• English
  • Login / Register

இந்தியாவில் வெளியிடப்பட்டது Hyundai Creta N Line: விலை ரூ.16.82 லட்சத்தில் இருந்து தொடக்கம்

published on மார்ச் 11, 2024 07:23 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

  • 37 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா N லைன் கார் இந்தியாவில் i20 N லைன் மற்றும் வென்யூ N லைனுக்கு பிறகு மூன்றாவது ‘N லைன்’ மாடலாக வெளியாகியுள்ளது.

Hyundai Creta N Line

  • ஹூண்டாய் கிரெட்டா N லைனை இரண்டு வேரியன்ட்களில் வழங்குகிறது: N8 மற்றும் N10.

  • புதிய கிரில் பெரிய 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஆல் பிளாக் கேபின் போன்றவற்றை கொண்டுள்ளது.

  • டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • 6-ஸ்பீடு MT மற்றும் 7-ஸ்பீடு DCT இரண்டையும் கொண்ட 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது.

  • ஹூண்டாய் கிரெட்டா N லைனின் விலை ரூ. 16.82 லட்சம் முதல் ரூ. 20.30 லட்சம் வரை உள்ளது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).

இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா N லைன் கார் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா எஸ்யூவி -யின் ஸ்போர்ட்டியர் பதிப்பாகும். மேலும் இது இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: N8 மற்றும் N10. அதன் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள இங்கே:

வேரியன்ட்

விலை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா)

N8 MT

ரூ.16.82 லட்சம்

N8 DCT

ரூ.18.32 லட்சம்

N10 MT

ரூ.19.34 லட்சம்

N10 DCT

ரூ.20.30 லட்சம்

*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

ஹூண்டாய் கிரெட்டா N லைனின் டாப்-ஸ்பெக் N10 DCT யானது வழக்கமான கிரெட்டாவின் SX(O) வேரியன்ட்டை விட ரூ.30000 கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் விவரங்கள்

Hyundai Creta N Line gear shifter

ஸ்டாண்டர்டான கிரெட்டாவின் டாப் வேரியன்ட்டில் உள்ள அதே 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (160 PS/ 253 Nm) கிரெட்டா N லைன் காரும் கொண்டுள்ளது. இருப்பினும் இந்த ஸ்போர்டியர் N லைன் எஸ்யூவி -யானது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷன்களுடன் வருகிறது அதே சமயம் மற்றொன்று 7-ஸ்பீடு DCT யூனிட்டை மட்டுமே பெறுகிறது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 18 கிமீ/லி மற்றும் DCT ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் 18.2 கிமீ/லி என்ற கிளைம்டு மைலேஜை வழங்குகிறது.

ஹூண்டாய் ‘N லைன்’ பிரிவைச் சேர்ந்த கார் இது என்பதால் ஸ்போர்ட்டியர் கிரெட்டாவில் வித்தியாசமான சஸ்பென்ஷன் அமைப்பு மேம்படுத்தப்பட்ட கையாளுதலுக்கான கொடுக்கப்படவுள்ளது. மேலும் க்விக்கர் ஸ்டீயரிங் ரேக் சிஸ்டம் மற்றும் ஸ்போர்ட்டி சவுண்டிங் எக்ஸாஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: ஹூண்டாய் கார்களுக்கு இந்த மார்ச் மாதம் ரூ.43000 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும்

ஸ்போர்ட்டியர் தோற்றம்

Hyundai Creta N Line grille
Hyundai Creta N Line side

கிரெட்டா N லைனில் வித்தியாசமான கிரில், ரெட் கலர் நிறச் இன்செர்ட்களுடன் கூடிய ட்வீக் செய்யப்பட்ட பம்பர்கள், ரெட் பிரேக் காலிப்பர்களுடன் கூடிய பெரிய 18-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ரெட் கலர் இன்செர்ட்களுடன் சைடு ஸ்கிர்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது பல இடங்களில் 'N லைன்' பேட்ஜ்கள் மற்றும் டூயல் டிப் எக்ஸாஸ்ட் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

Hyundai Creta N Line seats

உள்ளே கிரெட்டா N லைன் டாஷ்போர்டில் ரெட் ஆக்ஸன்ட்ஸ் அப்ஹோல்ஸ்டரிக்கு கான்ட்ராஸ்ட் ரெட் ஸ்டிச் மற்றும் ரெட் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றுடன் ஆல் பிளாக் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. N லைன் சார்ந்த ஸ்டீயரிங் வீல் மற்றும் ஷிஃப்டரும் உள்ளது.

காரில் உள்ள வசதிகள்

Hyundai Creta N Line dual 10.25-inch displays

10.25-இன்ச் டச் ஸ்கிரீன், டூயல்-ஜோன் ஏசி பனோரமிக், சன்ரூஃப், டூயல்-கேமரா டேஷ்கேம் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ,10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள்  மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற வசதிகள் ஹூண்டாய் கிரெட்டா N லைனில் உள்ளன. ஸ்போர்ட்டியர் கிரெட்டாவின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் 360 டிகிரி கேமரா மற்றும் பல அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ) ஆகியவை அடங்கும். வழக்கமான கிரெட்டாவின் ஹையர் வேரியன்ட்களிலும் இந்த வசதிகள் உள்ளன.

போட்டியாளர்கள்

Hyundai Creta N Line rear

ஹூண்டாய் கிரெட்டா N லைன்,  கியா செல்டோஸ் GTX+ மற்றும் X-லைன் வேரியன்ட்கள் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி லைன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார்களின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கும் போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: சில நகரங்களில் ஒரு காம்பாக்ட் எஸ்யூவி -யை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 8 மாதங்கள் வரை ஆகலாம்

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா N லைன் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai கிரெட்டா என் லைன்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience