• login / register

2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவிற்கு வந்துள்ள, உலகின் மிக வேகமான SUV-யான பென்ட்லி பென்டைகா

வெளியிடப்பட்டது மீது sep 16, 2015 08:17 pm இதனால் bala subramaniam

  • 6 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

சென்னை:

இது ஒரு SUV-களின் காலம். 2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில், பென்ட்லி நிறுவனம் தனது முதல் SUV-யான பென்ட்லி பென்டைகாவை காட்சிக்கு வைத்துள்ளது. பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான பென்ட்லியை பொறுத்த வரை, உலகிலேயே அதிக வேகமான, மிகவும் சக்தி வாய்ந்த, அதிக ஆடம்பரமான மற்றும் மிகவும் பிரத்யேகமான SUV என்றால், அது பென்டைகா தான். பென்டைகாவில், புதிய ட்வின்-டர்போ சார்ஜ்டு 6.0-லிட்டர் W12 என்ஜின் மூலம் 608 PS ஆற்றலையும், 900 Nm என்ற அதிக முடுக்குவிசையும் கிடைப்பதால், அதை எதிர்த்து வாதாட முடியாது. மேற்கூறிய ஆற்றல் கூடத்தை கொண்டுள்ள இந்த SUV, 4.1 விநாடிகளில் மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 301 கி.மீ. வேகம் வரை செல்ல முடிகிறது.

பென்ட்லி பென்டைகாவில், ஒரு பெரிய மேட்ரிக்ஸ் கிரில், B-வடிவிலான விங் வென்ட்கள், நான்கு வட்ட வடிவ LED ஹெட்லெம்ப்கள், ‘B’-வடிவிலான லூமினேஷன் கிராஃபிக்ஸ் கொண்ட பிரிக்கப்பட்ட டெயில்லெம்ப்கள், பானோராமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் 20 முதல் 22 இன்ச் அளவுகள் கொண்ட அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. உட்புற அமைப்பு முழுவதும், குறிப்பிடத்தக்க பென்ட்லியின் லேதர் மற்றும் மர கைவேலைப்பாடுகள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் 4 சீட்கள் அல்லது 5 சீட்கள் கட்டமைப்பு கொண்ட கார்களை பதிவு செய்யலாம். எந்த சீட் கட்டமைப்பை கொண்ட காரை தேர்ந்தெடுத்தாலும், பென்டைகாவின் லேதர் சீட்களில் வேறுபட்ட தையலையும், கை சாய்மானம் (போல்ஸ்டர்) மற்றும் தோல்பட்டை பகுதிகளில் கிடத்தப்பட்ட டைமண்ட் டிசைன் காணப்படும்.

நீங்கள் 4-சீட் கட்டமைப்பை தேர்ந்தெடுத்தால், பின்புறத்தில் உள்ள 2 தனிப்பட்ட சீட்களையும் 18 வழிகளில் மாற்றி அமைக்கும் வசதியுடன், மசாஜ், காற்றோட்ட அமைப்பு மற்றும் ஃபுட் ரேஸ்ட்கள் ஆகியவையும் காணப்படும். முன்பக்க சீட்களை 22 வழிகளில் மாற்றி அமைக்கும் வசதியோடு, பின்பகுதி சாய்மானங்கள் (பேக்ரெஸ்ட் போல்ஸ்டர்) மற்றும் குஷன் ஆகியவற்றையும் சீரமைக்கும் வசதியும் உள்ளது. 7 சீட்கள் கொண்ட கட்டமைப்பு, பிற்காலத்தில் கொண்டு வரப்பட உள்ளது.

பென்டைகாவின் உட்புறத்தில், இந்த பிரிவிலேயே முன்னோடியான நேவிகேஷன் டெக்னாலஜி, ஒரு 60GB ஹாடு ட்ரைவ் மற்றும் 30 மொழிகள் வரை விருப்ப தேர்வு செய்யும் வசதி ஆகியவை கொண்ட 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் காணப்படுகிறது. பின்புறத்தில், பென்ட்லி எண்டர்டெயின்மெண்ட் டேப்லெட் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 4G, WiFi, ப்ளூடூத் ஆகியவை மூலம் எளிதான மற்றும் ஹை-ஸ்பீடு-ஆன்-போர்டு கனெக்ட்டிவிட்டி பெறும், ஒரு ரிமூவபிள் 10.2 இன்ச் ஆன்ட்ராய்டு டிவைஸ் உள்ளது. பென்ட்லி ஸ்டேண்டேட் ஆடியோ, பென்ட்லி சிக்னேச்சர் ஆடியோ மற்றும் பென்ட்லி பிரிமியம் ஆடியோவிற்கு நயிம் என 3 வகையான சவுண்ட் சிஸ்டம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவிலேயே 3வது வகையில், 1950 வாட்ஸ் திறன் கொண்டு, 18 ஸ்பீக்கர்களின் இணைப்பு மற்றும் சூப்பர்-ட்விட்டர்களை பெற்று, அதிக ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

பென்டைகாவை இயக்கும் புதிய 6.0-லிட்டர் ட்வின்-டர்போ W12 TSI என்ஜின், 6,000 rpm-வில் 608 PS-யும், 1,250 rpm - 4,500 rpm இடைப்பட்ட அளவில் 900 Nm-யும் வெளியிடுகிறது. இந்த W12 என்ஜின், நேரடி மற்றும் மறைமுக பியூயல் இன்ஜெக்ஷன் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி கொண்டு, இரு தொழில்நுட்பத்திற்கும் பொருந்தி தடையில்லாமல் அதிகபட்ச மெருகேற்றத்தை அளித்து, குறைந்த மாசுபடுத்தும் துகள்களை வெளியிட்டு, அதிகபட்ச ஆற்றலையும், முடுக்குவிசையையும் அளிக்கிறது. பென்ட்லியின் மாறுபட்ட இடப்பெயர்ச்சி அமைப்பு (வெரியபில் டிஸ்பிளெஸ்மெண்ட் சிஸ்டம்) மூலம் என்ஜினில் இருந்து 292 g/km CO2 வெளியேற்றப்படுவதால், கவர்ச்சிகரமான திறனை காண முடிகிறது. என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பிற்காலத்தில், அதிக செயல்திறன், சுத்தமான தொழில்நுட்பம் கொண்ட டீசல் மற்றும் பிளெக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயின்கள் ஆகியவை இந்த வரிசையில் இணையும்.

ஒரு SUV-யின் குணநலன்கள் தொடர்பாக, பென்டைகாவில் ஆன்-ரோடு ட்ரைவ் மற்றும் ஆப்-ரோடு ட்ரைவ் அமைப்புகளான, பென்ட்லியின் ட்ரைவ் டைனாமிக் மோடு மற்றும் தேர்விற்கு உட்பட்ட 8-க்கும் மேற்பட்ட பொறுப்பான ஆப்-ரோடு தகவமைப்புகள் உள்ளன. பென்ட்லி டைனாமிக் ரைடு (மின்னூட்டத்தில் செயல்படுத்தப்படும் 48V ஆக்டிவ் ரோல் கன்ட்ரோல்), எலக்ட்ரிக் பவர்-அசிஸ்டேட் ஸ்டீயரிங் (EPAS) மற்றும் பொறுப்பான ஆப்-ரோடு தகவமைப்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஸ்டாப் மற்றும் கோ உட்பட்ட அடாப்டீவ் குரூஸ் கன்ட்ரோல் (ACC), பிரிடிக்டிவ் ACC மற்றும் போக்குவரத்து உதவி (டிராஃபிக் அசிஸ்ட்), போக்குவரத்து குறியீடுகளை அடையாளம் காணுதல், பின்புற சாலை கடக்கும் போக்குவரத்து எச்சரிக்கை, டாப் வியூ, வாகனத்தின் சுற்றுபுறத்தின் முழு உருவத்தையும் அளிக்கும் வகையிலான 4 கேமராக்களை கொண்ட ஒரு அமைப்பு, பார்க் அசிஸ்ட், எலக்ட்ரானிக் நைட் விஷன் மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே போன்ற ஓடுநருக்கு உதவும் அமைப்புகளை கொண்டுள்ளது.

வெளியிட்டவர்

Write your கருத்தை

Read Full News
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?