லாஸ் ஏஞ்சல்ஸில் பெண்ட்லீ பெண்டேகா வெள்ளோட்டம்
published on நவ 18, 2015 01:51 pm by manish for பேன்ட்லே பென்டைய்கா 2015-2021
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
சமீபத்தில், பெண்ட்லி நிறுவனம் பெண்டேகா SUV காரை வெளியிடப்பட்ட போது, நம் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டோடியது. மேலும், நாம் வெளியிட்டது போலவே முதல் காருக்கு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II உரிமையாளரானார் என்பதும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால், அத்துடன் இந்த காரின் விற்பனை முடிவடைந்துவிட்டது என்ற செய்தி கேட்டவுடன் அனைவரின் உற்சாகமும் வடிந்து விட்டது. மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் பெண்டெகா SUV அனைத்து சாலைகளிலும் வலம் வரும் என்ற நமது நம்பிக்கை ஒளி வேகமாக சிதறடிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை. எனினும், இந்த கார் தயாரிப்பாளர் நம்மை கவலையில் இருந்து மீட்டெடுக்க, முதலில் தயாரான கார்களை ‘ஃபர்ஸ்ட் எடிஷன்’ என்று பெயரிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கொண்டுவந்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சன்செட் மார்குய்ஸ் ஹோட்டலில், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஒரு சில செல்வந்தர்களுக்கு மட்டும் இந்த காரின் பிரத்தியேகமான வெள்ளோட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஃபர்ஸ்ட் எடிஷன் பெண்ட்லீ பெண்டெகா மாடல் ஒரு உலகளாவிய தயாரிப்பாக இருந்தாலும், வெறும் 608 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. ‘அது என்ன 608?’- என்று நீங்கள் கேட்பது எங்களுக்குப் புரிகிறது. 6.0 லிட்டர் W12 பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த கார் 608 PS சக்தியை உற்பத்தி செய்கிறது. எனவேதான், 608 கார்களை மட்டும் உற்பத்தி செய்துள்ளனர். 608 PS சக்தியை மட்டுமல்லாது, இந்த SUV –யில் பொருத்தப்பட்டுள்ள இஞ்ஜின் 900 Nm டார்க்கையும் உற்பத்தி செய்து, கிளம்பிய 4.1 வினாடிகளில் 100 kmph என்ற வேகத்தை அடைய உதவி செய்கிறது. அதிகபட்சமாக 301 kmph வரை இந்த காரை வேகப்படுத்த முடியும் என்ற சிறப்பு தவிர, மேலும் சில புள்ளி விவரங்கள் இணைந்து, பெண்ட்லீ பெண்டேகா மாடலை உலகத்திலேயே அதி வேகமாக செல்லும் SUV என்ற பெயரைப் பெற்றுத் தந்துள்ளன. 608 PS என்பது இந்த கார் உற்பத்தியில் தாரக மந்திரமாக செயல்படுகிறது. ஏனெனில், பெண்டேகாவின் 608 PS என்ற அளவிலான சக்தி உற்பத்தி, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த SUV என்ற பெருமையையும் இந்த காருக்குப் பெற்றுத் தருகிறது.
பெண்டேகாவின் ஃபர்ஸ்ட் எடிஷன் மாடலில் ஒரு புதிய பிரீட்லிங்க் வாட்ச்; கருப்பு வண்ணத்தில் பிரகாசமான 22 அங்குல அலாய் சக்கரங்கள்; வெளிப்புறத்தில் யூனியன் ஜாக் பேட்ஜிங்; பளபளப்பான டிரெட் பிளேட்கள்; மற்றும் 10 விதமான வெளிப்புற கலர் ஆப்ஷங்கள் போன்ற சிறப்பம்ஸங்களுடன் இந்த காரை மெருகேற்றி இருப்பது, இதன் ஆடம்பர வடிவமைப்பை மேலும் பகட்டாக காட்டுகிறது. உட்புற கேபினில், அனைத்து பகுதிகளிலும் சீராக பரவி உள்ள லைட்டிங்; டைமண்ட் வடிவத்தில் தைக்கப்பட்ட லெதர் இருக்கைகள் மற்றும் டோர் டிரிம்கள்; எம்பிராய்டரி மற்றும் மாறுபட்ட தையல் வேலைப்பாடுகளை உடைய இருக்கைகள் தவிர, யூனியன் ஜாக் பேட்ஜிங்கும் இந்த காரின் உள்ளே இடம்பெற்றுள்ளன. இறுதியாக, இத்தகைய பிரமாண்டமான காரின் சாவியைப் பெற வேண்டுமானால், முன் பதிவு செய்து ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். உடனடியாக முன்பதிவு செய்து இந்த காரின் உரிமையைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால், ஏற்கனவே இந்த காரின் ஒரு வருடத்திற்கான விற்பனை முடிந்துவிட்டது என்பதாகும்.
இதையும் படியுங்கள்: பென்ட்லீ பென்டேகா டீசல் இஞ்ஜினுடன் அறிமுகமாகுமா?
0 out of 0 found this helpful