சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

எக்ஸ்க்ளூஸிவ்: இந்தியாவில் 2025 Skoda Kodiaq சோதனை செய்யப்படும் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

published on ஜூன் 21, 2024 01:37 pm by samarth for ஸ்கோடா கொடிக் 2024

லேட்டஸ்ட் ஸ்பை ஷாட் எஸ்யூவி -யின் வெளிப்புறத்தை முழுமையாக காட்டுகிறது. ஸ்பிளிட் ஹெட்லைட் டிசைன் மற்றும் C-வடிவ ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்களை பார்க்க முடிகிறது.

  • புதிய தலைமுறை ஸ்கோடா கோடியாக் 2023 ஆண்டின் இரண்டாம் பாதியில் உலகளவில் அறிமுகமானது.

  • 20-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் சி-பில்லரை நோக்கி உயரும் பேஸ் விண்டோலைன் ஆகியவற்றை மற்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களாக பார்க்கலாம்.

  • உள்ளே 13-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகளுடன் அப்டேட்டட் டேஷ்போர்டை இது கொண்டிருக்கும்.

  • பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்படலாம்.

  • சர்வதேச அளவில் இது பிளக்-இன் ஹைப்ரிட் உட்பட பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

  • இந்தியாவில் 2025 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ 40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா கோடியாக் கடந்த ஆண்டு உலகளவில் அறிமுகமானது. இப்போது இந்திய சாலைகளில் எந்த வித மறைப்பும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதல் முறையாக வெளியாகியுள்ள ஸ்பை ஷாட்களில் இருந்து நமக்கு தெரிய வரும் கூடுதல் விவரங்களை இங்கே பார்ப்போம்.

தெரிய வரும் எக்ஸ்ட்டீரியர் விவரங்கள்

ஸ்பை ஷாட்டில் சிக்கிய கார் வொயிட் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டிருந்தது. சிக்னேச்சர் பட்டர்ஃபிளை கிரில் மற்றும் புதிய ஸ்பிளிட் ஹெட்லைட் செட்டப் உடன் ஸ்கோடா எஸ்யூவியின் புதிய வெளிப்புறத்தை வடிவமைத்துள்ளது. கீழே ஒரு தேன்கூடு வடிவத்துடன் புதிய வடிவிலான பம்பர் உள்ளது. மேலும் அது பம்பரின் பக்கங்களில் வெர்டிகல் ஏர் டேம்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிதாக வடிவமைக்கப்பட்ட 20-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் சி-பில்லருக்கு அருகில் உயரும் பேஸ் விண்டோலைன் ஆகியவை குறிப்பிடத்தக்க மற்ற மாற்றங்களாகும். பின்புறத்தில் புதிய C வடிவ ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்ஸ் மற்றும் புதிய பம்பர் வடிவமைப்பு உள்ளது.

உட்புறம் மற்றும் பாதுகாப்பு

கேபின் க்ளோபல்-ஸ்பெக் மாடலை போலவே இருக்க வாய்ப்புள்ளது. இதில் பல லேயர்டு டேஷ்போர்டு மற்றும் ஸ்டாண்டர்டான பொருட்களும் உள்ளன.

இன்ஸ்ட்ரூமென்ட்டை பொறுத்தவரையில் இது ஒரு ஃப்ரீஸ்டாண்டிங் 13-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், கூல்டு மற்றும் ஹீட்டட் ஃபங்ஷன் உடன் பவர்டு முன் இருக்கைகள், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகிறது.

பயணிகளின் பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற ஆட்டோமேட்டட் எமர்ஜென்ஸி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், லேன் அசிஸ்ட் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் ஃபங்ஷன் ஆகியவை உள்ளன.

மேலும் பார்க்க: புதிதாக வெளியிடப்பட்ட 2024 ஸ்கோடா கோடியாக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் இங்கே

பவர்டிரெய்ன்

சர்வதேச அளவில், ஸ்கோடா புதிய தலைமுறை கோடியாக்கை பல்வேறு பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் வழங்குகிறது, இதில் 25.7 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் பிளக்-இன் ஹைப்ரிட் 100 கிமீ மின்சாரம் மட்டும் வரம்பை செயல்படுத்துகிறது. விரிவான விவரக்குறிப்புகளுக்கு, அனைத்து பவர்டிரெய்ன் விருப்பங்களையும் இங்கே தொகுத்துள்ளோம்:

1.5-லிட்டர் TSI மைல்ட்-ஹைப்ரிட்

2 லிட்டர் TSI

2 லிட்டர் TDI

1.5 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட்

பவர்

150 PS

204 PS

150 PS/193 PS

204 PS

டார்க்

250 Nm

320 Nm

360 Nm/ 400 Nm

350 Nm

டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்

7-ஸ்பீடு DCT

7-ஸ்பீடு DCT

7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு DCT

டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்

ஃபிரன்ட் வீல் டிரைவ்

ஆல்-வீல் டிரைவ்

ஃபிரன்ட் வீல் டிரைவ் / ஆல்-வீல் டிரைவ்

ஃபிரன்ட் வீல் டிரைவ்

இருப்பினும் இந்த பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் எவையெல்லாம புதிய தலைமுறை கோடியாக்குடன் இந்திய சந்தையில் கிடைக்கும் என்ற விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு, விலை மற்றும் போட்டியாளர்கள்

இந்தியாவில் புதிய தலைமுறை ஸ்கோடா கோடியாக் 2025 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.40 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். புதிய ஸ்கோடா எஸ்யூவியானது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன், மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.

வாகனங்கள் தொடர்பாக உடனடி அப்டேட் வேண்டுமா? தயவுசெய்து கார்தேகோ வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: ஸ்கோடா கோடியாக் ஆட்டோமெட்டிக்

s
வெளியிட்டவர்

samarth

  • 49 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஸ்கோடா கொடிக் 2024

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை