அறிமுகமானது ஃபேஸ்லிஃப்ட் Hyundai Alcazar, முன்பதிவும் தொடங்கியது
rohit ஆல் ஆகஸ்ட் 22, 2024 05:37 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
புதிய அல்கஸார் காரை பார்க்கும் போது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா மற்றும் எக்ஸ்டெர் ஆகியவற்றிலிருந்து வடிவமைப்புக்காக பல விஷயங்களை கடன் வாங்கியது போல தெரிகிறது. மேலும் இப்போது முன்பை விட போலரைஸ்டு ஆக தோற்றமளிக்கிறது.
-
ஹூண்டாய் நிறுவனம் 2021 -ஆம் ஆண்டு அல்கஸார் எஸ்யூவி -யை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது.
-
ஹூண்டாய் 2024 மாடலை 4 வேரியன்ட்களில் வழங்குகிறது: எக்ஸிகியூட்டிவ், பிரெஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர்.
-
இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ரூ.25,000 செலுத்தி ஆன்லைனில் மற்றும் ஹூண்டாய் டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம்.
-
புதிய வடிவிலான கிரில், புதிய ஆல்-எல்இடி லைட்ஸ் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றை பார்க்க முடிகிறது.
-
கேபினில் டேன் கலர் அப்ஹோல்ஸ்டரி உள்ளது ; 6- மற்றும் 7-இருக்கை அமைப்புடன் இது தொடர்ந்து கிடைக்கும்.
-
டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; பழைய மாடலின் அதே பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட்களுடன் கிடைக்கலாம்.
-
செப்டம்பர் 9 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. விலை ரூ. 17 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் அல்கஸார் கார் வெளியாகும் தேதி -யின் விவரங்களை நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்த சிறிது நேரத்திலேயே ஹூண்டாய் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவியின் வெளிப்புற வடிவமைப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் ஆன்லைனிலும் அதன் பான்-இந்திய டீலர்ஷிப்களிலும் 25,000 ரூபாய்க்கான டோக்கன் தொகைக்கு 2024 அல்காஸருக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. எக்ஸிகியூட்டிவ், பிரெஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் என நான்கு வேரியன்ட்களில் புதிய அல்காஸரை ஹூண்டாய் விற்பனை செய்யவுள்ளது.
புதிய மற்றும் மிரட்டலான வெளிப்புறம்
சமீபத்திய ஹூண்டாய் கார்களை போலவே இதன் வெளிப்புறத்தை ஹூண்டாய் மாற்றியமைத்துள்ளது. ஃபேஸ்லிப்டட் அல்கஸார் இப்போது மிகவும் போலரைஸ்டு ஆக தோற்றமளிக்கிறது. மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எஸ்யூவி உடன் வழங்கப்படும் மிகப்பெரிய பனோரமிக் சன்ரூஃப்பையும் டீஸர் படம் காட்டுகிறது. கிரெட்டா மற்றும் எக்ஸ்டர் போன்ற புதிய கார்களில் உள்ள உள்ள அதே ஸ்பிளிட்-LED லைட்டிங் செட்டப்பை இது கொண்டுள்ளது. மேலும் இப்போது இரண்டு முனைகளிலும் H-வடிவ கனெக்டட் LED DRL ஸ்ட்ரிப் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல்-பேரல் ஹெட்லைட்கள் புதிய வடிவிலான LED DRL -களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மற்றும் இப்போது செவ்வக-வடிவ ஸ்லேட்டட் கிரில்லை பக்கவாட்டில் உள்ளது. முன்பக்க பம்பர் ஒரு பெரிய சில்வர் சரவுண்டை கொண்டுள்ளது மற்றும் ஏர் டேமின் மையத்தில் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -க்கான ரேடார் உள்ளது.
பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. நீங்கள் காணக்கூடிய ஒரே பெரிய வித்தியாசம், புதிதாக வடிவமைக்கப்பட்ட மல்டி-ஸ்போக், டூயல்-டோன் அலாய் வீல்களை மட்டுமே ஆகும். பக்கவாட்டு படிகள் இப்போது நீக்கப்பட்டுவிட்டன. மேலும் இப்போது இரண்டு பக்கவாட்டு பகுதிகளிலும் பெரிய ஸ்கிட் பிளேட் உடன் வருகிறது. பழைய மாடலுடன் ஒப்பிடும்போது பின்புற குவார்ட்டர் கிளாஸ் பேனல் பேனல் மிகவும் பெரியதாகவும் அகலமாகவும் மாறியுள்ளது.
பின்புறத்தில் புதிய எஸ்யூவி ஆனது ஒரு ஷார்ப்பான தோற்றமுடைய கனெக்டட் எல்இடி டெயில் லைட்களை கொண்டுள்ளது. அதன் கீழே 'அல்கஸார்' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய சில்வர் சரவுண்ட் உடன் ட்வீக் செய்யப்பட்ட பம்பர் உடன் வந்தாலும் கூட டூயல்-டிப் எக்ஸாஸ்ட் முன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ளதை போலவே உள்ளது.
புதிய எமரால்டு மேட் ஷேடு உட்பட ஒன்பது வெளிப்புற எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களில் எஸ்யூவி கிடைக்கும்.
மேலும் பார்க்க: Citroen Basalt மற்றும் Citroen C3 ஏர்கிராஸ்: வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பு ஒப்பீடு
இன்ட்டீரியர் பற்றிய விவரங்கள் ?
ஹூண்டாய் கிரெட்டாவின் கேபின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது
சமீபத்திய டீஸர் படங்கள் எஸ்யூவி -ன் உட்புறத்தை பார்க்க முடியவில்லை. என்றாலும் கூட அதில் டேன் கலர் அப்ஹோல்ஸ்டரி இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதன் டேஷ்போர்டு செட்டப் ஒரே மாதிரியாக இருக்கும் அல்லது புதிய கிரெட்டாவை போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளே மேம்பட்ட பிரீமியம் அனுபவத்தை கொடுக்கும். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்கஸார் 6- மற்றும் 7-சீட்டர் லேஅவுட்களில் தொடர்ந்து கிடைக்கும்.
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள்
ஹூண்டாய் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி -யில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மற்றொன்று டிரைவர்ஸ் டிஸ்ப்ளே) மற்றும் டூயல்-ஜோன் ஏசி ஆகிய வசதிகளை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவை வசதிகளும் இருக்கலாம்.
பாதுகாப்புக்காக ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்கஸார் 40 வசதிகளை ஸ்டாண்டர்டாகவும், மொத்தம் 70 -க்கும் மேற்பட்ட வசதிகளையும் பெறுகிறது. 6 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கிரெட்டாவில் வழங்கப்பட்டுள்ள அதே ADAS தொகுப்பை இதுவும் பெறும்.
இது என்ன இன்ஜின் ஆப்ஷன்களை பெறும்?
தற்போதைய-ஸ்பெக் மாடலில் உள்ள அதே இன்ஜின்களுடன் புதிய அல்கஸார் கிடைக்கும். அவற்றின் தொழில்நுட்ப விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
விவரங்கள் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
160 PS |
116 PS |
டார்க் |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
வெளியீடு, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 ஹூண்டாய் அல்கஸார் ஆனது செப்டம்பர் 9 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை ரூ. 17 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது டாடா சஃபாரி, மஹிந்திரா XUV700, மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: அல்கஸார் ஆட்டோமெட்டிக்