பிஎம்டபுள்யூ இந்தியா மேம்படுத்தப்பட்ட 1 சீரிஸ் காரை ரூ. 29.90 லட்சங்களுக்கு அறிமுகப்படுத் தியது.
published on செப் 30, 2015 01:26 pm by manish for பிஎன்டபில்யூ 1 சீரிஸ்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
மேம்படுத்தப்பட்ட BMW 1 - சீரிஸ் கார்கள் எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி 28 ஆம் தேதி அறிமுகமானது. இந்த புதிய மேம்படுத்தப்பட்ட கார் ரூ. 29.90 லட்சங்களுக்கு ( எக்ஸ் - ஷோரூம் , தானே) விற்பனைக்கு வந்துள்ளது. நாங்கள் முன்பு எங்கள் செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததைப் போல 2015 ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மேம்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள் தனது முந்தைய மோசமான விமர்சனத்திற்கு உள்ளான வேகன் - போன்ற தோற்றத்தை முற்றிலும் துறந்து ஒரு SUV போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய 2015 BMW 118d கார் ஒரே ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே அறிமுகமாகியுள்ளது.
இந்த புதிய 2015 BMW 118d கார் முந்தைய மாடலை விட நீளம் சற்று அதிகரிக்கப்பட்டு 4,329mm நீளம் 1,765mm அகலம் மற்றும் 1,440mm உயரமும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. SUV போன்ற தோற்றத்தை தரும் வடிவமைப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் பகலிலும் ஒளிரும் சக்திமிக்க LEDகளை உள்ளடக்கிய பெரிய முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய BMW - 1 சீரிஸ் காரில் முன்புறம் பெரிய சிறுநீரக வடிவிலான க்ரில் மற்றும் பின்புறம் மாற்றிவடிவமைகப்பட்ட முழுதும் LED யிலான டெயில் விளக்கு க்ளஸ்டர் (கொத்து ) பொருதப்பட்டுள்ளதை காண முடிகிறது. காரின் பக்கவாட்டு பகுதியில் கதவுகளுக்கு வெள்ளி கைப்பிடி இணைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முந்தைய 1 - சீரிஸ் மாடலை போலவே இந்த புதிய 118d ஸ்போர்ட்லைன் மாடல் கார்களிலும் 1995cc டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 148bhp சக்தியையும் 360Nm அளவிலான டார்க்கையும் உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்த என்ஜின் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. . 8 - வேக தானியங்கி கியர் அமைப்பும் இந்த என்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உட்புற வடிவமைப்பை பொறுத்தவரை பியானோ - கருப்பு வண்ணத்தினால் ஆன மதிய கன்சோல் பகுதி, மேம்படுத்தப்பட்ட இன்போடைன்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களை பார்க்க முடிகிறது. மேலும் ரேடியோவில் உள்ள வண்ணத்துடன் பொருந்தி போகும் வகையில் குளிர்சாதன திறப்புகளுக்கு ( ஏர் கண்டிஷன் வென்ட்) குரோம் பூச்சு கொடுக்கப்பட்டு மிக அழகான தோற்றத்தைப் பெற்றுள்ளது. சிங்கள் சோன் கிளைமேட் கண்ட்ரோல் அமைப்பு 118d கார்களில் இணைத்தே விற்பனை செய்யப்படுகிறது. எனினும் ட்யுவல் - சோன் சிஸ்டம் தேவைப்படும் பட்சத்தில் பொருத்திக் கொள்ளும் விதத்தில் கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மெர்சிடீஸ் எ - கிளாஸ் மற்றும் வோல்வோ - 40 கார்களுடன் மோத தயார் நிலையில் உள்ளது இந்த புதிய 1 சீரிஸ் கார்கள்.
0 out of 0 found this helpful