சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

எக்ஸ்க்ளூசிவ்: டாடாவை பின்பற்றும் கியா நிறுவனம் ! என்ன செய்யப்போகிறது தெரியுமா ?

க்யா கேர்ஸ் க்காக ஜனவரி 27, 2025 07:59 pm அன்று anonymous ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

கேரன்ஸ் -ன் ஃபேஸ்லிஃப்ட் உள்ளே அதிக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தற்போதைய கேரன்ஸ் உடன் சேர்த்து விற்பனை செய்யப்படும்.

கியா நிறுவனம் கேரன்ஸ் -க்கு ஒரு பெரிய அப்டேட்டை வழங்க உள்ளது. 2022 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இது முதல் அப்டேட் ஆகும். வடிவமைப்பு மற்றும் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தபோதிலும் இதற்கு ஒரு ஜெனரேஷன் அப்டேட் கொடுக்கப்படாது என தெரிகிறது. மேலும் தற்போதைய மாடலுடன் இதுவும் விற்கப்படும். இந்த அணுகுமுறை புதியது அல்ல டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பலேனோ கார்களில் இதே வழிமுறை பின்பற்றப்பட்டதை பார்க்க முடிந்தது

இரண்டு கார்களின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவை புதிய தலைமுறை மாடல்கள் இல்லை.

இந்த கட்டுரையில் 2025 கியா கேரன்ஸ் அதே போன்ற உத்தியை எவ்வாறு பின்பற்றுகிறது என்பதை பார்ப்போம்.

2025 கியா கேரன்ஸ் வடிவமைப்பில் உள்ள செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

ஆன்லைனில் வெளியான ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் பார்க்கும் போது வரவிருக்கும் கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் LED DRL -கள், புதிய வடிவிலான ஹெட்லைட்கள், புதிய வடிவிலான அலாய் வீல்கள் மற்றும் ட்வீக் செய்யப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்களுடன் புதிய வெளிப்புறத்தைக் கொண்டிருக்கும். இந்த அப்டேட்களால் 2025 கேரன்ஸ் தற்போதைய மாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும், ஆனால் இது புதிய ஜெனரேஷன் அப்டேட் ஆக கருதப்படாது.

2023 ஆம் ஆண்டில் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டுடன் இதேபோன்ற அணுகுமுறையை பின்பற்றியது. ஸ்பிலிட் ஹெட்லைட்கள், ஸ்போர்டியர் அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் எல்இடி டெயில் லைட்கள் கொண்ட நவீன வடிவமைப்பில் இருந்தது. அதேபோல் 2022 மாருதி பலேனோ அப்டேட்டின் போதும் அதன் வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததன. இது மிகவும் ஆக்ரோஷமானதாகத் தோன்றியது. ஆனால் இது ஒரு புதிய-ஜென் மாடலாக அடையாளம் காட்டப்படவில்லை.

2025 கியா கேரன்ஸ் காரின் இன்டீரியரில் உள்ள அப்டேட்கள்

2025 கியா கேரன்ஸ் உள்ளே இருந்து எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் சரிவரத் தெரியவில்லை என்றாலும் வெளிப்புற வடிவமைப்பைப் போலவே இது உட்புறத்திலும் பெரிய மாற்றங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வடிவிலான சென்டர் கன்சோல் மற்றும் டாஷ்போர்டு, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பல வசதிகளை கொண்டிருக்கும். புதுப்பிக்கப்பட்ட உட்புற கலர் ஸ்கீம் மற்றும் புதிய வடிவிலான ஸ்டீயரிங் ஆகியவை கொடுக்கப்படலாம்.

மேலும் பார்க்க: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் டாடா கர்வ் EV: விவரங்கள் ஒப்பீடு

2025 கியா கேரன்ஸில் சேர்க்கப்படவுள்ள புதிய வசதிகள்

2025 கேரன்ஸ், 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, இரண்டாவது வரிசை பயணிகளுக்கான சீட் வென்டிலேஷன், ஒரு பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா போன்ற புதிய வசதிகளை சமீபத்தில் வெளியிடப்பட்ட கியா சைரோஸிடமிருந்து கடன் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெவல்-2 ADAS. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 8-ஸ்பீக்கர் BOSE சவுண்ட் சிஸ்டம், ஏர் ஃபியூரிபையர், பின் இருக்கை என்டர்டெயின்மென்ட் செட்டப் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் போன்ற வசதிகள் அப்படியே இருக்கும்.

பாதுகாப்புக்காக 2025 கேரன்ஸ் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 5 ஏர்பேக்குகளுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் அதன் சேசிஸில் செய்யப்பட்டுள்ள வலுவூட்டல்களால் சிறந்த பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெறக்கூடும்.

2025 கியா கேரன்ஸ் இன்ஜின் ஆப்ஷன்கள்

தற்போதைய மாடலை போலவே 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகியவற்றுடன்ன்2025 கேரன்ஸையும் கியா வழங்க வாய்ப்புள்ளது. மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஜின் ஆப்ஷன்

1.5 லிட்டர் N/A பெட்ரோல்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர் / டார்க்

115 PS/ 144 Nm

160 PS/ 253 Nm

116 PS/ 250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

2025 கியா கேரன்ஸ் விலை

2025 கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ.11.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி இது ரூ. 10.60 லட்சம் முதல் ரூ. 19.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தற்போதைய கேரன்ஸ் உடன் விற்பனை செய்யப்படும்.

கியா நிறுவனம் ஆகஸ்ட் 2025 -க்குள் கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி எர்டிகா, மாருதி XL6, மற்றும் டொயோட்டா ரூமியான் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும். மேலும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மற்றும் மாருதி இன்விக்டோ ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Kia கேர்ஸ்

P
prafull kumar
Jan 27, 2025, 2:35:35 PM

test coments

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
Rs.26.90 - 29.90 லட்சம்*
Rs.63.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.10 - 8.97 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.10.60 - 19.70 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை