ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸின், உயர்-சிறப்பம்சம் பொருந்திய அஸ்டா வகையில் ஏஎம்டி விருப்பத்தைப் பெறுகிறது
ஹூண ்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் 2019-2023 க்காக மார்ச் 04, 2020 02:50 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
அடிப்படை-சிறப்பம்சம் பொருந்திய எரா வகையைத் தவிர, மற்ற 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திர வகைகள் அனைத்தும் இப்போது ஏஎம்டி விருப்பத்துடன் வருகின்றன
-
கிராண்ட் ஐ10 நியோஸ் அஸ்டாவானது தற்போது 1.2-லிட்டர் பெட்ரோல் வகையில் ஏஎம்டி விருப்பத்தைப் பெறுகிறது.
-
ஹூண்டாய் சமீபத்தில் தான் கிராண்ட் ஐ10 நியோஸின் டர்போ-பெட்ரோல் இயந்திரம் உடைய வகையை அறிமுகப்படுத்தியது.
-
டீசல் இயந்திர வகைகளில், கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் மட்டுமே ஏஎம்டி பற்சக்கரபெட்டி அமைப்பைப் பெறுகிறது.
-
புதிய அஸ்டா ஏஎம்டியின் விலை முறையே பெட்ரோல் மாக்னா ஏஎம்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஏஎம்டி வகைகளைக் காட்டிலும் ரூபாய் 1.25 லட்சம் மற்றும் ரூபாய் 64,000 அதிகமாக இருக்கும்.
1.2-லிட்டர் பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்ட கிராண்ட் ஐ10 நியோஸின் உயர்-சிறப்பம்சம் பொருந்திய அஸ்டா வகையில் ஏஎம்டி பற்சக்கர அமைப்பு உடைய விருப்பத்தை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில், தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் கூட ஹேட்ச்பேக் உடைய டர்போ-பெட்ரோல் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அஸ்டா ஏஎம்டியின் விலை ரூபாய் 7.67 லட்சம், அதன் கைமுறை செலுத்துதல் விருப்பத்தின் விலை ரூபாய் 7.18 லட்சம், இதன் மூலம் ரூபாய் 49,000 விலை வித்தியாசத்தை அளிக்கிறது.
முன்னதாக, ஹூண்டாய் ஆனது ஏஎம்டி முறை செலுத்துதல் விருப்பத்தை மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வகை கார்களில் மட்டுமே வழங்கியது. இவற்றின் விலை முறையே ரூபாய் 6.42 லட்சம் மற்றும் ரூபாய் 7.03 லட்சம் ஆகும். கைமுறை மற்றும் தானியங்கி பற்சக்கர பெட்டி அமைப்பு 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன, இது 84பிஎஸ் ஆற்றல் மற்றும் 114என்எம் முறுக்குதிறனை வெளிப்படுத்துகிறது. எனினும், 1.2-லிட்டர் டீசல் இயந்திரத்துடன் ஏஎம்டி பற்சக்கர பெட்டி அமைப்பு வேண்டும் என்று விரும்பினால், இது கிராண்ட் ஐ10 நியோஸின் ஸ்போர்ட்ஸ் வகையில் மட்டுமே கிடைக்கிறது. டீசல் இயந்திரம் 75பிஎஸ் / 190என்எம் அளவு வெளியீடுகிறது.
மேலும் படிக்க: 2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் வகை வாரியான இயந்திர விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டன
உயர்-சிறப்பம்சம் பொருந்திய அஸ்டா ஏஎம்டியின் விலை முறையே மாக்னா ஏஎம்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஏஎம்டி வகைகளைக் காட்டிலும் ரூபாய் 1.25 லட்சம் மற்றும் ரூபாய் 64,000 அதிகமாக இருக்கும். மற்றொரு புறம், ஸ்போர்ட்ஸ் ஏஎம்டி டீசலின் விலை ரூபாய் 7.90 லட்சம் ஆகும்.
இதற்கிடையில், ஹூண்டாய் வரவிருக்கின்ற மாதங்களில் ஏராளமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இது முதலில் மார்ச் 17 அன்று இரண்டாவது தலைமுறை க்ரெட்டாவை அறிமுகப்படுத்தும், அதைத் தொடர்ந்து வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டை ஏப்ரல் 2020 லும், மூன்றாம் தலை முறை ஐ20யை 2020-ன் நடுப்பகுதியிலும் அறிமுகப்படுத்தும்.
(அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம் டெல்லி)
மேலும் படிக்க: கிராண்ட் ஐ 10 நியோஸ் ஏஎம்டி