எக்ஸ்க்ளூசிவ்: இந்தியாவிற்கான Mercedes-Benz EQA-வின் விவரங்கள் ஜூலை 8 ஆம் தேதி அறிமுகத்திற்கு முன்னதாகவே வெளியாகியுள்ளன
published on ஜூலை 03, 2024 06:43 pm by dipan for மெர்சிடீஸ் eqa
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
1.5 லட்சம் டோக்கன் பேமெண்ட்டுடன் மெர்சிடிஸ் பென்ஸ் EQA காரின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது
-
GLA எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்ட ஆல்-எலக்ட்ரிக் வெர்ஷனான EQA, இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸின் மிகவும் விலை குறைவான EV ஆக இருக்கும்.
-
இது ஒரு சிங்கிள் 250+ வேரியன்ட்களில் வழங்கப்படும்.
-
இந்த வேரியன்டில் 70.5 கிலோவாட் பேட்டரி பேக் மற்றும் 190 PS மற்றும் 385 Nm டார்க்கை உருவாக்கும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
-
இது 560 கிமீ வரை WLTP-மதிப்பிடப்பட்ட ரேஞ்சை கொண்டுள்ளது.
-
GLA உடன் ஒப்பிடுகையில், இது புதிய ஹெட்லைட்கள், முன்பக்க கிரில், பெரிய வீல்கள் மற்றும் இணைக்கப்பட்ட டெயில்லைட்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
-
உட்புறங்கள் GLA-வைப் போலவே உள்ளது, இருப்பினும் டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரியுடன் தனித்து நிற்கிறது.
-
அம்சங்களைப் பொறுத்தவரை, இது இரண்டு 10-இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 12-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
-
ஜூலை 8 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.69 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் அதன் மிகவும் மலிவு விலை EV-ஐ அறிமுகப்படுத்த உள்ளது, EQA, இது GLA எஸ்யூவியின் முழு எலக்ட்ரிக் வெர்ஷனாகும். ஜூலை 8 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இந்தியா-ஸ்பெக் மெர்சிடிஸ் பென்ஸ் EQA-இன் பிரத்யேக விவரங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இது பெரிய பேட்டரி பேக் பொருத்தப்பட்ட சிங்கள் 250+ வேரியண்டில் இந்தியாவில் கிடைக்கும். வரவிருக்கும் என்ட்ரி-லெவல் மெர்சிடிஸ் EV -இன் விவரங்கள் இதோ:
பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்
இந்தியாவில் உள்ள EQA 250+ ஆனது 70.5 கிலோவாட் பேட்டரி பேக் மற்றும் ஃப்ரண்ட் ஆக்ஸில் பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டாரைப் பெறும், அதன் விவரங்கள்:
விவரங்கள் |
மெர்சிடிஸ் பென்ஸ் EQA 250+ |
பேட்டரி பேக் |
70.5 கிலோவாட் |
எலெக்ட்ரிக் மோட்டார் |
1 |
பவர் |
190 PS |
டார்க் |
385 Nm |
ரேஞ்ச் |
560 கி.மீ வரை (WLTP) |
டிரைவ்டிரெய்ன் |
ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் (FWD) |
செயல்திறனை பொறுத்தவரை இந்த EV, 8.6 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். சர்வதேச அளவில், மற்ற வேரியன்ட்களும் டூயல் மோட்டார் அமைப்புடன் சிறிய 66.5 கிலோவாட் பேட்டரி பேக்கின் ஆப்ஷனை வழங்குகின்றன.
சார்ஜிங்கை பொறுத்தவரையில் இது 11 கிலோவாட் AC சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இது 7 மணி நேரம் 15 நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். EV ஆனது 100 கிலோவாட் DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, 35 நிமிடங்களில் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
வெளிப்புறம்
வரவிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் EQA ஆனது புதிய பிளாக்-அவுட் ஹெட்லைட்களை க்ரில் மேல் LED லைட் பார்களை கொண்டுள்ளது, அதனுடன் மெர்சிடிஸ் பென்ஸ் GLA-இல் இருந்து வேறுபட்ட இணைக்கப்பட்ட டெயில் லைட் யூனிட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃப்ரண்ட் கிரில் பிளாங்க்-ஆஃப் மற்றும் கிளாஸி பிளாக் நிறத்தில் சில்வர் நட்சத்திர எலமென்ட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. EQA 19-இன்ச் அலாய் வீல்களில் பயணிக்கிறது, இது GLA-இல் வழங்கப்படும் 18-இன்ச் யூனிட்களில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
இது போலார் ஒயிட், நைட் பிளாக், காஸ்மோஸ் பிளாக், மவுண்டன் கிரே, ஹைடெக் சில்வர், ஸ்பெக்ட்ரல் ப்ளூ போன்ற எட்டு கலர்களிலும் மற்றும் படகோனியா ரெட் மெட்டாலிக் மற்றும் மவுண்டன் கிரே மேக்னோ ஆகிய இரண்டு சிறப்பு மேனுபேக்ச்சர் பெயிண்ட் ஸ்கீம் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
உட்புறம், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
மெர்சிடிஸ் பென்ஸ் EQA-இன் உட்புறம் GLA போன்ற டேஷ்போர்டு அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு தனித்துவமான டூயல்-டோன் ரோஸ் கோல்ட் மற்றும் டைட்டானியம் கிரே பேர்ல் தீம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்திய EQA-இல் உள்ள முக்கிய அம்சங்களில் இரண்டு 10-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு), ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 12-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், டூயல்-ஜோன் ஏசி மற்றும் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். இது லும்பர் சப்போர்ட்டுடன் பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மெமரி சீட்களையும் வழங்குகிறது.
பயணிகளின் பாதுகாப்பிற்காக இது 7 ஏர்பேக்குகள், பார்க் அசிஸ்ட் மற்றும் பிளைண்ட் ஸ்போர்ட் அசிஸ்டுடன் கூடிய 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பாதுகாப்பு வசதிகளை பெறும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மெர்சிடிஸ் பென்ஸ் EQA-க்கான முன்பதிவுகள் ரூ. 1.5 லட்சம் டோக்கன் அட்வான்ஸூடன் தொடங்கியுள்ளன. இது வோல்வோ XC40 ரீசார்ஜ், வோல்வோ C40 ரீசார்ஜ், BMW iX1 மற்றும் கியா EV6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இது ரூ. 69 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெகுலர் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
0 out of 0 found this helpful