பிரேசில் நாட்டில் புதிய ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவர்: முதல் முறையாக உளவாளிகளின் கண்களில் தென்பட்டது
published on டிசம்பர் 15, 2015 02:24 pm by manish for ஹோண்டா ஜாஸ் 2014-2020
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
பிரிமியம் ஹாட்ச்பேக் மாடல் கார்களை சற்றே மாற்றியமைத்து, முரட்டுத்தனமான தோற்றத்தில் உருவாக்கப்படும் க்ராஸ்ஓவர் ஹாட்ச் பிரிவு கார்கள்தான், தற்போது அதிகமாக பிரசித்தி பெறுகின்றன. இவை மிகவும் பிரபலமாவதற்கு முதன்மையான காரணம், அதிகமாக்கப்பட்ட கிரவுண்ட் க்ளியரன்ஸ் ஆகும். ஏனெனில், இந்தியாவில் உள்ள ஏற்ற இறக்கம் நிறைந்த சாலைகளில் எளிதாக சவாரி செய்ய இந்த அமைப்பு சிறப்பாக உதவுகிறது என்று கூறலாம். மேலும், பிரிமியம் ஹாட்ச்பேக் மாடலில் உள்ள வசதிகள் அனைத்தும் க்ராஸ்ஓவர் ஹாட்ச் பிரிவு கார்களில் உள்ளன. தற்போது, இந்திய வாகன சந்தையில் முன்னணி இடத்தில் இருக்கும் ஹோண்டா ஜாஸ் மாடலும் சீரிய பிரிமியம் ஹாட்ச்பேக் பிரிவில் உள்ள காராகும். தற்போது, நேர்த்தியான கிளாடிங்க் கொண்டு அலங்கரிக்கப்பட்டு அறிமுகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஹோண்டா ஜாஸின் புதிய க்ராஸ்ஓவர் மாடல் காரை, முதல் முறையாக ரகசியமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். 2016 -ஆம் ஆண்டில் அறிமுகமாக உள்ள ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவரின் ப்ரோட்டோடைப், பிரேசில் நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது.
புகைப்படத்தில் உள்ள இந்த புதிய க்ராஸ்ஓவர், ‘ஹோண்டா ஜாஸ் ட்விஸ்ட்’ என பெயரிடப்படலாம் என்று பரவலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த க்ராஸ்ஓவரின் முந்திய ஜெனரேஷன், பிரேசில் நாட்டு சந்தைக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. தற்போது இந்திய சந்தையில் உள்ள க்ராஸ்ஓவர் பிரிவிற்கான வரவேற்பு மற்றும் ஹோண்டா ஜாஸின் பிரசித்தம் போன்ற விவரங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, பிரேசில் நாட்டிற்கு மட்டுமே என்ற நிலை மாறி, இந்த கார் இந்தியாவிற்கு வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் நடந்த இந்த சோதனை ஓட்டம் முழுவதும் உருமறைக்கப்பட்டிருந்த போதிலும், இதன் பெரிய அலாய் சக்கரங்கள், மறுவடிவமைக்கப்பட்ட வலுவான தோற்றமுடைய பம்பர், ரூஃப் ரைல்ஸ், அன்டர்பாடி கிளாட்டிங், காரின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ள ஸிகிட் ப்ளேட் போன்றவை, இந்த காரை சிறந்த பயன்பாட்டு வாகனமாக தோற்றமளிக்கச் செய்கிறது.
ஹோண்டா ஜாஸ்ஸில் உள்ள இஞ்ஜின் ஆப்ஷன்களைப் போலவே, இந்த காரிலும் வரும் என்று தெரிகிறது. அது போலவே, உட்புறத்திலும் எந்த மாற்றமும் இன்றி, ஹோண்டா ஜாஸ் போலவே இருக்கும். இந்திய சந்தையில் தற்போது உள்ள ஹோண்டா ஜாஸ் மாடலில், சிட்டி சேடான் காரில் உள்ள அதே 1.5 லிட்டர் i-DTEC டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு, 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. 100 PS சக்தியும், 200 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யக் கூடிய இந்த இஞ்ஜின், 27.3 kmpl என்ற அளவில் மைலேஜ் தருகிறது. இதன் பெட்ரோல் வகையில், 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு, 5 ஸ்பீட் மேனுவல் அல்லது பேடில் ஷிப்ட்டர்களுடன் உள்ள CVT ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு வருகிறது. புதிய ஹோண்டா க்ராஸ்ஓவர் கார் எப்போது அறிமுகப்படுத்தப்படுகிறதோ, அந்த நொடியில் இருந்து சந்தையில் உள்ள ஹுண்டாய் i20 ஆக்டிவ், ஃபியட் அவெஞ்சுரா, VW க்ராஸ் போலோ மற்றும் பல கார்களுடன் போட்டியிட களத்தில் இறங்கிவிடும்.
புகைப்பட ஆதாரம்: AutoSegredos.com.br
இதையும் படியுங்கள்