ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்
போர்டு ஃபிகோ ஆஸ்பியர் க்கு published on aug 05, 2015 10:21 am by saad
- 10 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 4 மீட்டருக்கும் உயரம் குறைவான இந்த காரை, ஆகஸ்ட் 12 ஆம் தேதி அந்நிறுவனம் அறிமுகப்படுத்த போவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ரூ.30,000 முன்பணத்துடன், முன்பதிவு செய்யும் பணிகளை கடந்த ஜூலை 27 ஆம் தேதியே அந்நிறுவனம் தொடங்கிவிட்டது. இதன்மூலம் இந்த கார் வகையை சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர், ஹோண்டா அமேஸ், டாடா செஸ்ட் மற்றும் இதர இதே வகை கார்களுடன், ஃபிகோ ஆஸ்பயர் போட்டியிடும்.
மேற்கண்ட கார் வகையில், இந்த காரை ஒரு கவர்ச்சிகரமான பொருளாக மாற்ற சில கண்கவர் அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அது ஆஸ்டன் மார்டினின் பாணியிலான கிரில்கள், ஃபோர்டின் கைனிடிக் வடிவமைப்பு தத்துவத்தை அடிப்படையாக கொண்டு, ஃபோர்டு ஃபீஸ்டாவில் உள்ளதைப் போல வடிவமைக்கப்படிருக்கும்.. மேலும் தரமான இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் உயர் மாடலில் 6 ஏர்-பேக்குகள், ஃபோர்டு ஆப்லிங்க், ஸ்மார்ட்போன்களுக்கான டாக்கிங் மற்றும் சார்ஜிங் செய்ய மைஃபோர்டு டாக், ஃபோர்டு மைகீ மற்றும் பலவற்றை உட்கொண்ட எஸ்வைஎன்சி இன்ஃபோடெயின்மெண்ட் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கையில், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் பல வகையான என்ஜின் அமைப்புகளுடன் கிடைக்கலாம். இந்த சிறிய சேடன் 1.2 லிட்டர் 88 பிஎஸ் மோட்டார் மற்றும் முதன்மையான வகையில் 1.5-லிட்டர் அளிக்கும் 112 பிஎஸ் என்ற 2 டிஐ-விசிடி பெட்ரோல் என்ஜின் அமைப்புகளுடன் வெளியிடப்பட உள்ளது. இதில் 1.2-லிட்டர் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொறுத்தப்பட்டது. சக்தி வாய்ந்த 1.5 லிட்டர், இந்த பிரிவில் முதல் முறையாக 6-ஸ்பீடு இரட்டை-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டிருக்கும். மைலேஜை பொறுத்த வரை, பெட்ரோல் மற்றும் டீசல் வகைகள், முறையே லிட்டருக்கு 18.2 கி.மீ மற்றும் 25.8 கி.மீ அளிக்கும். இந்த வகையை சேர்ந்த கார்களின் போட்டியில், இது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஃபிகோ ஆஸ்பயரின் விலை ரூ.5.5 லட்சத்திற்கும் - ரூ.8.5 லட்சத்திற்கும் இடையே நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் பிளஸ் என்ற வெவ்வேறு அம்சங்களுக்கு ஏற்ப வெவ்வேறு துணைப் பெயர்களுடன் ஃபிகோ அஸ்பயர் களம் காண உள்ளது..
- Renew Ford Aspire Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful