Hyundai Creta Knight எடிஷனின் விவரங்களை 7 படங்களில் பார்க்கலாம்
published on செப் 27, 2024 08:05 pm by ansh for ஹூண்டாய் கிரெட்டா
- 106 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஸ்பெஷல் எடிஷன் முன்-ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் கிடைத்தது. இப்போது 2024 கிரெட்டாவின் மிட்-ஸ்பெக் S(O) மற்றும் டாப்-ஸ்பெக் SX(O) வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் சமீபகாலமாக உள்ளேயும் வெளியேயும் பிளாக்டு அவுட் கலர் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது பல கலர் ஆப்ஷன்கள் உடன் கிடைத்தாலும் கூட வெளிப்புறத்தில் உள்ள முக்கிய வடிவமைப்பு வேறுபாடுகள், அதற்கு ஒரு மிரட்டலான தோற்றத்தைக் கொடுக்கும் பிளாக்டு-அவுட் எலமென்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது மிட்-ஸ்பெக் S(O) மற்றும் டாப்-ஸ்பெக் SX(O) வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் பதிப்பான கிரெட்டாவை நீங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால், அதன் விவரங்களை இந்த விரிவான கேலரியில் பார்க்கவும்.
வெளிப்புறம்
முன்புறம் பிளாக்-அவுட் கிரில் மற்றும் ஸ்கிட் பிளேட்டுக்கு பிளாக் ஃபினிஷ் உள்ளது. இந்த பிளாக் தோற்றம் மேட் பிளாக் ஃபினிஷ் மூலம் மேலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் லோகோ கிரில்லின் மையத்தில் அமைந்துள்ளது.
இது 17-இன்ச் பிளாக் அவுட் அலாய் வீல்கள் உடன் வருகிறது. இது ஸ்போர்ட்டி தோற்றத்திற்காக ரெட் கலர் பிரேக் காலிப்பர்களுடன் வருகிறது. இங்குள்ள ரூஃப் ரெயில்களும் பிளாக் கலரில் உள்ளன.
பின்புறத்தில் இது இதே போன்ற ட்ரீட்மென்ட்டை பெறுகிறது. ஸ்கிட் பிளேட் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் பிளாக் நிறத்திலும், ஹூண்டாய் லோகோ மேட் பிளாக் நிறத்திலும், டெயில்கேட்டில் “நைட் எடிஷன்” பேட்ஜ் உள்ளது.
இன்ட்டீரியர்
நைட் எடிஷனின் உள்ளே கேபின் பிளாக் டேஷ்போர்டு மற்றும் டாஷ்போர்டை சுற்றிலும் சென்டர் கன்சோலிலும் புரோன்ஸ் ஆக்ஸென்ட்கள் உடன் ஆல்-பிளாக் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மெட்டாலில் கலரில் உள்ள பெடல்களும் உள்ளன.
இங்கே படங்களில் உள்ள வேரியன்ட் மிட்-ஸ்பெக் S(O) ஆகும். இது டூயல்-டோன் பிளாக் மற்றும் சாம்பல் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி உடன் வருகிறது.
வசதிகள்
S(O) நைட் பதிப்பில் 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன்
நைட் எடிஷன் 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (115 PS மற்றும் 143 Nm), மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS மற்றும் 250 Nm) உடன் கிடைக்கிறது. இரண்டு இன்ஜின்களும் ஸ்டாண்டர்டாக 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கும். மேலும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுக்கு, பெட்ரோல் எடிஷன் CVT மற்றும் டீசல் வேரியன்ட்கள் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் வருகின்றன.
மேலும் பார்க்க: கியா கேரன்ஸ் கிராவிட்டி எடிஷன் 11 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
மற்ற வேரியன்ட்களில் கிடைக்கும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கிரெட்டா நைட் பதிப்பை ஹூண்டாய் வழங்கவில்லை.
விலை & போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷனின் விலை ரூ.14.51 லட்சத்தில் இருந்து ரூ.20.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற மற்ற காம்பாக்ட் எஸ்யூவிகளுடன் போட்டியிடுகிறது
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை