இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய BYD சீலையன் 7
BYD சீலையன் 7 ஆனது 82.5 kWh உடன் ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) கட்டமைப்புகளுடன் வருகிறது.
-
ஒரு எஸ்யூவி-கூபே -வாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் ஆல் LED லைட்ஸ், ஃப்ளஷ்-டோர் ஹேண்டில்ஸ் ஆகியவை உள்ளன.
-
உட்புறம் பிளாக் கலர் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய உயர்தர டாஷ்போர்டை கொண்டுள்ளது.
-
15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவை இதில் உள்ளன.
-
பாதுகாப்புக்காக 11 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, லெவல் 2 ADAS மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: பிரீமியம் மற்றும் பெர்ஃபாமன்ஸ் மற்றும் ஒரே மாதிரியான வசதிகள் உள்ளன. ஆனால் தனித்துவமான டிரைவ்டிரெய்ன் செட்டப்களுடன் இவை வருகின்றன.
-
டெலிவரி மார்ச் 7, 2025 முதல் தொடங்கவுள்ளது.
இந்தியாவில் ரூ. 48.90 லட்சத்தில் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) சீலையன் வேர்ல்ட் 7 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சீன கார் நிறுவனத்தின் சார்பில் இமேக்ஸ் வேர்ல்ட் 7, பிஒய்டி அட்டோ 3, மற்றும் பிஒய்டி சீல் ஆகியவற்றுக்கு பிறகு இந்தியாவில் வெளியாகும் நான்காவது காராகும். இது பிரீமியம் மற்றும் பெர்ஃபாமன்ஸ் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் ஒரே மாதிரியான வசதிகள் மற்றும் பேட்டரி பேக் ஆப்ஷனை கொண்டுள்ளன. ஆனால் வெவ்வேறு டிரைவ்டிரெய்ன் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வேரியன்ட் |
விலை |
பிரீமியம் |
ரூ.48.90 லட்சம் |
பெர்ஃபாமன்ஸ் |
ரூ.54.90 லட்சம் |
BYD சீலையன் 7 -ன் டெலிவரிகள் மார்ச் 7, 2025 முதல் தொடங்கவுள்ளன. இந்த புதிய BYD எஸ்யூவி -யை பற்றி விரிவாக பார்ப்போம்:
BYD சீலையன் 7: வெளிப்புறம்
BYD சீலையன் 7 அதே LED ஹெட்லைட்கள் மற்றும் LED DRL -களுடன் வருகிறது. இவை இரண்டும் BYD சீலை போலவே இருக்கும். இது எல்லா EV -களையும் போலவே ஒரு குளோஸ்டு-ஆஃப் கிரில் உடன் வருகின்றன. ஹீட்டட் அவுட்சைடு ரியர்-வியூ மிரர்ஸ் (ORVMs) உடன் ரிவர்ஸ் ஆட்டோ-டில்ட் செயல்பாட்டுடன் வருகின்றன.
பிரீமியம் டிரிம் 19-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. அதே நேரத்தில் பெர்ஃபாமன்ஸ் வேரியன்ட் 20-இன்ச் யூனிட்களை கொண்டுள்ளது. இது ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஒரு குறுகலான ரூஃப்லைனை கொண்டுள்ளது. இது எஸ்யூவி-கூபே தோற்றத்தை கொடுக்கிறது. பின்புறத்தில் பிக்ஸல் எலமென்ட்களுடன் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் பின்புற LED ஃபாக் லைட்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
BYD சீலையன் 7: இன்ட்டீரியர்
உள்ளே சீலையன் 7 EV ஆனது 4-ஸ்போக் லெதர்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் பிளாக் கலர் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள் மற்றும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி வென்ட்கள் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவையும் உள்ளன.
டாஷ்போர்டில் ஒரு ஏசி வென்ட்டிலிருந்து இன்னொரு ஏசி வென்ட்டிற்கு செல்லும் ஒரு கிளாஸி பிளாக் பேனல் உள்ளது மற்றும் மையத்தில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒன்றும் உள்ளது. சென்டர் கன்சோலில் டிரைவ் செலக்டர் நாப், டிரைவ் மற்றும் டெரெய்ன் மோடுகளுக்கான பட்டன்கள், இரண்டு கப்ஹோல்டர்கள் மற்றும் முன் சென்டர் ஆர்ம்ரெஸ்டில் உள்ளன.
BYD சீலையன் 7: வசதிகள் மற்றும் பாதுகாப்பு
BYD சீலையன் 7 ஆனது 15.6-இன்ச் ரொட்டேடபிள் டச் ஸ்கிரீன், 12-ஸ்பீக்கர் டைனாஆடியோ சவுண்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது டூயல் ஜோன் ஏசி, 50 வாட் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் உடன் வருகிறது. மேலும் இது ஒரு பவர்டு டெயில்கேட், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 4-வே அட்ஜெஸ்ட்டபிள் லும்பார் சப்போர்ட் மற்றும் மெமரி ஃபங்ஷன் உடன் 8-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட், 6-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் கோ-டிரைவர் இருக்கை மற்றும் வெஹிகிள் டூ (V2L) லோடிங் வசதிகளை கொண்டுள்ளது.
பாதுகாப்பு முன்பக்கத்தில் இது 11 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷன் உடனான எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றுடன் வருகிறது. இது முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், டிரைவர் டிரெளவுஸினெஸ் வார்னிங் மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கிராஸ்-ட்ராஃபிக் அலர்ட் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: 2025 Renault Kiger மற்றும் Renault Triber கார்கள் அறிமுகம்
BYD சீலையன் 7: எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
வேரியன்ட் |
பிரீமியம் |
பெர்ஃபாமன்ஸ் |
பேட்டரி பேக் |
82.5 kWh |
82.5 kWh |
எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
1 |
2 |
டிரைவ்டிரெய்ன் |
RWD* |
AWD^ |
பவர் |
313 PS |
530 PS |
டார்க் |
380 Nm |
690 Nm |
NEDC கிளைம்டு ரேஞ்ச் |
567 கி.மீ |
542 கி.மீ |
*RWD = ரியர் வீல் டிரைவ்
^AWD = ஆல்-வீல்-டிரைவ்
BYD சீலையன் 7: போட்டியாளர்கள்
BYD சீலையன் 7 ஆனது பிரபலமான பிரீமியம் EV களான ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் கியா EV6 ஆகிய கார்களுடன் போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.