டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்-அடிப்படையிலான மாருதி என்கேஜ் MPVயின் ஃபர்ஸ்ட் லுக் இதோ
modified on ஜூன் 13, 2023 07:34 pm by tarun for மாருதி இன்விக்டோ
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
என்கேஜ்' ஐ மாருதி MPV என்று அழைக்கலாம், இது ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும்.
-
மாருதி MPV, ஹைக்ராஸ் காரில் இருப்பதைப் போல குறைந்த அளவிலான மாற்றங்களைக் கொண்டதாகத் தெரிகிறது.
-
புதிய நெக்ஸா-வால் இருந்து பெறப்பட்ட இன்ஸ்பையர்டு கிரில், வெவ்வேறு அலாய் வீல்கள் மற்றும் LED டெயில் லேம்ப்களுக்கான புதிய விவரங்கள் ஆகியவற்றைப் பெறலாம்.
-
பனோரமிக் சன்ரூஃப், 10-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் மற்றும் டூயல் ஜோன் AC ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
ரேடார் அடிப்படையிலான ADAS தொழில்நுட்பத்தைப் பெறும் முதல் மாருதி இதுவாகும்.
-
இது இன்னோவாவின் 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை ஸ்ட்ராங்-ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் ஆப்ஷனை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாருதி தனது புத்தம் புதிய MPVயை ஜூலை 5 ஆம் தேதி வெளியிட தயாராக உள்ளது, அதன் முதல் மறைக்கப்படாத உளவுக் காட்சி இதோ. மாருதி என்கேஜ் என்று அழைக்கப்படும் இந்த கார் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட எடிஷன் ஆகும்.
உளவுக்காட்சி, மாருதி MPV, ஹைக்ராஸ் உடன் ஒப்பிடுகையில் குறைந்த மாற்றங்களுடன் தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது. முன்பக்கத்தில், நீங்கள் நெக்ஸா-வின் ஈர்க்கும் குரோம் கிரில்லைப் பெறுவீர்கள். முன் புறத் தோற்றம் , கிரில்லைப் பெற்று, டொயோட்டா MPV போலவே தெரிகிறது.
தொடர்புடையவை: CD பேச்சு: மாருதி MPV-ஐ ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமான விலையில் வாங்கத் தயாராகுங்கள்
மாருதி MPV -யின் பல சோதனைகளை நாம் காணலாம், அதில் ஒன்று வேறுபட்ட அலாய் வீல் வடிவமைப்பைப் பெறுகிறது. மாருதியில் புதிய அலாய் வீல் வடிவமைப்பையும் எதிர்பார்க்கலாம். பக்கவாட்டு மற்றும் பின்புற தோற்றம் டொயோட்டா MPV -க்கு ஒத்ததாக உள்ளது, பின்புறத்தில் உள்ள நெக்ஸா-வின் ஈர்க்கும் டெயில் லேம்ப் வடிவமைப்பை பெறுகிறது.
மாருதி MPV -யின் உட்புறம் ஹைக்ராஸைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது, டூயல்-டோன் ஷேட் மற்றும் ஒரே மாதிரியான அம்சப் பட்டியலும் இருக்கும். இது ஒரு பனோரமிக் சன்ரூஃப், 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் மற்றும் இரண்டாவது வரிசையில் இயங்கும் ஒட்டோமான் இருக்கைகள் ஆகியவற்றைப் பெறும். அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, TPMS மற்றும் ADAS ஆகியவை பாதுகாப்பை உள்ளடக்கும்.
இது ஹைக்ராஸின் 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை ப் பெறும், இது ஒரு ஆப்ஷனாக ஸ்ட்ராங்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பெறுகிறது. MPV இன் ஹைப்ரிட் பதிப்பு 186PS வரை கொடுக்கிறது மற்றும் 23.24kmpl வரையிலான எரிபொருள் சிக்கனத்தை கொடுக்கலாம். பெட்ரோல் வேரியன்ட்கள் ஒரு CVT டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது, ஒரு e-CVT (சிங்கிள்-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன்) உடன் ஸ்ட்ராங்-ஹைபிரிட் கிடைக்கிறது.
மேலும் படிக்கவும்: நாங்கள் டொயோட்டா ஹிலக்ஸை ஒரு ஆஃப்-ரோடு பயணத்தில் கண்டோம்!
இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலை ரூ.18.55 லட்சத்தில் இருந்து ரூ.29.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் மாருதி MPV அதேபோன்ற விலைப் பட்டியலைப் பெறும் டொயோட்டாவைப் போலவே, மாருதி MPV -யும் நேரடி போட்டியாளர்களைக் கொண்டிருக்காது, ஆனால் கியா கேரன்ஸுக்கு ப்ரீமியம் மாற்றாக இருக்கும்.
ஆதாரம்