பிஎஸ்6 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர், ஃப்ரீஸ்டைல் மற்றும் எண்டெ வர் போன்றவற்றிற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது
published on பிப்ரவரி 17, 2020 10:34 am by rohit for போர்டு இண்டோவர் 2015-2020
- 40 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபோர்டு தன்னுடைய ஃபோர்டு பாஸ் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை அனைத்து பிஎஸ்6 மாதிரிகளில் நிலையாக வழங்கும்
-
ஃபோர்டின் தயாரிப்பு வரிசையில் முதல் பிஎஸ்6 மாதிரி ஈகோஸ்போர்ட் ஆகும்.
-
ஃபிகோ, ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைல் கைமுறையான செலுத்துதல் விருப்பங்களுடன் மட்டுமே கிடைக்கின்றன.
-
பிஎஸ் 6 ஃபோர்டு எண்டெவர் புதிய 2.0-லிட்டர் டீசல் இயந்திரத்துடன் 10-வேக ஏடி பொருத்தப்பட்டு வருகிறது
-
அவற்றின் பிஎஸ்4 மாதிரிகளை காட்டிலும் இதன் விலை சற்று அதிகம்.
ஃபோர்டு இந்தியாவில் சமீபத்தில் தான் ஈகோஸ்போர்ட்டின் பிஎஸ்6-இணக்கமான மாதிரியை அறிமுகப்படுத்தியது. இது தற்போது இதன் முஸ்டாங் மாதிரியைத் தவிர அதனுடைய அனைத்து பிஎஸ்6 மாதிரிகளுக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வருகின்றது.
ஃபிகோ மற்றும் ஆஸ்பையரின் தானியங்கி முறையிலான வகைகளின் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், பிஎஸ்6 வரலாற்றில் பின்னர் இது மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது, ஹேட்ச்பேக் மற்றும் செடான் இரண்டும் பிஎஸ்4 இயந்திர விருப்பங்களின் அதே அமைப்பான 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இயந்திரங்களுடன் அளிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்களினுடைய வெளியீட்டு அளவுகள் முறையே 96பிஎஸ் / 120என்எம் மற்றும் 100பிஎஸ் / 215என்எம் ஆக உள்ளன. ஃப்ரீஸ்டைல் மாதிரியும் கூட அதே அளவிலான ஆற்றல் மற்றும் முறுக்கு திறன் வெளியீடுகளுடன் அதே இயந்திர விருப்பங்களுடன் அளிக்கப்படுகிறது. ஃபோர்டு இந்த இயந்திரங்களை அனைத்து மாதிரிகளிலும் 5-வேகக் கைமுறை செலுத்துதல் விருப்பத்துடன் வழங்குகிறது.
ஃபோர்டு பிஎஸ் 6 எண்டெவர் மாதிரியை 10-வேக ஏடி பற்சக்கர பெட்டி பொருத்தப்பட்ட புதிய 2.0-லிட்டர் டீசல் இயந்திரத்துடன் (180பிஎஸ் மற்றும் 420என்எம்), அறிமுகப்படுத்தவுள்ளது. இப்போதைக்கு, பிஎஸ்4 எண்டெவர் 2.2-லிட்டர் மற்றும் 3.2-லிட்டர் டீசல் என இரண்டு இயந்திர விருப்பங்களைப் பெறுகிறது. 2.2-லிட்டர் இயந்திரம் 6-வேக எம்டி அல்லது 6-வேக ஏடி உடன் வழங்கப்படுகிறது, 3.2-லிட்டர் அலகு 6-வேக ஏடி உடன் மட்டுமே பொருத்தப்பட்டு வருகிறது. 2.2-லிட்டர் இயந்திரம் 160பிஎஸ் / 385என்எம் ஐ வெளியிடுகிறது, அதே போல் 3.2-லிட்டர் அலகு 200பிஎஸ் / 470என்எம் என மதிப்பிடப்படுகிறது.
இந்த பிஎஸ் 4 இயந்திரங்கள் பின்வருமாறு எரிபொருள் செயல்திறனைத் தருகின்றன:
-
ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல்- 20.4கேஎம்பிஎல்
-
ஃபோர்டு ஃபிகோ டீசல்- 25.5கேஎம்பிஎல்
-
ஃபோர்டு ஆஸ்பியர் பெட்ரோல்- 20.4கேஎம்பிஎல் (அம்பியன்ட், டிரெண்ட், டிரெண்ட்+); 19.4கேஎம்பிஎல் (டைட்டானியம், டைட்டானியம் +)
-
ஃபோர்டு ஆஸ்பியர் டீசல்- 26.1கேஎம்பிஎல்
-
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பெட்ரோல்- 19கேஎம்பிஎல்
-
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டீசல்- 24.4கேஎம்பிஎல்
-
ஃபோர்டு எண்டெவர் 2.2- 4x2 எம்டி 14.2கேஎம்பிஎல், ஏடி- 12.6கேஎம்பிஎல்
-
ஃபோர்டு எண்டெவர் 3.2 4x4 ஏடி- 10.6கேஎம்பிஎல்
மாதிரிகள் |
தற்போதைய விலை வரம்பு (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) |
ஃபிகோ |
ரூபாய் 5.23 லட்சத்திலிருந்து ரூபாய் 7.64 லட்சம் |
ஆஸ்பியர் |
ரூபாய் 5.98 லட்சத்திலிருந்து ரூபாய் 8.62 லட்சம் |
ஃப்ரீஸ்டைல் |
ரூபாய் 5.91 லட்சத்திலிருந்து ரூபாய் 8.36 லட்சம் |
எண்டெவர் |
ரூபாய் 29.2 லட்சத்திலிருந்து ரூபாய் 34.7 லட்சம் |
அனைத்து பிஎஸ்6 மாதிரிகளும் தங்கள் பிஎஸ்4 உடன் ஒப்பிடும்போது அதிக விலையுடன் காணப்படுகிறது. பிஎஸ்6 ஈக்கோஸ்போர்ட் அதனுடைய பிஎஸ்4 மாதிரியைக் காட்டிலும் ரூபாய் 13,000 அதிகமாக இருக்கும் நிலையில், ஃபிகோ, ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைல் ஆகியவற்றின் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கும் இதேபோன்ற விலை உயர்வைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம். எனினும், எண்டெவோரின் விலை அதிகளவு அதிகரிக்கும், ஏனெனில் இது ஒரு புதிய இயந்திரம் மற்றும் புதிய செலுத்துதல் விருப்பத்தைப் பெறும்.
இதற்கிடையில், கார் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய புதிய இணைய அணுகல் கார் தொழில்நுட்பமான ஃபோர்டு பாஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்6 மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அனைத்து மாதிரிகள் மாறும் அவற்றின் வகைகளிலும் இது தரமாகக் கிடைக்கும்.
மேலும் படிக்க: ஃபோர்டு எண்டெவர் டீசல்
0 out of 0 found this helpful