சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஃபேஸ்லிஃப்டட் Rolls-Royce Cullinan அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ரோல்ஸ் ராய்ஸ் எஸ்யூவி ஆனது 2018 ஆம் ஆண்டில் உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு அதன் முதல் குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற்றுள்ளது. இது முன்பை விட இப்போது மிகவும் ஸ்டைலாகவும் ஆடம்பரமாகவும் மாறியுள்ளது.

  • ரோல்ஸ் ராய்ஸ் 2018 ஆம் ஆண்டு கல்லினன் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது.

  • புதிதாக அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி ஆனது ‘கல்லினன் சீரிஸ் II’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

  • வெளிப்புற புதுப்பிப்புகளில் ஷார்ப்பான LED DRLகள், ஆப்ஷனலான 23-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் அப்டேட்டட் எக்ஸாஸ்ட் அவுட்லெட் ஆகியவை அடங்கும்.

  • கேபினில் இப்போது இயற்கையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, அதே சமயம் டாஷ்போர்டு லே-அவுட் எந்தவித மாற்றமுமின்றி அப்படியே உள்ளது.

  • தற்போதைய மாடலில் உள்ள அதே 6.75 லிட்டர் V12 பெட்ரோல் இன்ஜின் தான் இதிலும் உள்ளது.

  • இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சொகுசு எஸ்யூவி பிரிவில் ஒரு புதிய உச்சத்தை கண்டுள்ளது. இப்போது, அதன் முதல் பெரிய புதுப்பிப்பைப் பெற்றுள்ளது, இது கல்லினன் சீரிஸ் II என பெயரிடப்பட்டுள்ளது. இது உள்ளேயும் வெளியேயும் மேம்பட்ட பாணியைக் கொண்டுள்ளது, தனிப்பட்ட வாடிக்கையாளர் விருப்பங்களுக்கு ஏற்ப அதன் விரிவான கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை வழங்குகிறது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் எஸ்யூவியில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்:

சிறப்பான வடிவமைப்பு புதுப்பிப்புகள்

2024 கல்லினனின் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் டிசைனில் நுட்பமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது இப்போது நேர்த்தியான LED ஹெட்லைட் கிளஸ்டர்கள், கூர்மையான மற்றும் தலைகீழான L-வடிவ LED DRLகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட முன் பம்பரில் ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய ஏர் இன்டேக்குகளை பெறுகிறது.

முதன்முறையாக, கல்லினன் கிரில்லுக்கான லைட்டிங் செட்டப்பை பெற்றுள்ளது, அவை பாண்டம் சீரிஸ் II-ல் உள்ளதைப் போலவே புதுப்பிக்கப்பட்டுள்ளன. மற்றொரு குறிப்பிடத்தக்க டிசைன் அதன் பம்பர் லைன் ஆகும், இது LED DRL-க்கு கீழே இருந்து தொடங்கி கிரில்லின் மையப்பகுதி வரை வரை நீண்டு, ஆழமற்ற 'V' வடிவத்தை உருவாக்குகிறது. ரோல்ஸ் ராய்ஸ் இதை நவீன விளையாட்டு படகுகளின் கூர்மையான வில் கோடுகளை ஒத்திருப்பதாக விவரிக்கிறது.

23-இன்ச் அலுமினிய வீல்களுக்கான ஆப்ஷன் உட்பட புதிய அலாய் வீல்கள் கிடைப்பதைத் தவிர, கல்லினன் பக்கவாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. பின்புறத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் மிகவும் குறைவே, இதில் மாற்றியமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் அவுட்லெட் மற்றும் பிரஷ்டு சில்வர் ஃபினிஷ் கொண்ட மாற்றியமைக்கப்பட்ட ஸ்கிட் பிளேட் ஆகியவற்றுடன் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் ஒரு புதிய எம்பரடர் ட்ரஃபிள் பெயிண்ட் ஆப்ஷனையும் வழங்கியுள்ளது, இது திடமான சாம்பல்-பழுப்பு நிறத்தில் உள்ளது. கூடுதலாக, மிகவும் தனித்துவமான தோற்றத்தை விரும்புவோருக்கு, பிளாக் பேட்ஜ் வெர்ஷனில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவியை வேறுபடுத்துகிறது, இது ஒரு தனித்துவமான தோற்றத்திற்கான பிளாக்-அவுட் எலெமென்ட்களை கொண்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கேபின் விவரங்கள்

வெளிப்புறத்துடன் ஒப்பிடும்போது ரோல்ஸ் ராய்ஸ் எஸ்யூவியின் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். ரோல்ஸ் ராய்ஸ் அதன் வரையறுக்கப்பட்ட போர்ட்ஃபோலியோ மற்றும் உயர் தரநிலைகள் காரணமாக வேறுபட்ட அணுகுமுறையை எடுக்கிறது. எனவே, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கல்லினனின் கேபின் ஒப்பீட்டளவில் சிறிய மாற்றங்களை மட்டும் தான் காண்கிறது, ஆனால் அது இப்போது டாஷ்போர்டின் மேல் பகுதி முழுவதும் முழு கண்ணாடி பேனலை உள்ளடக்கி உள்ளது, ரோல்ஸ் ராய்ஸின் ஸ்பிரிட் இன்டர்ஃபேஸ் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளேயுடன் கூடிய வழக்கமான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டைக் காணலாம். பயணிகள் பக்கத்தில் இரவில் உலகின் மெகாசிட்டிகளின் வானளாவிய கட்டிடங்களைக் குறிக்கும் கிராபிக்ஸ் கண்ணாடி பேனலுக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ள 7,000 லேசர் பொறிக்கப்பட்ட புள்ளிகளால் ஒளிரும்.

புதிய கல்லினனின் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் டேஷ்போர்டு டிஸ்ப்ளே யூனிட் ஆகும். இது ஒரு அனலாக் கடிகாரத்தையும் அதன் கீழே உள்ள 'ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி' லோகோவின் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட மினியேச்சர் வெர்ஷனையும் காட்டுகிறது.

புதிய கல்லினனின் உரிமையாளர்கள் எஸ்யூவியின் இன்டீரியர் பேலட் அல்லது வெளிப்புற ஃபினிஷினை பூர்த்தி செய்யும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களின் நிறத்தைத் தனிப்பயன் அமைப்பதற்கான ஆப்ஷன் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ், மூங்கிலால் ஆன துணி, திறந்த-துளை மரத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட பேனல்கள் மற்றும் கையால் வடிவமைக்கப்பட்ட வெனீர் 'இலைகள்' உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையும் சிந்தனையுடன் கேபினில் இணைத்துள்ளது. 'டூயலிட்டி ட்வில்' என்று அழைக்கப்படும் புதிய அப்ஹோல்ஸ்டரி, 20 மணிநேரத்தில் தயாரிக்கப்படும், 22 லட்சம் தையல்கள் மற்றும் கிட்டத்தட்ட 20 கிமீ நூல்களை இது உள்ளடக்கியது, மேலும் சீரான மற்றும் துல்லியத்திற்காக சிறப்பு லேசர்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2024 Porsche Panamera இந்தியாவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது

காரில் உள்ளே உள்ள வசதிகள்

கல்லினனின் ஆடம்பரமான உட்புறம் பல உள் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும். டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன்கள் மற்றும் மல்டி-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஃபேன்சி நர்ல்ட் சுவிட்ச் கியர் ஆகியவற்றைக் கொண்டு, கல்லினன் பின்புற பொழுதுபோக்கு காட்சிகள், கூலிங் மற்றும் ஹீட்டிங் செயல்பாடுகளுடன் கூடிய சீட் மசாஜ், சப்வுாஃபருடன் கூடிய 18-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், கனெக்டட் கார் டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற அம்சங்களையும் கல்லினன் பெறுகிறது.

பவர்டிரெயின் பற்றிய விவரங்கள்

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II-ஐ ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவியை போன்றே அதே 6.75 லிட்டர் V12 பெட்ரோல் இன்ஜினுடன் வழங்குகிறது. புதுப்பிக்கப்பட்ட பவர் அவுட்புட் வெளியீடு பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், முந்தைய மாடலில், இந்த பவர்டிரெய்ன் 571 PS மற்றும் 850 Nm டார்க்கை வழங்கியது. கல்லினன் சீரிஸ் II ஆல்-வீல் டிரைவ் (AWD) மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. கல்லினன் சீரிஸ் II இன் ஸ்போர்ட்டியர் பிளாக் பேட்ஜ் வெர்ஷனுக்கு உச்ச செயல்திறன் புள்ளிவிவரங்கள் 600 PS மற்றும் 900 Nm பவரை கொண்டுள்ளது.

சுவாரஸ்யமாக கல்லினன் உரிமையாளர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே காரை ஓட்டுகிறார்கள் என்று ரோல்ஸ் ராய்ஸ் கூறியுள்ளது. எனவே சொகுசு எஸ்யூவியின் டிரைவிங் டைனமிக்ஸ், பின்பக்க பயணிகளுக்காக மட்டுமல்லாமல் டிரைவருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரைவரின் அனுபவத்தை மேம்படுத்த அதிநவீன அடாப்டிவ் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் மற்றும் போட்டியாளர்கள்

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைய மாடலை விட இதன் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இது பென்ட்லே பென்டைய்கா மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் SV போன்ற சொகுசு எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: Rolls-Royce Cullinan ஆட்டோமேட்டிக்

r
வெளியிட்டவர்

rohit

  • 74 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Rolls-Royce குல்லினேன்

Read Full News

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை