யூரோ NCAP 2015 விருதுகள்: பெரிய குடும்பத்திற்கான பாதுகாப்பான காராக ஜாகுவார் XE தேர்வு
published on பிப்ரவரி 02, 2016 02:43 pm by bala subramaniam for ஜாகுவார் எக்ஸ்இ 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜாகுவாரின் 3-சீரிஸின் போட்டியாளரான ஜாகுவார் XE, யூரோ NCAP-யின் பெரிய குடும்பத்திற்கான கார் பிரிவில் (லார்ஜ் ஃபேமலி கார் கேட்டகிரி) முதலிடத்தை பெற்று, 2015 ஆம் ஆண்டிற்கான விருதுகளில் கிளாஸ் கார்களில் மதிப்பு மிகுந்த சிறந்தது (பிரஸ்டீஜியஸ் பெஸ்ட்) என்ற விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யூரோ NCAP சோதனைகளில், XE-க்கு அதிகபட்சமாக 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது. இதனுடன் XE-ல் உயர்தர நிலையிலான நேர்முக (ஆக்டிவ்) மற்றும் மறைமுக (பேஸ்சீவ்) பாதுகாப்பு அமைப்புகளை கொண்டுள்ளதாக, யூரோ NCAP தரப்பில் புகழப்பட்டது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்த ஜாகுவார் XE, இந்தியாவிற்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஜாகுவார் XE, XF, F-பேஸ் ஆகியவற்றின் வெஹிக்கிள் லைன் இயக்குனர் திரு.கெவின் ஸ்ட்ரைடு கூறுகையில், “இப்பிரிவில் டிரைவரின் காரை வடிவமைக்க நாங்கள் முடிவு செய்தோம். அதே நேரத்தில் அது பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிலும் தனிச்சிறப்புக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இதனுடன் எங்களின் மிகவும் மேம்பட்ட தொழிற்நுட்பத்துடன் கூடிய உயர்தரமான அலுமினியம் கட்டிடக்கலையும் (ஆர்ச்சிடெக்சர்) இணைந்த போது, எங்களின் எல்லா இலக்குகளையும் எட்டி சேர முடிந்தது. வாகன இயக்கவியல் (வெஹிக்கிள் டைனாமிக்ஸ்) பிரிவில் XE ஏற்கனவே திறனளவு மிகுந்ததாக தன்னை நிரூபித்துள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த யூரோ NCAP-யின் விருது மூலம் சிறப்பான பாதுகாப்பையும் அளிக்கிறோம் என்பதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்றார்.
புதிய முழுநீள முன்பக்க மோதல் சோதனையை முதல் முறையாக பயன்படுத்திய யூரோ NCAP-யின் 2015 பரிசோதனை நெறிமுறைகள் மிகவும் கடினமாக இருந்த போதிலும், இதன் இடையேயும் XE-க்கு 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று ஜொலித்துள்ளது. இதிலுள்ள லேசான, அதே நேரத்தில் கடினமான மேம்பட்ட அலுமினியம் கட்டிடக்கலை மற்றும் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம் ஆகியவையே இதற்கான காரணங்கள் ஆகும். மேலும் இந்த ஜாகுவார் XE, வயதில் மூத்த பயணிகளின் பாதுகாப்பு (அடல்ட் அக்குபென்ட் புரோட்டேக்ஷன்), பாதசாரி பாதுகாப்பு மற்றும் சேஃப்டி அசிஸ்ட் ஆகிய பிரிவுகளில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளது. இதற்கான முக்கிய காரணம், வரிசைப்படுத்தப்பட்ட (டிப்ளோயபிள்) போனட் மற்றும் ஆட்டோநோமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் உள்ளிட்டவை ஆகும்.
இது குறித்து யூரோ NCAP-யின் பொதுச் செயலாளர் திரு.மைக்கேல் வான் ரேட்டின்ஜென் கூறுகையில், “உயர் நிலையில் அமைந்த பயணிகள் பாதுகாப்பு மற்றும் அவாய்டென்ஸ் டெக்னாலஜி ஆகியவற்றை அளிக்கும் ஜாகுவார் XE-க்கு, யூரோ NCAP உயர் மதிப்பை அளித்துள்ளது. மேலும் பெரிய குடும்பத்திற்கான கார் பிரிவில், 2015 ஆம் ஆண்டின் பிரிவிலேயே சிறந்தது என்று XE-யை பாராட்டியுள்ளது. எல்லா முக்கிய சேஃப்டி அசிஸ்ட் அம்சங்களை கொண்ட தரமான உபகரணங்களை உருவாக்கிய ஜாகுவார் நிறுவனத்தை, குறிப்பாக யூரோ NCAP பாராட்டுகிறது” என்றார்.
மேலும் வாசிக்க