Honda City அபெக்ஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சிட்டி செடானின் லிமிடெட் அபெக்ஸ் எடிஷன் V மற்றும் VX வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை வழக்கமான வெர்ஷனை விட ரூ.25,000 அதிகமாகும்.
-
சிட்டி அபெக்ஸ் எடிஷன் ஒரு ஆக்ஸசரீஸ் பேக் ஆகும். ஆகவே இதன் முன் ஃபெண்டர்கள், டெயில் கேட் மற்றும் சீட் பேக்ரெஸ்ட் ஆகியவற்றில் பிரத்யேக பேட்ஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
8-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் அனைத்தும் வழக்கமான வேரியன்ட் போலவே உள்ளன.
-
இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), TPMS மற்றும் ADAS ஆகியவை உள்ளன.
-
அபெக்ஸ் பதிப்பின் விலை ரூ. 13.30 லட்சம் முதல் ரூ.15.62 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது.
ஹோண்டா சிட்டி அபெக்ஸ் பதிப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சில சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் ஒரே ஒரு வசதி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் லோவர்-ஸ்பெக் V மற்றும் VX வேரியன்ட்களில் மட்டுமே இது கிடைக்கும். ஹோண்டா சிட்டி அபெக்ஸ் பதிப்பை பற்றி விரிவாகப் பார்ப்போம்:
ஹோண்டா சிட்டி அபெக்ஸ் பதிப்பு: விலை விவரங்கள்
ஹோண்டா சிட்டி அபெக்ஸ் பதிப்பு V மற்றும் VX மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் டிரிமில் டாப்-ஸ்பெக் ZX வேரியன்ட் கிடைக்காது. ஹோண்டா சிட்டி அபெக்ஸ் பதிப்பின் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
வழக்கமான வேரியன்ட் விலை |
அபெக்ஸ் பதிப்பு விலை |
வித்தியாசம் |
VMT |
ரூ.13.05 லட்சம் |
ரூ.13.30 லட்சம் |
ரூ.25,000 |
V CVT |
ரூ.14.30 லட்சம் |
ரூ.14.55 லட்சம் |
ரூ.25,000 |
VX MT |
ரூ.14.12 லட்சம் |
ரூ.14.37 லட்சம் |
ரூ.25,000 |
VX CVT |
ரூ.15.37 லட்சம் |
ரூ.15.62 லட்சம் |
ரூ.25,000 |
ZX MT |
ரூ.15.30 லட்சம் |
இந்த வேரியன்ட்டில் கிடைக்காது |
– |
ZX CVT |
ரூ.16.55 லட்சம் |
இந்த வேரியன்ட்டில் கிடைக்காது |
– |
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
இந்த பதிப்பில் என்ன வித்தியாசம் உள்ளது ?
ஹோண்டா சிட்டி அபெக்ஸ் பதிப்பின் அடிப்படையில் V மற்றும் VX வேரியன்ட்களின் அடிப்படையில் ஒரு ஆக்ஸசரீஸ் பேக் ஆகும். எனவே இது வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுத்துவதற்காக முன் ஃபெண்டர் மற்றும் டெயில்கேட்டில் பிரத்யேக ‘அபெக்ஸ் எடிஷன்' பேட்ஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது அதே பெய்ஜ் கலர் இன்ட்டீரியர் உடன் அதே பிராண்டிங் கொண்ட குஷன்களுடன் சீட் பேக்ரெஸ்டில் அபெக்ஸ் எடிஷன் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எடிஷன் டாஷ்போர்டு, டோர் பேட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரின் மேல் மென்மையான டச் ஃபினிஷிங்கை பெறுகிறது. மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்களும் உள்ளன.
வசதிகள், பாதுகாப்பு தொகுப்பு மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உட்பட மற்ற அனைத்தும் வழக்கமான மாடலை போலவே உள்ளன.
மேலும் படிக்க: Honda City, City Hybrid மற்றும் Elevate கார்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
என்னென்ன விஷயங்கள் ஒரே மாதிரியாக உள்ளன ?
முன்பே குறிப்பிட்டது போல, இது 8 இன்ச் டச் ஸ்கிரீன், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உள்ளிட்ட அதே வசதிகளுடன் வருகிறது.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), லேன் வாட்ச் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) உள்ளிட்ட வசதிகளுடன் பாதுகாப்புத் தொகுப்பும் ஒரே மாதிரியாக உள்ளது. இது கொலிஷன் மிட்டிகேஷன் பிரேக்கிங் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களுடன் (ADAS) வருகிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஹோண்டா சிட்டி 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
பவர் |
121 PS |
டார்க் |
145 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5 MT, CVT* |
*CVT = கன்டினியூஸ்லி வேரியபிள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
போட்டியாளர்கள்
ஹோண்டா சிட்டி மற்ற காம்பாக்ட் செடான்களான ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா, மாருதி சியாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.