ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது
published on செப் 05, 2015 01:31 pm by raunak for ஹோண்டா அமெஸ் 2016-2021
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதுப் புது சிறப்பு மாடல்களை வெளியிடுகிறார்கள்.
மாற்றங்களை பற்றி பேசும் போது, இந்த இரு வாகனங்களின் வெளித்தோற்றத்தில், வினைல் மேற்பூச்சும், ரினால்ட்டின் சிறப்பு வெளியீடு சின்னமும் தவிர வேறு எந்த மாறுபாடும் கொண்டிருக்கவில்லை. இந்த இரு வாகனங்களின் உட்புறத்திலும், உயர்தர மெத்தை மற்றும் உயர்தரமான மேலுரை கொண்டு இதன் இருக்கைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய ஓட்டு சக்கர மேலுரை (ஸ்டியரிங் வீல் கவர்) மற்றும் கால் விரிப்பு ஆகியனவும் அழகாக புதுபிக்கப்பட்டுள்ளன. இந்த பண்டிகை கால வெளியீடுகளில், மெல்லிய சிறந்த பட்டின் டப்ஃபேட்டா வெள்ளை மற்றும் ஆர்க்கிட் வெள்ளை வண்ணங்களில் மட்டுமே கிடைக்கிறன. பண்டிகை கால வெளியீடடான அமேஜ் மாடலின் உபகரண தொகுப்பு ரூபாய் 12,476 விலையிலும், மொபிலியோ மாடலின் உபகரண தொகுப்பு ரூபாய் 16,820 விலையிலும் வருகிறது.
HCIL -இன் மூத்த துணைத் தலைவர் (மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை), ஜ்னனேஸ்வர் சென், இந்த வெளியீட்டை பற்றி கூறும்போது, “நமது நாட்டில் வரவிருக்கும் திருவிழாக்களை கொண்டாட எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால வெளியீடான புதிய அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். புத்துணர்ச்சி தரும் புதிய கூறுகளை எங்கள் தயாரிப்புகளில் பொருத்தி, வாடிக்கையாளர்களை திக்குமுக்காட செய்யவேண்டும் என்பதே எங்கள் நோக்கமும் கனவும் ஆகும்,” என்றார்.
இவை இரண்டும் விழாக்கால சிறப்பு வெளியீடுகள் என்பதால் புதிய மெக்கானிக் மாற்றங்கள் எதுவும் இல்லாமலே வருகின்றன. அமேஜ் மாடல் 1.5 லிட்டர் i-DTEC மற்றும் 1.2 லிட்டர் i-VTEC மோட்டார்களைக் கொண்டும், மொபிலியோ 1.5 லிட்டர் i-DTEC மற்றும் 1.5 லிட்டர் i-VTEC மோட்டார்களைக் கொண்டும் இயக்கப்படுகிறது.
0 out of 0 found this helpful