அடுத்துவரும் வோல்வோ S60 கிராஸ் கன்ட்ரி: SUV-யை போன்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஒரு சேடன்!
konark ஆல் அக்டோபர் 14, 2015 02:47 pm அன்று மாற்றியமைக்கப்பட்டது செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
மும்பை:
2015 டெட்ராய்டு மோட்டார் ஷோவில் S60 கிராஸ் கன்ட்ரியை காட்சிக்கு வைத்த ஸ்வீடன் நாட்டு கார் தயாரிப்பாளரான வோல்வோ நிறுவனம், இதே வாகனத்தை நம் நாட்டு சந்தையிலும் அறிமுகம் செய்ய போவதாக உறுதி அளித்துள்ளது. இந்த காரின் அறிமுகம் வரும் 2016 ஆம் ஆண்டின் முதல் பாதியை ஒட்டி அமையலாம்.
இந்த S60 கிராஸ் கன்ட்ரி, சாதாரண சேடன்களை விட சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸை அளிக்கும் தன்மை கொண்ட வாகனமாகும். ப்ளூ மூன் ஆப்-ரோடு சாகசங்களுக்காக ஒரு முறை S60 கிராஸ் கன்ட்ரியை ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் அமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. மேலும் இதில் ஓடும்போதே உயரத்தை மாற்றியமைக்கும் (ரைடு ஹைட் அட்ஜெஸ்டிங்) வசதி இருப்பதால், நம் நாட்டின் குண்டும் குழியுமான சாலைகளுக்கான ஒரு வரபிரசாதமாக இது அமையும்.
இதையும் படியுங்கள்: வோல்வோ XC 90 அறிமுகமானது.
சர்வதேச அளவில், இந்த ஸ்வீடன் நாட்டு கிராஸ்-சேடனில் ஃப்ரென்ட் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என்று இரு தேர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், நம் நாட்டு சந்தைக்கு S60 கிராஸ் கன்ட்ரியில் 5 சிலிண்டர்கள் கொண்ட 2.4-லிட்டர் டீசல் D4 என்ஜின் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 178bhp ஆற்றலை பெற முடியும். வழக்கமான S60 சேடனை விட, இந்த கிராஸ் பதிப்பில் 65mm அதிகமான கிரவுண்டு கிளியரன்ஸை பெற முடியும்.
இந்த S60 கிராஸ் கன்ட்ரியில், சன்-ரூஃப், சிறப்பான முன்புற சீட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சேட்-நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை காணப்படுகிறது. இவை அனைத்தும் ஏற்கனவே வெளியாகி உள்ள வழக்கமாக S60 காரில் காணப்படுகிறது. வழக்கமான S60 சேடனை விட, ஏறக்குறைய 5 – 10 லட்சம் வரை அதிகமாக விலை உயர்த்தப்பட்டு, இந்த காருக்கு ரூ.50 லட்சத்தை யொட்டி விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி – ஆட்டோகார் இந்தியா
Source - Autocar India