Hyundai Creta காரின் 7 படங்கள் மூலமாக காரை விரிவாக பார்க்கலாம்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலை ரூ. 17.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் கிரெட்டா எலக்ட்ரிக் காரை ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் அறிமுகப்படுத்திய்ருந்தது. இதன் விலை ரூ. 17.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. எக்ஸிகியூட்டிவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸெலன்ஸ் என 4 வேரியன்ட்களில் இது கிடைக்கும். ஹூண்டாய் கிரெட்டா EV ஆனது ICE-பவர்டு மாடலின் வெற்றி ஃபார்முலாவை இதிலும் கொண்டு வந்துள்ளது. இது ICE-பவர்டு மாடலில் இருந்து சற்று வித்தியாசமான வடிவமைப்பு எலமென்ட்களை கொண்டுள்ளது.
நீங்கள் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் காரை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கே உள்ள படத்தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: வெளிப்புற வடிவமைப்பு
முன்பக்கம்
இது ICE-பவர்டு மாடலில் இருந்து சற்று வித்தியாசமான முன்பக்கத்தை கொண்டுள்ளது. இதில் ஸ்லீக்கரான கிரில் உள்ளது, இது பிக்சலேட்டட் வடிவமைப்புடன் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த பம்பர் கூட மாற்றியமைக்கப்பட்டுள்ளது ஏர் இன்டேக்குகளும் உள்ளன. இது பாகங்களுக்கு குளிர்ச்சி தேவைப்படும்போது தானாகவே திறந்து கொள்ளும். கனெக்டட் எல்இடி DRL -கள் மற்றும் ஸ்கொயர் ஹெட்லைட்கள் போன்ற ICE-பவர்டு வெர்ஷன் போலவே இருக்கும்.
பக்கவாட்டு தோற்றம்
கிரெட்டா எலக்ட்ரிக் காரின் சில்ஹவுட் ஸ்டாண்டர்டு மாடலை போலவே உள்ளது. எளிதாகக் காணக்கூடிய முக்கிய வேறுபாடு புதிய 17-இன்ச் அலாய் வீல்கள் ஆகும். அவை ஏரோ எலமென்ட்களை பெறுகின்றன. கிரெட்டா எலக்ட்ரிக் பல்வேறு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மோனோடோன் ஆப்ஷன்களில் அட்லஸ் ஒயிட், ஓஷன் ப்ளூ மெட்டாலிக், ஸ்டாரி நைட், அபிஸ் பிளாக் பெர்ல் மற்றும் ஃபியரி ரெட் பெர்ல் ஆகிய கலர் ஆப்ஷன்கள் கிடைக்கும். ஸ்ட்ராங் எமரால்டு, டைட்டன் கிரே மற்றும் ஓஷன் ப்ளூ போன்றவற்றை மேட் ஃபினிஷில் பெறலாம். கடைசியாக டூயல்-டோன் ஆப்ஷன்களில் ஓஷன் ப்ளூ மெட்டாலிக் வித் பிளாக் ரூஃப் மற்றும் அட்லஸ் ஒயிட் வித் பிளாக் ரூஃப் ஆகியவையும் கிடைக்கும்.
பின்புறம்
பின்புறத்தில் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ICE-பவர்டு மாடலில் உள்ளதை போன்ற அதே கனெக்டட் LED டெயில் லைட்கள் உள்ளன. பின்புற பம்பரின் வடிவமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது மற்றும் அதில் பிக்சலேட்டட் எலமென்ட்களை காணலாம்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: இன்ட்டீரியர்
கேபின் ICE-பவர்டு மாடலில் உள்ளதை போலவே உள்ளது. இருப்பினும் சில மாற்றங்கள் உள்ளன. EV என்பதை காட்டும் கிராபிக்ஸ்கள் உடன் வழக்கமான டூயல் டிஸ்பிளேக்கள் உள்ளன. மேலும் AC -க்கான கண்ட்ரோல் பேனல் இப்போது முக்கியமாக டச் சென்ஸிட்டிவ் உடன் கொண்டதாக இருப்பதை கவனிக்க முடியும்.
கிரெட்டா எலக்ட்ரிக் இப்போது புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை பெற்றிருப்பது முக்கிய மாற்றம். எளிதாக அணுகுவதற்காக கியர் செலக்டரும் ஸ்டீயரிங் வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கியர் செலக்டரை மாற்றுவது குறைந்த சென்டர் கன்சோலில் நிறைய இடத்தை கொடுப்பதால் அது ஸ்டோரேஜ் இடம் ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆட்டோ ஹோல்ட், டிரைவ் மோடுகள் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குகளுக்கான முக்கியமான ஃபங்ஷன்களுக்கான பட்டன்கள் உள்ளன.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: வசதிகள்
பெரும்பாலான ஹூண்டாய்களை போலவே கிரெட்டா எலக்ட்ரிக் காரும் நிறைய வசதிகளுடன் வருகிறது. இது 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்ஸ், வென்டிலேஷன் மற்றும் பவர்டு செயல்பாடு உடன் கூடிய பவர்டு முன் இருக்கைகள் ஆகியவற்றைப் பெறுகிறது.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), EBD உடன் ABS, 360-டிகிரி கேமராவுடன் கூடிய முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லெவல்-2 ADAS ஆகியவவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. இவை இரண்டும் வெவ்வேறு பேட்டரி பேக்குகள் மற்றும் மோட்டார்களை கொண்டுள்ளன. கீழே உள்ள அட்டவணையில் கிரெட்டா EV -யின் பவர்டிரெய்ன் விவரங்களை நீங்கள் விரிவாக பார்க்கலாம்:
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் |
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் லாங் ரேஞ்ச் |
|
பவர் (PS) |
135 PS |
171 PS |
பேட்டரி பேக் |
42 kWh |
51.4 kWh |
கிளைம்டு ரேஞ்ச் |
390 கி.மீ |
473 கி.மீ |
0 முதல் 100 கி.மீ வேகம் |
– |
7.9 வினாடிகள் |
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதன் மூலம் பேட்டரியை 58 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ஆனது டாடா கர்வ்வ் EV, MG ZS EV, மஹிந்திரா BE6 கார்களோடு வரவிருக்கும் மாருதி சுஸூகி இ விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ?கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.