நாளை அறிமுகமாகிறது BYD நிறுவனத்தின் எலக்ட்ரிக் செடான் Seal
published on மார்ச் 04, 2024 04:46 pm by sonny for பிஒய்டி சீல்
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
இது மூன்று வேரியன்ட்களில் இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் மற்றும் அதிகபட்சமாக 570 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் கொண்டதாக இருக்கும்.
-
BYD சீல் மார்ச் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.
-
பேஸ் வேரியன்ட் சிறிய 61.4 kWh பேட்டரி பேக் மற்றும் 460 கிமீ வரை செல்லும் சிங்கிள் மோட்டார் ஆகியவற்றை பெறுகிறது.
-
டாப் வேரியண்ட் 560 PS மற்றும் 670 Nm அவுட்புட்டை கொண்ட டூயல் மோட்டார் செட்டப்பை பெறுகிறது.
-
அம்சங்கள் 15.6-இன்ச் ரொட்டேட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் பிரீமியம் கேபின் ஆகியவை உள்ளன.
-
ரூ.55 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பிரீமியம் எலக்ட்ரிக் கார் பிரிவில் BYD Seal மார்ச் 5 ஆம் தேதி களமிறங்குவதற்கு தயாராக உள்ளது. சீலுக்கான முன்பதிவுகள் ரூ.1 லட்சம் -த்துக்கு, திரும்பப்பெறும் டோக்கனுக்காக திறக்கப்பட்டுள்ளன. மேலும் விலை அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வாடிக்கையாளர்களுக்கான டெலிவரிகள் தொடங்கும். அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.
பேட்டரி, ரேஞ்ச் மற்றும் பெர்ஃபாமன்ஸ்
BYD சீல் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும். ஆனால் மொத்தம் மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள், ஒவ்வொரு வேரியன்ட் ஒன்று இருக்கின்றது. வேரியன்ட் வாரியான விவரங்கள் பின்வருமாறு:
பேட்டரி பேக் |
61.4 kWh |
82.5 kWh |
82.5 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் |
சிங்கிள் |
சிங்கிள் |
டூயல் |
பவர் |
204 PS |
313 PS |
560 PS |
டார்க் |
310 Nm |
360 Nm |
670 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (WLTC) |
460 கி.மீ |
570 கி.மீ |
520 கி.மீ |
மணிக்கு 0-100 கி.மீ |
7.5 வினாடிகள் |
5.9 வினாடிகள் |
3.8 வினாடிகள் |
பெரிய பேட்டரி பேக் 150kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும், அதே சமயம் சிறியது 110kW வரை சார்ஜ் செய்யும்.
BYD சீல் வசதிகள்
சீல் எலக்ட்ரிக் செடான் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் - டைனமிக் ரேஞ்ச், பிரீமியம் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபாமன்ட். பிரீமியம் கார் என்பதால் இதில் ரொட்டேட்டிங் 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, மல்டி ஏர்பேக்குகள், பவர்டு மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் (ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட்) முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS. லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் 19-இன்ச் அலாய் வீல்கள் ஒன்-அபோவ்-பேஸ் வேரியன்ட்டில் இருந்து கிடைக்கின்றன.
மேலும் படிக்க: எக்ஸ்க்ளூசிவ்: BYD சீல் வேரியன்ட் வாரியான வசதிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்
விலை மற்றும் போட்டியாளர்கள்
BYD சீல் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட இறக்குமதி காராக வழங்கப்படும். இதன் விலை ரூ. 55 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். கியா EV6 மற்றும் வோல்வோ XC40 ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். BMW i4 -காருக்கு குறைவான விலை கொண்ட மாற்றாக இருக்கும்.