• English
  • Login / Register

தூய்மையான, சுற்றுசூழலுக்கு உகந்த வேகன் ஆர் சிஎன்ஜி இங்கே இருக்கிறது!

published on பிப்ரவரி 17, 2020 04:45 pm by rohit for மாருதி வேகன் ஆர் 2013-2022

  • 40 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பிஎஸ் 6 மேம்படுத்தலுடன் எரிபொருள் செயல்திறன் 1.02 கிமீ/கிலோ  குறைந்துள்ளது

Cleaner, Greener WagonR CNG Is Here!

  • வேகன்ஆர் சிஎன்ஜி மார்ச் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • மாருதி நிறுவனம் சிஎன்ஜி தொகுப்பை எல்எக்ஸ்ஐ டிரிமில் தொடர்ந்து வழங்கி வருகிறது.

  • இது இன்னும் 1.0 லிட்டர் பெட்ரோல் அலகு (60பி‌எஸ்  / 78என்‌எம்) உடன் மட்டுமே அளிக்கப்படுகிறது.

  • வேகன்ஆர் 1.2 லிட்டர் பெட்ரோல் இயந்திர மாதிரியாக தொடர்ந்து வருகிறது.

  • உபகரணங்கள் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை.

சமீபத்தில் மாருதி நிறுவனம் எர்டிகாவின்  சிஎன்ஜியின் பிஎஸ்6 மாதிரியை அறிமுகப்படுத்தியது. இப்போது, கார் தயாரிப்பு நிறுவனம் வேகன்ஆர் சிஎன்ஜியின் பிஎஸ்6 மாதிரியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது எல்எக்ஸ்ஐ மற்றும் எல்எக்ஸ்ஐ (ஓ) ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவற்றின் விலை முறையே ரூபாய் 5.25 லட்சம் மற்றும் ரூபாய் 5.32 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆகும். இதன் விலை ரூபாய்19,000 அளவில் உயர்ந்துள்ளது.

Cleaner, Greener WagonR CNG Is Here!

இதன் இயந்திரம் பிஎஸ்6 மேம்படுத்தலுடன் எரிபொருள் செயல்திறன் 33.54 கிமீ/கிலோவிலிருந்து 32.52 கிமீ/கிலோ வரை குறைந்துள்ளது. இது தவிர, இதன் ஹேட்ச்பேக் கச்சிதமாக அதே போலவே  உள்ளது. இப்போது இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் அலகு இருக்கிறது, இது 60 பிபிஎஸ் ஆற்றலையும் 78 என்எம் முறுக்குத் திறனையும் உருவாக்குகிறது. மாருதி வேகன்ஆரின் சிஎன்ஜி வகைகளை 5-வேக கைமுறை செலுத்துதல் விருப்பத்துடன் மட்டுமே வழங்குகிறது. மறுபுறம், 1.2 லிட்டர் வேகன்ஆர் பெட்ரோல் இயந்திரத்தில் மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுகிறது.

கார் தயாரிப்பு நிறுவனம் முழு செய்தியையும் இங்கே  வெளியிட்டிருக்கிறது:

பிஎஸ் 6 இணக்கமான மாருதி சுசுகி வேகன்ஆர் இப்போது எஸ்-சிஎன்ஜியிலும் கிடைக்கிறது

  • மாருதி சுசுகியிடமிருந்து மூன்றாவது பிஎஸ்6 இணக்கமான எஸ்-சிஎன்ஜி யை வழங்குகிறது 

  • இதன் பெட்ரோல் டேங்க் 60 லிட்டர் (நீருக்கு சமமான)  திறன் கொண்டதாகவும், வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி வகை 32.52 கிமீ/கிலோ மைலேஜையும்  வழங்குகிறது

  • ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் இந்த கார் குறித்து ‘மிஷன் கிரீன் மில்லியன்’ என்ற சொற்றொடரை நிறுவனம் அறிவித்தது. 

புது தில்லி, 14 பிப்ரவரி, 2020: சுற்றுசூழலுக்கு உகந்த வாகனங்களை  நுகர்வோருக்கு வழங்குவதற்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்து, மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தற்போது பிஎஸ்6 இணக்கமான பெரிய புதிய வேகன்ஆரின் எஸ்-சிஎன்ஜி வகையை அறிமுகப்படுத்தியது. பிஎஸ்6 இணக்கமான சிஎன்ஜி உடன் வேகன்ஆர் காரின் அறிமுகம் ஆட்டோ எக்ஸ்போ -2020 இல் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் மிஷன் கிரீன் மில்லியனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உடன் டாடா அல்ட்ரோஸ் காரும்  இணைகிறது 

 மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) திரு. சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “மாருதி சுசுகி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நிலையான இயக்க விருப்பங்களை வழங்க தொடர்ந்து முயன்று வருகிறது. மிஷன் கிரீன் மில்லியனை அறிவித்ததன் மூலம், நாட்டில் பசுமை இயக்கம் அதிகரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி இருக்கிறோம். 3 வது தலைமுறை வேகன்ஆர் மிகவும் வெற்றிகரமாக உள்ளது மேலும் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்  வேகன்ஆரின் சின்னத்துடன் இதன் பயணம் தொடர்கிறது. இதன் தோற்ற அமைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் வலுவான, புதிய தொழிற்சாலை பொருத்தப்பட்ட எஸ்-சிஎன்ஜி வகையானது ஓட்டுவதற்கு வசதி, அதிக எரிபொருள் செயல்திறன், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒப்பிடமுடியாத வசதி ஆகியவற்ருக்கான சரியான சமநிலையை வழங்குகிறது. ” என்று கூறினார். 

மாருதி சுசுகி நிறுவனம் சிஎன்ஜி வாகனங்களுடன் இணைந்து அதன் பசுமை பயணத்தை கடந்த பத்தாண்டுகளாக தொடங்கி, இப்போது ஒப்பிடமுடியாத அளவில் சுற்றுசூழலுக்கு உகந்த வாகனங்களை வழங்குகிறது. ஏற்கனவே ஒரு மில்லியன் சுற்றுசூழலுக்கு உகந்த வாகனங்களை (சிஎன்ஜி, ஸ்மார்ட் ஹைப்ரிட் வாகனங்கள் உட்பட) விற்றுள்ள மாருதி சுசுகி நிறுவனம், அதன் 'மிஷன் கிரீன் மில்லியனின்' கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 1 மில்லியன் சுற்றுசூழலுக்கு உகந்த வாகனங்களை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் பெருமளவில் மாசு கட்டுபாட்டை தடுக்கும் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது. மாருதி சுசுகியின் எஸ்-சிஎன்ஜி வாகன வரம்பை அறிமுகப்படுத்துவதுடன், எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தல் மற்றும் நாட்டின் எரிசக்தி வளங்களில் இயற்கை எரிவாயுவின் பங்கை 6.30 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக 2030 க்குள் உயர்த்துவதற்கான இந்திய அரசின் இல்க்கி பூர்த்தி செய்கிறது.

நாட்டில் சிஎன்ஜி எரிபொருள் குழாய் வலையமைப்பை விரைவாக அதிகரிக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மாருதி சுசுகி எஸ்-சிஎன்ஜி வாகனங்கள்  ஈசி.யுக்கள் (மின்னணு கட்டுப்பாட்டு அலகுகள்) மற்றும் திறன்மிக்க உட்செலுத்தும் அமைப்பு ஆகிய இரட்டை ஒன்றுக்கொன்று தொடர்புடைய வசதிகளைக் கொண்டுள்ளன. தொழிற்சாலையில்  பொருத்தப்பட்ட இந்த வாகனங்கள் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் உகந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட ஓட்டும் திறனை வழங்குவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அளவீடு செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க : வேகன் ஆர் ஏஎம்டி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti வேகன் ஆர் 2013-2022

1 கருத்தை
1
s
shachindra jha
Jun 8, 2020, 12:30:17 PM

New Model WR is worstest model

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    explore மேலும் on மாருதி வேகன் ஆர் 2013-2022

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • பிஒய்டி seagull
      பிஒய்டி seagull
      Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
    • நிசான் லீஃப்
      நிசான் லீஃப்
      Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
    • மாருதி எக்ஸ்எல் 5
      மாருதி எக்ஸ்எல் 5
      Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2025
    • ரெனால்ட் க்விட் இவி
      ரெனால்ட் க்விட் இவி
      Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
    • எம்ஜி 3
      எம்ஜி 3
      Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
    ×
    We need your சிட்டி to customize your experience