புதிய பெட்ரோல் பவர்டு Mini Cooper S காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது
published on ஜூன் 11, 2024 06:10 pm by dipan
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய மினி கூப்பர் 3-டோர் ஹேட்ச்பேக்கை மினி -யின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
-
தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது; விலை விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன
-
புதிய வடிவிலான எண்கோண (octagonal) முன் கிரில் மற்றும் LED டெயில்லைட்கள் ஐகானிக் யூனியன் ஜாக் வடிவத்தையும் இது கொண்டுள்ளது.
-
உள்ளே இது வழக்கமான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு பதிலாக 9.4-இன்ச் வட்ட வடிவிலான OLED டச் ஸ்கிரீனை பெறுகிறது.
-
மினி கூப்பர் S காரில் 2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் (204 PS/300 Nm) கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபலமான மினி கூப்பர் அதன் ஐந்தாவது தலைமுறை மாடலுடன் இந்தியாவுக்கு திரும்ப தயாராகியுள்ளது. இது அதன் பிரபலமான சில்அவுட் தோற்றத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஸ்டைலிங் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்துடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கான முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. விலை விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படலாம்.
வெளிப்புறம்
2024 மினி கூப்பர் அதன் வழக்கமான பிரபலமான ஷில்அவுட்டை, நேர்த்தியான வடிவமைப்பை அப்படியே வைத்துள்ளது. இது சிக்கலான வடிவமைப்புகளுடன் புதிய எண்கோண முன் கிரில்லை கொண்டுள்ளது, DRL -க்காக கஸ்டமைஸபிள் லைட் பேட்டர்ன்களுடன் கூடிய புதிய வட்ட வடிவ LED ஹெட்லைட்கள் உள்ளன.
பக்கவாட்டில் இது புதிய 17-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. இது 18-இன்ச் யூனிட்களாக அப்டேட் செய்யப்படலாம். பின்புறம் புதிய வடிவிலான LED டெயில்லைட்கள் மற்றும் ஒரு கூல் சீக்வென்ஷியல் இண்டிகேட்டர் மற்றும் ஐகானிக் யூனியன் ஜாக் மோட்டிஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஓஷன் வேவ் கிரீன், சன்னி சைட் யெல்லோ, பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், சில் ரெட் II மற்றும் பிளேசிங் ப்ளூ என 5 கலர் ஸ்கீம்களில் வரவிருக்கும் கூப்பர் S காரை மினி வழங்குகிறது.
உட்புறங்கள்
2024 மினி கூப்பரின் உட்புறம் புத்தம் புதிய மினிமலிஸ்ட் தோற்றத்தில் உள்ளது, அதே நேரத்தில் அதன் பிரபலமான வட்ட தீம் உள்ளது. மையமாக 9.4-இன்ச் சுற்று OLED டச் ஸ்கிரீன் உள்ளது. பாரம்பரிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு பதிலாக இந்த மையத் திரையில் கார் தகவல்கள் அனைத்தும் காட்டப்படும்.
பார்க்கிங் பிரேக், கியர் செலக்டர், ஸ்டார்ட்/ஸ்டாப் கீ, எக்ஸ்பீரியன்ஸ் மோட் டோகிள் மற்றும் வால்யூம் கண்ட்ரோல் ஆகியவை அதன் அடியில் உள்ள சென்டர் கன்சோலில் உள்ள டோகிள் பார் யூனிட்டில் நேர்த்தியாக கொடுக்கப்படுள்ளன. கியர் லீவர் பொதுவாக இருக்கும் இடத்தில், இப்போது வயர்லெஸ் சார்ஜிங் ட்ரே உள்ளது. பனோரமிக் கிளாஸ் ரூஃப் கேபினை வென்டிலேஷன் ஆக மாற்றுகின்றன மேலும் பின்புற சீட்களை 60:40 ஸ்பிளிட் ஆக மடிப்பதால் ட்ரங்க் இடத்தை 210 முதல் 725 லிட்டராக அதிகரிக்க முடியும்.
ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், ஓட்டுநர் இருக்கையில் மசாஜ் ஃபங்ஷன், ஆம்பியன்ட் லைட்ஸ், ரியர்வியூ கண்ணாடியின் உள்ளே எலக்ட்ரோக்ரோமிக், ஆட்டோ ஏசி மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
பவர்டிரெய்ன்
2024 மினி கூப்பர் S காரில் 2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது 204 PS மற்றும் 300 Nm (தற்போதைய மாடலை விட 26 PS மற்றும் 20 Nm அதிகம்) மற்றும் 0-100 கிமீ/மணி நேரத்தை 6.6 வினாடிகள் (0.1 வினாடி குறைவாக) கொண்டுள்ளது. இது 7-ஸ்பீடு DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) பெறுகிறது, இது முன் சக்கரங்களை இயக்குகிறது.
பாதுகாப்பு
பாதுகாப்பு அம்சத்தில், புதிய மினி கூப்பர் S காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக் அசிஸ்ட், லெவல்-1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), டிராக்ஷன் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை உள்ளன. இது ஒரு பெடஸ்ட்ரியன் வார்னிங் சிஸ்டமை ஸ்டாண்டர்டாக உள்ளடக்கியது, ஒரு ஆப்ஷனாக பிளைண்ட் ஸ்பாட் வார்னிங் சிஸ்டம் உள்ளது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 மினி கூப்பரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தற்போதைய மினி கூப்பர் S 3-டோர் காரில் விலை ரூ. 42.7 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்) மேலும் கூடுதல் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு. இது சற்று அதிக விலையில் வரலாம். இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இதை BMW X1, மெர்சிடிஸ்-பென்ஸ் GLA மற்றும் ஆடி Q3 போன்றவற்றுக்கு மாற்றாக கருதலாம்.