க்ரூவ் தொழிற்சாலையில் முதல் பென்ட்லி பென்டைய்கா-வின் உற்பத்தி துவக்கம்
published on நவ 30, 2015 03:44 pm by raunak for பேன்ட்லே பென்டைய்கா 2015-2021
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இங்கிலாந்து நாட்டின் க்ரூவ்-வில் உள்ள பென்ட்லி நிறுவனத்தின் தலைமையகத்தில், அந்நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் SUV-யான பென்டைய்கா-வின் தயாரிப்பு துவக்கப்பட்டுள்ளது. பென்ட்லி நிறுவனத்தின் முதல் SUV தயாரிப்பான பென்டைய்காவின் விநியோகம், வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவக்கப்படும். £840 மில்லியன் முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள பென்டைய்காவின் தயாரிப்பு, க்ரூவ் தயாரிப்புத் தொழிற்சாலையில் முழுவீச்சில் நடைபெற உள்ளது என்று அந்த வாகன தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பென்ட்லி மோட்டார்ஸ் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி வால்ஃப்கேங்க் துர்ஹைமர் கூறுகையில், “இதுவரை மற்ற எல்லா SUV-களாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவீடுகளையும் மேற்கொள்வதாக, பென்ட்லி பென்டைய்காவின் நிர்ணய அளவுகள் அமையும். இது ஆடம்பர SUV-களில் ஒரு புதிய பிரிவை வரையறுக்கும்” என்றார்.
உலகின் அதிக சக்திவாய்ந்த SUV ஆக அறியப்பட்டு, பென்டைய்கா கவர்ச்சி மிகுந்ததாக உள்ளது. இது ஒரு 6.0-லிட்டர் W12 ட்வின்-டர்போ சார்ஜ்டு பெட்ரோல் மூலம் ஆற்றலை பெற்று இயங்குகிறது. இந்த மோட்டார் 6,000 rpm-ல் 608 PS ஆற்றலும், குறைந்தபட்சமாக 1,250 rpm-ல் இருந்து அதிகபட்சமாக 4,500 rpm வரையிலான அளவில் 900 Nm முடுக்குவிசையை வெளியிடுகிறது. இந்த என்ஜின், ஒரு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த SUV-வில் இருந்து ஏராளமான ஆற்றல் வெளியீடு இருப்பதால், 0-வில் இருந்து மணிக்கு 100 கி.மீ வேகத்தை அடைய 4.1 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்கிறது. அதிகபட்ச வேகமாக மணிக்கு 301 கி.மீ. வரை எட்டுகிறது.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன், கூறுகையில், “முதல் பென்ட்லி பென்டைகா, க்ரூவ்-வில் உள்ள தயாரிப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பென்ட்லி நிறுவனத்தால் ஒரு உச்சக்கட்ட காலஅளவில் மேற்கொள்ளப்பட்ட வியக்க வைக்கும் கடின உழைப்பும், அந்நிறுவனத்தின் சமர்ப்பணம் கொண்ட தொழிலாளர் குழுவும் இணைந்ததால், இந்த குறிப்பிடத்தக்க புதிய வாகனத்தை அவர்களால் சந்தைக்கு கொண்டுவர முடிந்தது. பென்டைகாவிற்காக, க்ரூவ் தொழிற்சாலையில் ஒரு பேர்வத்தோடு கூடிய £800 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மண்டல வளர்ச்சி நிதியின் கீழ் (ரீஜனல் க்ரோத் ஃபன்டு) £9.5 மில்லியன் நிதியாதரவும் அளிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மதிப்புள்ள திறமையான வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை ஏற்பட்டு, அப்பகுதியின் எதிர்கால உற்பத்திக்கு பலம் சேர்ப்பதாக உள்ளன.
பென்ட்லியை சேர்ந்த எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். க்ரூவ்-வில் பணியாற்றும் மற்றும் வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த சந்தர்ப்பம் ஒரு பெருமைக்குரிய நேரம் ஆகும்” என்றார்.
இதையும் படியுங்கள்