• English
  • Login / Register

முதன்முதலாக அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

published on ஆகஸ்ட் 29, 2019 05:10 pm by sonny for ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் 2019-2023

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய தலைமுறை காம்பாக்ட் ஹாட்ச்பேக் விற்பனையாளர்களுக்கு இது விரைவில் கிடைக்கப்போகிறது

  • மூன்றாம் தலைமுறை கிராண்ட் i10, கிராண்ட் i10 நியோஸ் எனும் பெயரில் 20 ஆகஸ்ட் 2019ல் வெளியிடப்படவுள்ளது.

  • புதிய மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில்  சென்னையில் முதல் மாடலின் உற்பத்தி அதிவேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.

  • புதிய கிராண்ட் i10 நியோஸின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் புதிதாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.

  • எஞ்சினை பொறுத்த வரையில் அதே 1.2 லிட்டர் பெட்ரோல்/டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக தானியங்கு விருப்பத்தேர்வு வசதியும் (AMT option) சேர்க்கப்பட்டுள்ளது.

  • இதன் விலை ரூ.  5.2 லட்சம் முதல் ரூ . 7.7 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தற்போதுள்ள இரண்டாம் தலைமுறை மாடலும் விற்பனையில் இருக்கும்.

அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஹேட்ச்பேக் கிராண்ட் i10 நியோஸ் என்ற  புதியதாக நீட்டிக்கப்பட்ட பெயருடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முதல் நியோஸ் ஹுண்டாயின் திருப்பெரும்புதூர் உற்பத்தி ஆலையில் தயாராகிவிட்ட நிலையில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஹேட்ச்பேக் கிராண்ட் i10 நியோஸ் என்ற  புதியதாக நீட்டிக்கப்பட்ட பெயருடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முதல் நியோஸ் ஹுண்டாயின் திருப்பெரும்புதூர் உற்பத்தி ஆலையில் தயாராகிவிட்ட நிலையில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

இது கிராண்ட் i10 வரிசையில் மூன்றாம் தலைமுறை வாகனம் மற்றும் இது புதிய வெளிப்புற/உட்புற வடிவமைப்பை கொண்டுள்ளது. ஹூண்டாய் காஸ்காடிங் கிரில்லுடன் (Cascading grille) கூடிய பூமராங் வடிவ எல்.இ.டி DRL விளக்குகள் நியோஸின் வெளிப்புற மறுவடிவமைப்பில் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

Hyundai Grand i10 Old vs New: How Different Is The New Nios?

அதே சமயம், மற்ற ஹூண்டாய் மற்றும் கியா மாடல்களிலிருந்து புதிய முகப்புப்பெட்டியின் (Dashboard) அம்சங்கள் பெறப்பட்டுள்ளன. நீட்டிக்கப்பட்ட கருவி தொகுப்பில் (Instrument cluster) உள்ளடங்கிய மிகப்பெரிய தொடுதிரை தகவல்-கேளிக்கை அமைப்பு (infotainment system) மற்றும் புதிய வகை இயக்கு சக்கரம் (Steering wheel) போன்றவை அவற்றில் சில அம்சங்கள் ஆகும்.

நியோஸ் அதே பழைய 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களால் இயக்கப்படும் மேலும் இவை இரண்டிற்கும் புதிய தானியங்கு (AMT) விருப்பத்தேர்வு வாய்ப்பு இருக்கும். எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் டூயல் டோன் மற்றும் அஸ்டா என மொத்தம் 5 வகைகளில் இதை ஹூண்டாய் வழங்கவுள்ளது.

தொடர்புடைய தகவல்: ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸின் வகைகள், வண்ணங்கள் மற்றும் பவர்ட்ரெயின் விருப்பத்தேர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஹூண்டாய் புதிய கிராண்ட் i10 நியோஸை இரண்டாவது தலைமுறை கிராண்ட் i10 விற்பனையில் இருக்கும் போதே வெளியிடவுள்ளது. நியோஸின் விலை ரூ .5.2 லட்சம் முதல் ரூ .7.7 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி ஸ்விஃப்ட், இக்னிஸ், ஃபோர்டு ஃபிகோ மற்றும் நிசான் மைக்ரா போன்றவற்றுடன் போட்டியிடும்.

 

was this article helpful ?

Write your Comment on Hyundai கிராண்டு ஐ10 நிவ்ஸ் 2019-2023

2 கருத்துகள்
1
i
imran khan
Aug 12, 2019, 11:41:57 PM

I guess he was mentioning sporty

Read More...
    பதில்
    Write a Reply
    1
    C
    chandan sharma
    Aug 12, 2019, 5:32:12 PM

    Lovely car look spotty

    Read More...
      பதில்
      Write a Reply

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      trending ஹேட்ச்பேக் கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      • வாய்வே மொபிலிட்டி eva
        வாய்வே மொபிலிட்டி eva
        Rs.7 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • மாருதி பாலினோ 2025
        மாருதி பாலினோ 2025
        Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • டாடா டியாகோ 2025
        டாடா டியாகோ 2025
        Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • எம்ஜி 4 ev
        எம்ஜி 4 ev
        Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • மாருதி வாகன் ஆர்
        மாருதி வாகன் ஆர்
        Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
      ×
      We need your சிட்டி to customize your experience