கும் பகுதிக்கு மேற்புறத்தில் இருக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. கிராண்ட் ஐ 10 நியோஸ் வகைக் கார்களில் ப்ரொஜெக்டர் ஃபாக் லைட்ஸ் கொண்ட ஒரே கார் இதுவே ஆகும்.
புதிய பூமராங் வடிவ எல்.ஈ.டி டி.ஆர்.எல்களை கிரில் வடிவமைப்பு ஓருங்கிணைக்கிறது. பளபளப்பான கருப்பு வண்ணத்தில் கிரில் உள்ளது. விருப்பத் தேர்விற்கு பெரும்பாலான வண்ணங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் வெள்ளை அல்லது வெள்ளி வண்ணத்தைத் தேர்வுசெய்தால், கிரில் மற்றும் கிரில் சுற்றுப்புறம் ஆகியவை வெள்ளி வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன.
புதிய பின்புற விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ள வடிவமைப்பு, அதன் உடன் இணைந்த பளிச்சென்ற பின்கதவு வரி இவை காரணமாகப் பின்புறத் தோற்றத்திலும் நியோஸ் அதன் முந்தைய கார்களை விட ஸ்போர்ட்டி ஆகக் காட்சியளிக்கிறது. நியோஸும் முந்தைய கிராண்ட் ஐ 10 ஐப்போலவே 1520 மிமீ உயரம் கொண்டது.
வென்யூ போல, ஹூண்டாய் பேட்ஜின் கீழ் மத்தியில் ‘நியோஸ்’ எழுத்துக்களும், மேல் இடதுபுறத்தில் கிராண்ட் ஐ 10 பேட்ஜும் உள்ளது. கூடவே டெயில்கேட்டின் அடிப்பகுதியில் ஒரு கூடுதல் வரி குரோம் பட்டியும் உள்ளது.
காற்றுத் துவாரங்கள் போலக் காட்சியளிக்கும் நேர்த்தியான பின்புறப் பிரதிபலிப்புக் கண்ணாடிகள், டிஃப்யூஸரைப் போலத் தோன்றும் பின்புற ஸ்கிட் தட்டு ஆகிய புதிய வடிவமைப்புகளுடன் பின்புற பம்பர் உள்ளது.
பக்கவாட்டுத் தோற்றத்தில், வழக்கமான பிளாட்-பேக் தோற்றத்திற்குப் பதிலாக சாய்வான சன்னல் மற்றும் பின் பகுதியுடன், ஐரோப்பிய வகை ஹேட்ச்பேக் போன்ற நிழல்தோற்றத்துடன் நியோஸ் காட்சியளிக்கிறது.
நியோஸ் 3805 மிமீ நீளமும் 2450 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டுள்ளது. இது முந்தைய மாடல்களைவிட முறையே 40 மிமீ மற்றும் 25 மிமீ அதிகமாகும். வெளிப்புறத்தில் அளவு அதிகரித்தாலும், இது பழைய மாடல்களை விட 30-40 கிலோ எடை குறைவானது.
மேலும் விவரங்கள்: ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் மற்றும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ : விலைகள் கூறும் விவரங்கள் என்ன?
0 out of 0 found this helpful