BYD Seal காரின் கலர் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே
published on மார்ச் 07, 2024 08:38 pm by rohit for பிஒய்டி சீல்
- 66 Views
- ஒரு கருத்தை எழுதுக
பிரீமியம் எலக்ட்ரிக் செடானான இந்த காரின் மூன்று வேரியன்ட்களிலும் நான்கு கலர் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
-
ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் முதன்முதலில் காட்சிக்கு வைக்கப்பட்ட சீல் கார், இந்தியாவில் BYD -யின் மூன்றாவது EV காராகும்.
-
ஆர்க்டிக் ஒயிட், அரோரா ஒயிட், அட்லாண்டிஸ் கிரே மற்றும் காஸ்மோஸ் பிளாக் ஆகியவை இந்த காரின் கலர் ஆப்ஷன்களாக கொடுக்கப்படுகின்றன.
-
சீல் இரண்டு பேட்டரி பேக்குகள் இரண்டு டிரைவ் ட்ரெய்ன்கள் மற்றும் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் செட்டப்பை பெறுகிறது.
-
ஒவ்வொரு வேரியன்ட்களின் கேபினில் ஒரே கிரே-பிளாக் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.
-
BYD சீல் EV -யின் விலை ரூ. 41 லட்சம் முதல் ரூ. 53 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.
BYD சீல் இந்திய EV பிரிவுக்குள் இப்போது நுழைந்துள்ளது. இது மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: டைனமிக் ரேஞ்ச் பிரீமியம் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபாமன்ஸ். எலக்ட்ரிக் செடானுக்கான முன்பதிவுகள் ரூ. 1.25 லட்சத்தில் திறக்கப்பட்டுள்ளன. மேலும் மார்ச் 2024 இறுதி வரை செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளுக்கும் வீட்டில் நிறுவிக் கொள்ளும் வகையிலான 7 கிலோவாட் சார்ஜர் உட்பட சிறப்புப் பலன்கள் கிடைக்கும். நீங்கள் கார் ஒன்றை முன்பதிவு செய்ய நீங்கள் திட்டமிட்டால் BYD சீல் காரில் கிடைக்கும் நான்கு கலர் ஆப்ஷன்களின் விவரங்களையும் இங்கே பாருங்கள்:
-
ஆர்க்டிக் புளூ
-
அரோரா வொயிட்
-
அட்லாண்டிஸ் கிரே
-
காஸ்மோஸ் பிளாக்
BYD ஆனது டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களுடன் சீல் EV -யை வழங்கவில்லை. இவை அனைத்தும் பிரீமியமாக தோற்றமளிக்கும் போது தனித்து நிற்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் BYD சீலின் வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங் அதன் ஸ்போர்ட்டி வடிவத்துடன் சிறப்பாகவே உள்ளது. சீல் ஏற்கனவே 19-இன்ச் அலாய் வீல்களுக்கு டார்க் ஷேடுடன் வருவதால் காஸ்மோஸ் பிளாக் கலர் சாலையில் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
BYD சீல் எலக்ட்ரிக் பவர் ட்ரெயின்கள்
BYD இந்தியாவின் முன்னணி EV மூன்று மின்சார பவர் ட்ரெயின்களுடன் கிடைக்கிறது:
விவரங்கள் |
டைனமிக் ரேஞ்ச் |
பிரீமியம் ரேஞ்ச் |
பெர்ஃபாமன்ஸ் |
பேட்டரி பேக் |
61.4 kWh |
82.5 kWh |
82.5 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் டிரைவ் டிரெய்ன் |
சிங்கிள் மோட்டார் (RWD) |
சிங்கிள் மோட்டார் (RWD) |
டூயல் மோட்டார் (AWD) |
சக்தி |
204 PS |
313 PS |
530 PS |
டார்க் |
310 Nm |
360 Nm |
670 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
510 கி.மீ |
650 கி.மீ |
580 கி.மீ |
எலக்ட்ரிக் செடான் ரூ. 1 கோடிக்கும் குறைவான விலையில் உள்ள இந்தியாவின் ஸ்போர்ட்டியான எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாக உள்ளது. மேலும் அதன் விலைக்கு நெருக்கமாகஅருகில் உள்ள மற்ற பிரீமியம் EV -களுடன் ஒப்பிடும் போது இதன் கிளைம்டு ரேஞ்ச் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது.
தொடர்புடையது: இந்தியாவில் உள்ள அனைத்து பிரீமியம் கார்களை விடவும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள BYD Seal கார்
BYD சீல் EV -யில் உள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு
BYD ஆனது 15.6-இன்ச் ரொட்டேட்டிங் டச் ஸ்கிரீன் செட்டப் , டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் பேட்கள், ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சீலின் பாதுகாப்புக்காக , 9 ஏர்பேக்குகள் , 360 டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
BYD சீல் விலை மற்றும் போட்டியாளர்கள்
BYD சீல் காரின் விலை ரூ. 41 லட்சம் முதல் ரூ.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது. இது ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் கியா EV6 க்கு எதிராக போட்டியிடுகின்றது . கூடுதலாக வோல்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் BMW i4 போன்ற பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி -களுக்கு இது ஒரு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: சீல் ஆட்டோமெட்டிக்