படங்களில் MG Gloster Snowstorm பதிப்பைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளவும்
published on ஜூன் 07, 2024 06:27 pm by ansh for எம்ஜி குளோஸ்டர்
- 54 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஸ்பெஷல் எடிஷனானது டாப்-ஸ்பெக் சாவ்வி டிரிம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் 7-சீட்டர் அமைப்பில் மட்டுமே கிடைக்கும்.
சமீபத்தில் எம்ஜி குளோஸ்டர் இரண்டு புதிய ஸ்டோர் எடிஷன்களான, டெஸர்ட்ஸ்டோர்ம் (Desertstorm) மற்றும் ஸ்நோஸ்டோர்ம் (Snowstorm) ஆகியவற்றைப் பெற்றுள்ளது. கூடுதல் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் ஒப்பனை மாற்றங்களுடன் இவை வருகின்றன. இந்த ஸ்பெஷல் எடிஷன் பதிப்புகள் டீலர்ஷிப்களை வந்தடைந்துள்ளன. ஆகவே இப்போது ஸ்நோஸ்டோர்ம் பதிப்பின் படங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. கீழே உள்ள 10 படங்களில் இந்த காரை விரிவாக பாருங்கள்.
வெளிப்புறம்
ஸ்நோஸ்டோர்ம் பதிப்பில் நீங்கள் கவனிக்கும் முதல் விஷயம் புதிய "பேர்ல் வொயிட்" ஷேடு ஆகும். முன்பக்கத்தில் புதிய வடிவிலான கிரில், பிளாக் பம்பர் மற்றும் பம்பரின் கீழ் ரெட் கலர் இன்செர்ட் ஆகியவற்றிற்கு பிளாக்டு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இது ஸ்மோக்டு LED ஹெட்லைட்களையும் பெறுகிறது. இது ரெட் ஆக்ஸன்ட்களையும் கொண்டுள்ளது.
பக்கவாட்டில் இது ரெட் கலர் பிரேக் காலிப்பர்களுடன் ஆல்-பிளாக் 19-இன்ச் அலாய் வீல்களை பெறுகிறது. மேலும் டோர் ஹேண்டில்களும் கான்ட்ராஸ்ட்டான பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ளன.
ORVM -கள் கிளாஸி பிளாக் கலரில், கிளாஸி ரெட் இன்செர்ட் உடன் உள்ளன. மேலும் முன் ஃபெண்டர்களில் "ஸ்நோஸ்டோர்ம்" பேட்ஜிங்கையும் பார்க்க முடிகிறது. ஜன்னல் பெல்ட்லைன் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவையும் பிளாக் கலருக்கு மாற்றப்பட்டுள்ளன. இது எஸ்யூவிக்கு ஃபுளோட்டிங் ரூஃப் போன்ற எஃபெக்டை சேர்க்கிறது.
பின் பக்கத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. டெயில் லைட்டுகளுக்கும் இருபுறமும் உள்ள பேட்ஜிங்கிற்கும் இடையில் குரோம் ஸ்ட்ரிப் உள்ளது. ஆனால் இங்கே பம்பரில் ரெட் ஆக்ஸன்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன."குளோஸ்டர்" பேட்ஜ் பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது, மேலும் இது குவாட் எக்ஸாஸ்ட் டிப்ஸுடன் வருகிறது.
உட்புறம்
ஸ்னோஸ்டார்ம் பதிப்பின் கேபின் பிளாக் டாஷ்போர்டு மற்றும் பிளாக் சென்டர் கன்சோலுடன் ஆல் பிளாக் ட்ரீட்மென்ட்ப் பெறுகிறது. இருப்பினும் இங்கு ரெட் கலர் ஆக்ஸன்ட்கள் இல்லை என்றாலும், கேபின் சென்டர் கன்சோல், சென்ட்ரல் ஏசி வென்ட்கள் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றில் பிரஷ்டு சில்வர் ஆக்ஸன்ட்களை பெறுகிறது.
முன் இருக்கைகள் பிளாக் லெதரெட்டில் கான்ட்ராஸ்ட் ஒயிட் ஸ்டிச் உடன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுநர் இருக்கையில் இன்னும் வென்டிலேஷன், ஹீட்டட், மசாஜ் மற்றும் மெமரி ஃபங்ஷன் ஆகியவை உள்ளன. மேலும் இந்த ஸ்பெஷல் எடிஷனில் கூடுதல் வசதிகள் எதுவும் இல்லை.
மேலும் பார்க்க: எம்ஜி ஹெக்டர் 100 ஆண்டு எடிஷன் காரின் விவரங்களை படங்களில் விரிவாக பாருங்கள்
12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 6 ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்), லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகள் உள்ளன.
எம்ஜி ஸ்நோஸ்டோர்ம் எடிஷனை 7-சீட்டர் அமைப்பில் மட்டுமே வழங்குகிறது, எனவே இந்த பதிப்பு இரண்டாவது வரிசையில் பெஞ்ச் இருக்கையுடன் வருகிறது. இதிலும் அதே கலர் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
விலை
MG குளோஸ்டர் ஸ்நோஸ்டோர்ம் ஆனது ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் செட்டப்களில் ஒரே ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. மேலும் இதன் விலை ரூ.41.05 லட்சத்தில் இருந்து ரூ.43.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் பதிப்புக்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை, ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக், மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: எம்ஜி குளோஸ்டர் டீசல்