M-ன் முறுக்குடன் கூடிய 7-சீரிஸ்: BMW M760Li xடிரைவ்
modified on பிப்ரவரி 16, 2016 04:47 pm by nabeel for பிஎன்டபில்யூ 7 சீரிஸ்2015-2019
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
அதிகளவில் வதந்திகளும், கசிந்த படங்களும் சேர்ந்து ஒரு M பேட்ஜ் கொண்ட 7-சீரிஸ் மாடலை உறுதி செய்த நிலையில், முடிவாக M760Li x டிரைவ்-வை BMW நிறுவனம் வெளியிட்டுள்ளது. வழக்கமான முன்னணி ஆடம்பர அம்சங்களை தவிர, இந்த பிம்மரில் (BMW) ஒரு 12-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் M செயல்திறன் கொண்ட ட்வின் பவர் டர்போ டெக்னாலஜி ஆகியவற்றை, அதன் போனட்டின் கீழே கொண்டுள்ளது. செயல்திறன் மீது ஆவல் கொண்டு, பின்புற சீட்டின் திறந்தவெளியில் விருப்பமுள்ள கார் ஆர்வலர்களை குதூகலப்படுத்துவதற்காக வரும் இந்த காரில், எப்போதாவது ஹேமில்டனை தங்களுக்குள்ளே ஆதரித்து கொள்ளக்கூடும். 7-சீரிஸ் பாரம்பரியத்தின் பிரிமியம் நிலை மற்றும் M பிரிவின் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றின் கலவை, இந்த காரில் உள்ளது கவனிக்கத்தக்கது.
M760Li-யை போல சற்று செயல்திறன் சார்ந்த ஒரு வாகனமான இதை பற்றிய கண்ணோட்டத்தில், முதலில் அதன் கணக்கீடுகளை குறித்து காண்போம். இந்த காருக்கான ஆற்றலை, புதிய M செயல்திறன் ட்வின்பவர் டர்போ V12 பெட்ரோல் என்ஜின் அளிக்கிறது. இந்த 6.6-லிட்டர் V12 யூனிட் மூலம் 5,500rpm-ல் 590bhp ஆற்றலையும், 1,500rpm-ல் 800Nm முடுக்குவிசையையும் பெற முடிகிறது. BMW M6 கிரான் கூபே அளிக்கும் 550bhp ஆற்றல் மற்றும் 680Nm முடுக்குவிசையை விட, இது ஒரு சிறப்பான புள்ளிவிபரத்தை கொண்டுள்ளது. இந்த ஆற்றல் பகிர்வு, ஒரு தரமான 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் வழியாக அளிக்கப்படுகிறது. இதன்மூலம் BMW M760Li xடிரைவ் 3.9 வினாடிகளில் மணிக்கு 0-ல் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது. அதிகபட்ச வேகத்தை ஒரு எலக்ட்ரோனிக்கலி லிமிடேட் மூலம் மணிக்கு 250 கி.மீ. ஆக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் நீங்கள் வேகமாக செல்ல விரும்பினால், தேர்விற்குரிய M டிரைவரின் பேக்கேஜ்ஜை பயன்படுத்தி, இந்த காரை மணிக்கு 305 கி.மீ. வேகம் வரை செலுத்தலாம்.
இந்த காரில் பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டு, பயணத்தை சிறப்பானதாக மாற்றியிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், 20-இன்ச் M எடைக்குறைந்த அலாய் வீல்கள், ஆக்டிவ் சேஃப்டி, ஆக்டிவ் ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் 19-இன்ச் M ஸ்போர்ட் பிரேக் உடன் ப்ளூ மெட்டாலிக் பிரேக் காலிபர்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. உள்புறத்தில் டிரைவருக்காக, எல்லா புதிய 7-சீரிஸ்களிலும் காணப்படும் டிரைவிங் எய்டுகளும் உள்ளன. இதில், கன்ட்ரோல் டிஸ்ப்ளேயில் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஒரு 3D மற்றும் பனோராமா வ்யூ தேர்வு ஆகியவற்றை கொண்ட சர்ரவுண்டு வ்யூ சிஸ்டம் உட்படுகிறது. நீங்கள் ஒரு M செயல்திறன் கொண்ட வாகனத்தில் உள்ளீர்கள் என்பதை மறந்துவிடவில்லை என்பதை உறுதிசெய்யும் வகையில், இதில் ஒரு பிரத்யேகமான M லேதர் ஸ்டீயரிங் வீல் உடன் M லோகோ, டோர் ஸில் பிளேட்கள் உடன் ஒரு ஒளிரும் தன்மை கொண்ட V12 லோகோ, பின்புற கம்பார்ட்மெண்டின் நடுவில் உள்ள ஆம்ரெஸ்ட்டின் தேர்விற்குரிய டச் கமெண்டு பேனலில் ஒரு V12 குறியீடு மற்றும் ஒரு பிரத்யேகமான ஸ்பீடோமீட்டர் உடன் மாடல் டெசிகனேஷன் மற்றும் மணிக்கு 330 கி.மீ. டயல் ஆகியவற்றை கொண்ட ஒரு இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் மற்றும் ஒரு ஐடிரைவ் கன்ட்ரோலர் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இதை விட ஒருபடி மேலான சிறப்பான ஒரு BMW வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்காக நீங்கள் கூடுதல் தொகை எதுவும் செலுத்த தேவையில்லை. இதோ தேர்விற்குரிய BMW M760Li xடிரைவ் V12 எக்ஸலென்ஸ் பேக்கேஜ்ஜை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதில் 20-€ இன்ச் BMW தனிப்பட்ட எடைக்குறைந்த-அலாய் வீல்கள், உயர்தர பளபளப்பான பாலீஷ் செய்யப்பட்ட வாஸ்போக் 646 டிசைனில் அமையப் பெற்று, கலப்பின அளவு டயர்கள் (முன்புறம்: 245/40 R20, பின்புறம்: 275/35 R20) பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு உயர்தர பளபளப்பான கருப்பு நிறத்தினால் பணித் தீர்க்கப்பட்ட பிரேக் காலிபர்கள் உள்ளன. V12 எக்ஸலென்ஸ் மாடலை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் BMW M760Li xடிரைவ் காரில், ஏர் இன்டேக் கிரில்லின் மேல்புற பிரிவில், காரின் மொத்த அகலத்திற்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரு கிரோம் பாரை காண முடிகிறது. இது தவிர, கிரோம் வரிகளுடன் கூடிய சில்வர் நிறத்திலான கிட்னி கிரில் பார்கள், அதேபோல ஒளிரும் கிரோம் மூலம் சூழப்பட்டுள்ளது.
பாடியில் உள்ள மற்ற எல்லா டிரிம் கூறுகளும் கூட, ஒளிரும் கிரோமை பெற்றுள்ளன. BMW M760Li xடிரைவ் V12 எக்ஸலென்ஸ் என்ற மாடலை குறிக்கும் இடத்தில் உள்ள பூட் லிட்டில் ஒரு V12 பேட்ஜை காண முடிகிறது. எக்சாஸ்ட் அமைப்பின் கிரோம் ஜோடி, செவ்வக வடிவிலான டெயில்பைப் எம்பெல்லிஷர்கள் ஆகியவை கூடுதலான கிரோம் டிரிம்மை கொண்டுள்ளன. காரின் உட்புறத்தில், BMW ஸ்டீயரிங் வீல்லில், மர உள்ளீடுகள் (வூட் இன்லேஸ்) மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரில் V12 எழுத்துக்களை கொண்டு, டிரைவர் என்ஜினின் செயல்பாட்டை கிளப்பியவுடன் ஸ்பீடோமீட்டரின் விரிவாக்கம் மணிக்கு 260 கி.மீ. (மணிக்கு 160 மைல்) வரை ஒளிருகிறது. இதமான அனுபவத்தை (கம்ஃபோர்ட்) சார்ந்த எக்சாஸ்ட் அமைப்பில், ஒரு தெளிவான சவுண்டு டிராக்கை பெற்று, V12 எக்ஸலென்சின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதாக அமைகிறது.
0 out of 0 found this helpful