• English
  • Login / Register

ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸில் இந்த புதிய ஸ்டைலிங் பாகத்தை பாருங்கள்

published on ஏப்ரல் 10, 2023 05:38 pm by rohit for க்யா Seltos

  • 22 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த ஃபேஸ்லிப்டட் எஸ்யூவி,  மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்றவற்றில் காணப்படும் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்களைப் பெறலாம்.

2023 Kia Seltos

  • எஸ்யூ -வியின் மற்றொரு சோதனை கார் முழுமையாக வெளிப்புறம் மறைக்கப்பட்டிருந்தது.

  • இருபுறமும் உள்ள தனித்தனியான எக்ஸாஸ்ட் டிப்ஸ்கள் இது ஒரு டர்போ வேரியன்டாக இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

  • கேபின் ஒரு புதிய டேஷ்போர்டு வடிவமைப்பைப் பெறவுள்ளது, இதில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்கான புதிய டிஸ்ப்ளேக்கள் இடம்பெறும்.

  • புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.

  • தற்போதைய மாடல்  அதே 115PS பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களைப் பெறும்; புதிய வெர்னாவின் 1.5 லிட்டர் டர்போவும் வழங்கப்படும்.

  • விலை ரூ. 10 இலட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸின் ஸ்பை ஷாட்கள் மற்றும் வீடியோக்கள் போதுமானதாக இல்லை அதைப் போல , கூடுதலாக வெளித்தோற்ற உருவமறைப்பு பெற்ற எஸ்யூவி -யின் மற்றொரு ஸ்பை வீடியோவும்  வந்துள்ளது.

சமீபத்திய காட்சிப்பதிவுகள்

2023 Kia Seltos spied

மஹிந்திரா ஸ்கார்பியோ என் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்றவற்றில் காணப்படுவது போல, ஃபேஸ்லிப்டட் செல்டோஸ் டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்களுடன் வரும் என்பதை புதிய வீடியோ உறுதிப்படுத்தியிருக்கிறது மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சோதனையில் இரட்டை எக்ஸாஸ்ட்கள் (ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்று) பொருத்தப்பட்டிருந்தன, இது எஸ்யுவியின் டர்போ வேரியன்டாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

உட்புறத்தில்  மாற்றங்கள்

2023 Kia Seltos cabin

வீடியோ புதுப்பிக்கப்பட்ட கேபினைக் காட்டவில்லை என்றாலும், இது உலகளவில் வெளிப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்டட் மாடலைப் போலவே இருக்கும். சற்று குறுகிய சென்ட்ரல் ஏசி வென்ட்கள் மற்றும் டூயல் 10.25 -இன்ச் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்ட, சற்று மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டை கியா வழங்க உள்ளது. ஃபேஸ்லிப்டட் செல்டோஸில் எதிர்பார்க்கப்படும் புதிய அம்சங்கள் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள்.

இந்த எஸ்யு -வியின் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரயில் ஆறு ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (VSC) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஓட்டுநர்-உதவி தொகுப்பில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், மற்றும் லேன் கீப்பிங் அசிஸ்ட் ஆகியவை அடங்கும், இது ஆறாவது தலைமுறை ஹூண்டாய் வெர்னாவில் உள்ளது.

மேலும் படிக்ககியா கேரன்ஸ் மற்றொரு சொகுசு டிரிம்மை பெறுகிறது, விலை ரூ 17 இலட்சத்தில் தொடங்குகிறது

ஹூட்டின் கீழ் ஏதேனும்  மாற்றங்கள் உள்ளதா?

தற்போதைய மாடலில் உள்ள அதே 115PS, 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் புதிய செல்டோஸை கியா வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பெட்ரோல் இன்ஜின் ஆறு-வேக MT மற்றும் CVT ஆப்ஷன்களுடன் தொடரும், டீசல் இன்ஜின் ஆறு-வேக ஆப்ஷனை உடன் கொண்டு வருவதோடு மேனுவலுக்கு பதிலாக ஆறு-வேக iMT உடன் வரும். 1.4-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டுக்கு பதிலாக, தோற்றத்தில் பொலிவு கூட்டப்பட்ட  செல்டோஸ் புதிய வெர்னாவின் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (160PS/253Nm) பெறும், இது ஆறு-வேக iMT அல்லது ஏழு-வேக DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

எப்போது அதனை  எதிர்பார்க்கலாம்?

2023 Kia Seltos rear spied

கியா புதிய செல்டோஸை 2023 -ம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் ஆரம்ப விலை ரூ.10 லட்சம் பால் பார்க்கில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும். டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக் மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுடன் தொடர்ந்து போட்டியிடும்.

படங்களின் ஆதாரம்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது க்யா Seltos

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience