• English
  • Login / Register

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது

published on ஆகஸ்ட் 12, 2015 03:21 pm by அபிஜித் for போர்டு ஆஸ்பியர்

  • 15 Views
  • 1 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட், ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும் வகையில், இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடெங்கிலும் உள்ள எல்லா ஃபோர்டு டீலர்களிடமும் இந்த வாகனம் கிடைக்கும்.

முக்கிய சிறப்பம்சங்கள்: என்ஜின்கள்

  • இந்த காரில் 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என்று மூன்று வகையான என்ஜின் தேர்வுகளை ஃபோர்டு அளித்துள்ளது.
  • பெட்ரோல் என்ஜின்கள்: 1.5 TiVCT உடன் இணைந்த 6-ஸ்பீடு DCT; 112 PS சக்தி மற்றும் 136 Nm டார்க், 1.2-லிட்டர் TiVCT உடன் இணைந்த 5-ஸ்பீடு மேனுவல்; 88 PS சக்தி மற்றும் 112 Nm டார்க்
  • டீசல் மோட்டார்: 1.5 TDCi உடன் இணைந்த 5-ஸ்பீடு மேனுவல்; 100 PS சக்தி மற்றும் 215 Nm டார்க்

முக்கிய சிறப்பம்சங்கள்: உள்கட்டமைப்பு

  • கருப்பு மற்றும் வெளிறிய உட்புற நிற திட்டத்துடன் கூடிய பியானோ பிளாக் டிரிம்ஸ்
  • ஃபோர்டு SYNC சிஸ்டத்துடன் கூடிய ஏறி செல்லும் திரைகள், கீழான டிரிம்ஸில் உள்ள ஃபோர்டு மைடோக்
  • ப்ளூடூத் தொலைத்தொடர்பு, வாய்ஸ் கமாண்ட், AUX-in, USB-in, மியூசிக் ஸ்டீரிம்மிங்
  • முன்புறத்தில் பதிக்கப்பட்ட மெத்தை கொண்ட அரை பாக-பக்கெட் சீட்கள், பின்புறத்தில் அதிக இடவசதி கொண்ட சீட்கள்
  • ஸ்டீயரீங்கில் காணப்படும் கண்ட்ரோல்கள்
  • உங்கள் காருக்கு வேக கட்டுப்பாட்டை நிர்ணயிக்க உதவும் ஃபோர்டு மைகீ
  • பொருட்கள் வைக்க அதிக இடவசதி, சிறியளவிலான பாக்கெட்கள் மற்றும் துளைகள்
  • ஓட்டுநர் தகவல் திரையுடன் (டிரைவர் இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே) கூடிய கச்சிதமான இன்ஸ்ட்ரூமென்டேஷன் கிளஸ்டர்

முக்கிய சிறப்பம்சங்கள்: வெளி கட்டமைப்பு

  • வெளிபுற வண்ணம் 7 நிறங்களில் கிடைக்கிறது
  • இந்த பிரிவில் தரமானதாக அமைந்த 175/65 R14 டயர்கள்
  • கிரவுண்டு கிளியரன்ஸ் 174 மிமி, பூட் இடைவெளி 359 லிட்டர், திரும்பும் ஆரம் 4.9 மீ

பாதுகாப்பு

  • EPAS உடன் கூடிய ஃபுல் டிராஃப்ட் கம்பென்சேஷன் டெக்னாலஜி
  • தாழ்வான டிரிம்மில் அமைந்த தரமான ஓட்டுநர் மற்றும் பயணி ஏர்பேக்கள்.
  • மேல் முனை டிரிம்மில் 6- ஏர்பேக்கள்
  • ABS, EBD, (ESP, TCS மற்றும் HLA – ஆட்டோமேட்டிக் வகையில் மட்டும்)

பெட்ரோல்

ஆம்பியன்டி: ரூ.4,89,990/-

டிரென்ட்: ரூ. 5,76,990/-

டைட்டானியம்: ரூ. 6,69,990/-

டைட்டானியம் பிளஸ்: ரூ. 7,24,990/-

பெட்ரோல் ஆட்டோமேட்டிக்

டைட்டானியம்: ரூ.7,79,990/-

டீசல்

ஆம்பியன்ட்: ரூ.5,89,990/-

டிரென்ட்: ரூ. 6,76,990/-

டைட்டானியம்: ரூ. 7,69,990/-

டைட்டானியம் பிளஸ்: ரூ. 8,24,990/-

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Ford ஆஸ்பியர்

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience