ஹோண்டா கார்களுக்கு ஜனவரியில் ரூ.90,000 வரை தள்ளுபடி கிடைக்கும்
ஹோண்டா அமேஸ் காரின் இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை மாடல்களில் ஹோண்டா எந்த சலுகைகளையும் வழங்கவில்லை.
-
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில் அதிகபட்சமாக ரூ.90,000 வரை பலன்கள் கிடைக்கும்.
-
ஹோண்டா சிட்டி -யில் ரூ.73,300 வரை தள்ளுபடி கிடைக்கும்.
-
ரூ.86,100 வரையிலான பலன்களுடன் ஹோண்டா எலிவேட் காரை வாங்கலாம்.
-
அனைத்து ஆஃபர்களும் ஜனவரி 2025 இறுதி வரை செல்லுபடியாகும்.
ஹோண்டா நிறுவனம் எலிவேட், ஐந்தாவது-தலைமுறை சிட்டி மற்றும் சிட்டி ஹைப்ரிட் ஆகியவற்றில் இந்த மாதம் கிடைக்கும் புதிய சலுகைகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் ஹோண்டா அமேஸ் காரின் இரண்டாவது அல்லது மூன்றாம் தலைமுறையில் இந்த மாதம் எந்த சலுகையும் கிடைக்காது. புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் மேம்படுத்தப்பட்ட உத்தரவாத பேக்கேஜ்களை ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து கொடுக்கவுள்ளது. இந்த திட்டமானது 7 ஆண்டுகள்/ வரம்பற்ற கி.மீ வரை உத்தரவாத நீட்டிப்பை உள்ளடக்கியது. ஹோண்டா எலிவேட், சிட்டி, சிவிக், சிட்டி ஹைப்ரிட், அமேஸ், ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி ஆகியவற்றின் அனைத்து பெட்ரோல் வேரியன்ட்களிலும் இந்தத் திட்டம் பொருந்தும். கூடுதல் விவரங்கள் இங்கே உள்ளன:
ஹோண்டா எலிவேட்
சலுகைகள் |
தொகை |
மொத்த பலன்கள் |
ரூ.86,100 வரை |
-
லிமிடெட் ரன் அபெக்ஸ் பதிப்பைத் தவிர எலிவேட் காரின் அனைத்து வேரியன்ட்களும் மேலே குறிப்பிடப்பட்ட ஆஃபர்களுடன் கிடைக்கும்.
-
எஸ்யூவியின் அபெக்ஸ் எடிஷன் ரூ.45,000 வரை குறைந்த பலன்களுடன் கிடைக்கும்.
-
ஹோண்டா எலிவேட் காரின் விலை ரூ.11.69 லட்சம் முதல் ரூ.16.71 லட்சம் வரை உள்ளது.
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்
சலுகைகள் |
தொகை |
மொத்த பலன்கள் |
ரூ.90,000 வரை |
-
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் அனைத்து வேரியன்ட்களிலும் ரூ.90,000 வரை மொத்த தள்ளுபடி கிடைக்கும்.
-
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் விலை ரூ.19 லட்சம் முதல் ரூ.20.55 லட்சம் வரை உள்ளது.
ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி
சலுகைகள் |
தொகை |
மொத்த பலன்கள் |
ரூ.73,300 வரை |
-
ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் அனைத்து வேரியன்ட்களும் ரூ.73,300 வரையிலான மொத்த தள்ளுபடியுடன் கிடைக்கும்.
-
இதன் விலை ரூ.11.82 லட்சம் முதல் ரூ.16.35 லட்சம் வரை உள்ளது.
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம். கூடுதல் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளவும்.
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலை விவரங்களும் டெல்லி எக்ஸ்ஷோரூம் -க்கானவை ஆகும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.