போர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது !
published on நவ 30, 2015 05:06 pm by manish for போர்டு ஆஸ்பியர்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
கிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான பீகோ ஆஸ்பயர் செடான் கார்கள் அமோக வரவேற்பை பெற்று ஆகஸ்ட்- அக்டோபர் 2015 மாதம் வரையிலான காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மட்டும் பார்த்தால் 15000 கார்கள் விற்பனையாகி உள்ளது. சர்வதேச சந்தைக்கான போர்ட் நிறுவனத்தின் தயாரிப்புக்களில் முதலாவதாக இந்த பீகோ ஆஸ்பயர் செடான் கார்கள் வெளியாகி உள்ளது. இதே தினத்தில் 1908 ஆம் ஆண்டு அறிமுகமான தன்னிகரில்லா 'T' மாடல் கார்கள் சராசரியாக மாதம் 5,000 கார்கள் வரை விற்பனையானது இங்கே குறிப்பிடத்தக்கது.
போர்ட் இந்தியாவின் மார்கெடிங் பிரிவின் துணைத் தலைவரான ராகுல் கெளதம் , இந்த புதிய போர்ட் பீகோ ஆஸ்பயர் கார்கள் பெற்றுள்ள வரவேற்பினால் , கடந்த 2014 அக்டோபர் மாதத்தில் விற்பனையான 6,723 வாகனங்களை காட்டிலும் இந்த 2015 வருடம் அக்டோபரில் விற்பனை கணிசமாக அதிகரித்து 10,008 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன என்று கூறியுள்ளார். மேலும் அவர், நவம்பர் முதல் தொடங்கி உள்ள பண்டிகை காலத்தின் காரணமாக வரும் மாதங்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் கூறினார். தற்போது போர்ட் நிறுவனம் இந்தியாவில் 189 வெவ்வேறு நகரங்களில் 352 டீலர்ஷிப் மையங்களை கொண்டுள்ளது. இவைகளில் குறிப்பாக டயர் - 2 மற்றும் டயர் - 3 சந்தைகளில் விற்பனை வெகுவாக உயரும் என்று போர்ட் நம்புகிறது. இந்த கச்சிதமான செடான் பிரிவு காரான பீகோ ஆஸ்பயர் கார்கள் ஹோண்டா அமேஸ்,ஹயுண்டாய் எக்ஸ்சென்ட், டாடா செஸ்ட் மற்றும் ஸ்விப்ட் டிசையர் கார்களுடன் போட்டியிடும். சக்தி வாய்ந்த டீசல் என்ஜின், ஆஸ்டன் மார்டின் கார்களில் உள்ளது போன்ற வடிவமைப்புடன் கூடிய க்ரில் மற்றும் ஏராளமாக இணைக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் போன்றவை இந்த பிரிவில் உள்ள மற்ற கார்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கிறது என்று சொன்னால் அது மிகை இல்லை.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful