பென்ட்லீ பென்டேகா டீசல் இஞ்ஜினுடன் அறிமுகமாகுமா?
published on அக்டோபர் 23, 2015 02:17 pm by அபிஜித் for பேன்ட்லே பென்டைய்கா 2015-2021
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பென்ட்லீயின் பென்டேகா SUV காரில், எலெக்ட்ரானிக் டர்போ சார்ஜர் கொண்ட டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும் என்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியூட்டும் செய்தியை இந்நிறுவனத்தின் முதன்மை பொறியாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். தற்போது வெளிவரவுள்ள, சொகுசு வசதிகள் மேம்படுத்தப்பட்ட SUV –யில் பொருத்தப்படவுள்ள மோட்டார், ஆடி Q7 ரகத்தின், அதிக செயல்திறன் வாய்ந்த இரண்டாம் ஜெனரேஷன் மாடலில் பொருத்தப்பட்டதாக இருக்கும்.
இதன் டீசல் ரகத்தில் 4.0 லிட்டர் V8 TDI இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது. அடுத்த வருடத்தில் வெளிவர உள்ள SQ7 மாடலில் பொருத்தப்பட உள்ள இஞ்ஜினை, இதில் பொருத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த இஞ்ஜின், 435 PS சக்தி மற்றும் அதிகபட்சமாக சுமார் 1000 Nm டார்க் வரை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. e-டர்போ பொருத்தப்பட்டுள்ளதால், உற்பத்தி செய்யப்பட்ட சக்தி நேரடியாக செலுத்தப்படுகிறது. எனவே, எந்தவித பின்னடைவும் இல்லாமல் தங்கு தடையின்றி சக்தியை செலுத்த முடிகிறது. மேலும், இத்தகைய அதிநவீன தொழில்நுட்பத்தால், அதிகமான எரிபொருள் சிக்கனத்தைத் தர முடியும். மேற்சொன்ன விபரங்கள், மாறுதலுக்கு உட்பட்டவை, ஏனெனில், இவை அனைத்தும் SQ7 காரின் அம்சங்களில் இருந்து பெறப்பட்டவை. மாறுதலுக்கு உட்படும் போது, இந்த காரின் செயல்திறன் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.
அறிமுகப்படுத்தும் போது, பென்டேகாவில் புதிதாக உருவாக்கப்பட்ட W12 6.0 லிட்டர் டிவின்-டர்போ பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு, அபாரமான 608 PS சக்தி மற்றும் அதிகபட்சமாக 900 Nm டார்க்கும் உற்பத்தி செய்யும் திறனில் வெளிவரும். அதற்கு பின், 2017 –ஆம் வருடம் வரை நாம் இதன் ஹைபிரிட் வெர்ஷனை எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் பென்டேகா அறிமுகம் செய்யப்பட்டால், நாம் யூகித்தது போல டீசல் இஞ்ஜினுடன் வரும். மேலும், 2016 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் இந்தியன் ஆட்டோ கண்காட்சியில் புதிய பென்டேகா காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க:
0 out of 0 found this helpful