மஹிந்த்ரா நிறுவனம் - பல வகையான புதிய பெட்ரோல் இஞ்ஜின்களை விரைவில் வரவிருக்கும் S101 காரில் அறிமுகம் செய்யவுள்ளது
மஹிந்த்ரா நிறுவனம் சேங்க் யாங்க்குடன் இணைந்து உருவாக்கிய பல வகையான பெட்ரோல் இஞ்ஜின்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தவுள்ளதை, TUV 300 வெளியீட்டின் போது, உறுதி செய்தது.
மஹிந்த்ரா நிறுவனம் தனது, மிகவும் எதிர்பார்க்கப்பட்டட கச்சிதமான SUV ரக TUV 300 காரை நேற்று வெளியிட்டது. அதன் பின், முதன் முறையாக அவர்களது தொழிற்சாலையிலேயே உருவாக்கப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜினை, விரைவில் வரவிருக்கும் புதிய S101 காரில் பொருத்தி, அறிமுகப்படுத்தப் போவதை உறுதி செய்தது. S101 கார், மஹிந்த்ராவின் அடுத்த பிரமாண்டமான படைப்பாகும். இது இந்த வருடம் முடிவதற்குள் இந்த கார் வெளியிடப்பட்டுவிடும். 1.2 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் ஒரு பெரிய 2.0 லிட்டர் மோட்டார் என மூன்று விதமான எரிவாயாப்பொருள் (காஸோலின்) இஞ்ஜின்களின் வரிசையும் வெளியிடப்படும் என்ற தகவலையும் இந்த நிறுவனம் கூறியது. இந்த இஞ்ஜின்கள் டர்போ சார்ஜ்ட் விதத்தில் வருமா அல்லது இயலிழுப்பு விசைப்பொறியுடன் (நாச்சுரலி ஆஸ்பிரடெட்) வருமா என்பது பற்றி தகவல் இல்லை.
S101 பற்றி பேசும் போது, SUV ரக காரைப் போல கம்பீரமாக இருக்கும் TUV 300 போலல்லாமல், இது 4 மீட்டருக்குள் அடங்கிய ஒரு வாகனமாகும் (சப்-4m). S101 கார், ரினால்ட் கிவிட்டின் வடிவமைப்பை ஒத்து, ஒரு க்ராஸ் ஓவர் ரகத்தை போல காட்சியளிக்கிறது. இதன் விலை, 4 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட TUV 300 -இன் பல சிறப்பம்ஸங்களை, S101 காரிலும் நாம் எதிர்பார்க்கலாம். புதிய 1.2 லிட்டர் இஞ்ஜினைத் தவிர, தற்போது வெளியான TUV 300 -இல் உள்ள 1.5 லிட்டர் mHawk 80 டீசல் இஞ்ஜினும், சற்றே சிறிய மாற்றங்களுடன் பொருத்தப்படலாம் என்று தெரிகிறது. இதன் இஞ்ஜினுடன், AMT பல்லிணைப்பு பெட்டியும் (கியர் பாக்ஸ்) பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சில மாதங்களுக்கு முன், நாம் நாசிக் அருகில், S101 மற்றும் U 301 என்ற TUV 300 (வெளியிடப்பட்டது) என்ற இருவகை கார்களையும் வேவு பார்த்தத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போதே, அது உற்பத்திக்கு தயாரான நிலையில் இருந்தது.