• English
  • Login / Register

செவ்ரோலெட் டிரைல் பிளசர் vs. டொயோடா ஃபார்ச்சூனர் vs. மிட்சுபீஷி பஜெரோ ஸ்போர்ட் – எது மிகவும் வலிமை வாய்ந்தது?

published on அக்டோபர் 26, 2015 10:05 am by அபிஜித் for செவ்ரோலேட் ட்ரையல்

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிரைல் பிளசர் காரை, செவ்ரோலெட் நிறுவனம் ரூ. 26.40 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 7 இருக்கைகள் கொண்ட இந்த புதிய SUV, தற்போது சந்தையில் உள்ள அனைத்து SUV கார்களையும் விட மிகப் பெரியதாகவும், மிக சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. SUV கார்களின் வரிசையில், முன்னணியில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மிட்சுபீஷி பஜெரோ ஸ்போர்ட் ஆகிய கார்களுடன் இந்த புதிய SUV காரை ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கலாம்.

வெளிப்புறத் தோற்றம்:

டிரைல் பிளேசரின் தோற்ற அளவுகளை, வேறு எந்த காருடனும் குழப்புவதற்கு சந்தர்ப்பம் இல்லை, ஏனெனில், இது இந்த பிரிவிலேயே மிகவும் நீளமானதாகவும், அகலமானதாகவும், உயரமானதாகவும் வடிவமைக்கப்பட்டு வெளிவருகிறது. மேலும், இதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 231 மிமீ பெற்று, தரையில் இருந்து மேலெழுந்து கம்பீரமாக காட்சி தருகிறது. SUV ரக கார்களிலேயே மிகச் சிறந்ததாக இருந்தாலும், ரியர் வீல் அரேஞ்ச்மெண்ட்டுடன் வருவதால், பின்புற சக்கரங்களுக்கு மட்டுமே சக்தி செல்கிறது. தற்போது சந்தையில் உள்ள SUV கார்களை விட, செவ்ரோலெட்டின் டிரைல் பிளேசர் மிகவும் புதுமையாகவும், புதுப்பொலிவுடனும் உள்ளது. எனவே, இது சாலைகளில் பயணிக்கும் போது தனித்தன்மையுடன், பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் இருக்கும்.

அறிமுகப் படலம்: செவ்ரோலெட் டிரைல் பிளேசர் ரூ. 26.4 லட்சத்திற்கு அறிமுகம்

உட்புறத் தோற்றம்:

டிரைல் பிளேசரின் உட்புறத்தில், மிக முக்கிய சிறப்பம்சமாக MyLink இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டத்தைக் குறிப்பிடலாம். ஏனெனில், இதுவே இந்த செக்மென்ட்டில் மிகவும் அட்வான்சான ஒரு மீடியா-நவ் அமைப்பாக இருக்கிறது. மற்ற இரண்டு போட்டியாளர்களின் உட்புறத் தோற்றத்தை விட, டிரைல் பிளேசர் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஃபார்ச்சூனர் மற்றும் பஜெரோ ஸ்போர்ட் ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தி சில வருடங்கள் ஆகிவிட்டதால், அவற்றின் உட்புறத் தோற்றம் நவீனமாக இல்லை.

மேலும், டிரைல் பிளேசர் மிகவும் பெரிதான தோற்றத்தில் வருவதால், முதல் இரண்டு வரிசை இருக்கைகளில் உள்ள பயணிகளுக்கு தாராளமான இடவசதி உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் வரிசைகள் போல மூன்றாவது ரோவில் ஸ்பேஸ் இல்லை என்றாலும், ஃபார்ச்சூனர் மற்றும் பஜெரோ ஸ்போர்ட் கார்களை ஒப்பிடும் போது, இதில் அதிகமாகவே உள்ளது.

டிரைல் பிளேசர்

வெளிப்புற அளவுகள் (LxWxH): 4878 மிமீ x 1902 மிமீ x 1847 மிமீ

டயர்: 265/60 R18

USPs

  • SUV பிரிவில் மிகவும் பெரிய கார்
  • அபாரமான ரோட் பிரெசன்ஸ்
  • அதிகபட்ச கிரவுண்ட் க்ளியரன்ஸ் அளவு - 231 மிமீ
  • கம்பீரமான, ஆஜானுபாவமான தோற்றம்
  • 18 அங்குல அலாய் சக்கரங்கள்

உட்புறத் தோற்றம்:

  • கருப்பு மற்றும் பீஜ் வண்ணங்களில் உள்ள உட்புறத்தில், பியானோ கருப்பு வண்ணத்தில் உள்ள இன்ஸெர்ட்ஸ் உயர்தர தோற்றத்தை தருகிறது.
  • இதன் பிரிவிலேயே மிகச் சிறந்த உட்புற அலங்காரம்
  • MyLink மற்றும் 7 அங்குல இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் இணைந்த இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு

செயல்திறன்:

  • இஞ்ஜின்: 2.8 லிட்டர் 4 சிலிண்டர், காமன் ரயில் டைரக்ட் இஞ்செக்ஷன், டியூராமேக்ஸ் டீசல் இஞ்ஜின்
  • சக்தி: 200 PS @3600 rpm
  • டார்க்: 500 Nm @ 2000 rpm
  • 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்
  • மைலேஜ்: 11.45 kmpl

டொயோடா ஃபார்ச்சூனர்:

வெளிப்புறத் தோற்றம்:

அளவுகள்: 4705 மிமீ x 1840 மிமீ x 1850 மிமீ
டயர்: 265/65 R 17

USPs

  • உறுதியான, வலிமையான முன்புறத் தோற்றம்
  • ஸ்டைலான அலாய் சக்கரங்கள்
  • உறுதியான முன்புறத்திற்கு நிகராக பின்புறத்தில் கிளியர் கிளாஸ் டெய்ல்லாம்ப் க்ளஸ்டர்
  • அனைத்து பக்கங்களிலும் அமைந்துள்ள பாடி கிளாட்டிங் டிசைன்

உட்புற வடிவமைப்பு:

  • முழுவதும் கருமையான வண்ணத்தில் அமைக்கப்பட்ட இன்டீரியர்
  • டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம்
  • மல்டி ஃபங்சன் ஸ்டியரிங் வீல்
  • நவீனமாக இல்லாததால், உட்புறத் தோற்றத்தில் மேம்பாடுகள் தேவைப்படுகின்றன.

செயல்திறன்:

  • இஞ்ஜின்: 3.0 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் டீசல் இஞ்ஜின்
  • சக்தி: 171 PS @3600 rpm
  • டார்க்: 343 Nm @ 1400 – 3400 rpm  (AT) / 360 Nm @ 1400 – 3200 rpm  (MT)
  • இஞ்ஜின்: 2.5 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் இஞ்ஜின்
  • சக்தி: 144 PS @3400 rpm
  • டார்க்: 343 Nm @ 1600 – 2800 rpm   (MT & AT)
  • ட்ரைவ்: RWD மற்றும் 4x4 ஆப்ஷன்ஸ்

மிட்சுபீஷி பஜெரோ:

வெளிப்புறத் தோற்றம்:

அளவுகள் (LxWxH): 4695 மிமீ x 1815 மிமீ x 1840 மிமீ
டயர்: 265/65 R 17

USPS:

  • தெளிவான ஸ்போர்டியான டிசைன்
  • எளிமையான வெளிப்புறத் தோற்றம்
  • சிறந்த டிபார்ச்சர் ஆங்கில்

உட்புறத்தோற்றம்:

  • கருப்பு மற்றும் பீஜ் வண்ணங்களில் உள்ள உட்புறத்தில், சில்வர் மற்றும் மர அலங்காரத்தில் உள்ள இன்ஸெர்ட்ஸ்
  • நேவிகேஷன் சிஸ்டத்துடன் வரும் CD/DVD  ப்ளேயர்
  • நவீனமாக இல்லாததால், உட்புறத் தோற்றத்தில் மேம்பாடுகள் தேவைப்படுகின்றது.

செயல்திறன்:

  • இஞ்ஜின்: 2.5 லிட்டர் டைரக்ட் இஞ்ஜெக்ஷன் டீசல்
  • சக்தி: 178 PS @4000 rpm
  • டார்க்: 350 Nm @ 1800 – 3500 rpm  
  • ட்ரான்ஸ்மிஷன்: AT மற்றும் 5 ஸ்பீட் மேனுவல்
  • ட்ரைவ்: ஆட்டோமேடிக் RWD மற்றும் மேனுவல் 4x4

இஞ்ஜின் செயல்திறன்:

சக்தி மற்றும் டார்க் உற்பத்தியில், டிரைல் பிளேசரை எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு செவ்ரோலெட் நிறுவனம் சிறப்பாக வடிவமைத்திருக்கிறது. இந்த காரை எளிதாகவும் சுலபமாகவும் இழுத்துச் செல்லக்கூடிய வகையில், போதுமான குதிரைத் திறனை உற்பத்தி செய்யும் இஞ்ஜினை இந்நிறுவனம் பொருத்தியுள்ளது. GM இன்ஜின்களின் லேட்டஸ்ட் ஜெனரேஷன் வரிசையில் வரும், புத்தம் புதிய 2.8 லிட்டர் இஞ்ஜின் அபாரமான செயல்திறன் மிக்கதாக உள்ளது. இந்த இஞ்ஜின் 200 PS சக்தியும், 500 Nm டார்க்கும் உற்பத்தி செய்து, இதன் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி, செயல்திறனில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த இஞ்ஜின் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. பஜெரோ மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் உள்ள 5 ஸ்பீட் யூனிட்டை விட, இது நிச்சயமாக மிகச் சிறந்ததாக இருக்கும்.

குறைகள்

4x4 SUV கார்களை விரும்பும் நபர்களுக்கு, டிரைல் பிளேசர் உகந்ததாக இருக்காது. ஏனெனில், இது 4x2 செட்-அப்பில் வருகிறது. ஆனால், இதன் போட்டியாளர்களான பஜெரோ மற்றும் ஃபார்ச்சூனர் போன்றவை 4x4 ஆப்ஷனில் வருகின்றன. 4x4 ஆப்ஷன் தவிர, டொயோட்டா நிறுவனம் இதில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் இணைந்த 4x4 கைஸ் தருகிறது. ஆனால், பஜெரோவின் 4x2 –வில் மட்டுமே ஆட்டோமேடிக் ஆப்ஷன் வருகிறது.

மேலும் வாசிக்க:

was this article helpful ?

Write your Comment on Chevrolet ட்ரையல்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience