2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் பங்கேற்கவுள்ள கார் நிறுவனங்கள் எவை தெரியுமா ?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் மொத்தம் 8 முக்கிய கார் தயாரிப்பாளர்கள் மற்றும் நான்கு சொகுசு வாகன பிராண்டுகள் பங்கேற்க உள்ளன.
2025 ஆம் ஆண்டு நெருங்கிவிட்ட நிலையில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்போவை நடத்தவுள்ளது. இந்த பரபரப்பான ஆட்டோ ஷோவில் தங்களது புதுமையான தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ள கார் தயாரிப்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. எந்தெந்த நிறுவனங்கள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்க உள்ளனர் என்ற விவரங்களை பார்ப்போம்:
எந்தெந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் மொத்தம் 12 கார் தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. அவை:
-
மாருதி
-
ஹூண்டாய்
-
மஹிந்திரா
-
டாடா
-
கியா
-
டொயோட்டா
-
MG
-
ஸ்கோடா
-
BMW
-
லெக்சஸ்
-
மெர்சிடிஸ் பென்ஸ்
-
போர்ஷே
இருப்பினும், ஹோண்டா, ஜீப், ரெனால்ட், நிஸான், ஃபோக்ஸ்வேகன், சிட்ரோன், ஆடி, BYD, ஃபோர்ஸ் மோட்டார்ஸ், இசுஸூ, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் வோல்வோ போன்ற கார் தயாரிப்பாளர்கள் வரவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கப்போவதில்லையென அறிவித்துள்ளன.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 பற்றிய மேலும் சில தகவல்கள் உங்களுக்காக:
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்பது என்ன?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ ஆண்டுதோறும் ஆறு நாட்கள் நடைபெறும், இது மொபிலிட்டி துறையில் அதிநவீன முன்னேற்றங்களைக் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் முதன்மையான வாகனக் கூட்டங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இது, உலகெங்கிலும் உள்ள முன்னணி கார் உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஈர்க்கிறது. இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் இந்தியா (EEPC India) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு முக்கிய தொழில் நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் இந்த எக்ஸ்போ வாகனத் துறையில் புதுமை மற்றும் ஒத்துழைப்புக்கான தளமாக செயல்படுகிறது.
மேலும் படிக்க: மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா ஆகியவை நவம்பர் 2024 இல் அதிகம் விற்பனையான கார் பிராண்டுகளாகும்
2025-ல் எக்ஸ்போ எப்போது எங்கு நடைபெறும்?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஜனவரி 17 முதல் 22, 2025 வரை டெல்லி NCR-இல் உள்ள பாரத்மண்டபம் (பிரகதி மைதானம்), துவாரகாவில் உள்ள யஷோபூமி மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் மற்றும் மார்ட் போன்ற மூன்று முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்?
2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ, கார்கள் மட்டுமின்றி, எலக்ட்ரிக் கார்கள், இரு சக்கர வாகனங்கள், கட்டுமான இயந்திரங்கள், வாகன பாகங்கள், உதிரிபாகங்கள், டயர்கள், பேட்டரிகள் மற்றும் வாகன மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் மற்றும் புதுமைகளை 15-க்கும் மேற்பட்ட மாநாட்டுகளில் காட்சிப்படுத்தும்.
கார் ஷோகேஸ்களைப் பொறுத்தவரை, மாருதி eVX, ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் டாடா ஹாரியர் EV போன்ற மாடல்கள் வரவிருக்கும் எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும், கார்களின் இறுதிப் பட்டியல் விரைவில் உறுதிப்படுத்தப்படும். எனவே மேலும் கூடுதலான அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வுடன் இணைந்திருங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.