• English
  • Login / Register

மிகப் பெரிய பென்ட்லி வந்துவிட்டது: தன்னுடைய  பென்டேகா SUV வாகனத்தைப்  பற்றிய தகவல்களை அறிமுகத்திற்கு முன்பே வெளியிட்டது. (திரை காட்சிகள்)

published on செப் 09, 2015 04:35 pm by nabeel for பேன்ட்லே பென்டைய்கா 2015-2021

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஃப்ராங்க்ஃப்ர்ட் மோட்டார் ஷோவின் ஆரம்ப தருணம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பென்ட்லி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு அருமையான விருந்து வைக்க காத்திருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பென்ட்லியின் SUV ரக காரான பென்டேகாவை, இறுதியாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பென்டேகா கார் என்பது, இந்த பிரமாண்டமான கார் தயாரிப்பாளரின் முதலாவது SUV ரக காராகும். எனவே, இதில் புத்தம் புதிய 8 லிட்டர் W12 என்ற மிகப் பெரிய இஞ்ஜினைப் பொருத்தி, இந்த காரை, உலகிலேயே மிகவும் வேகமானதாகவும், மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், மிகவும் ஆடம்பரமானதாகவும், மிகவும் பிரத்தியேகமானதாகவும் உருவாக்கி உள்ளது. விரைவில் ஆரம்பிக்க உள்ள ஃப்ராங்க்ஃப்ர்ட் மோட்டார் ஷோ 2015 –இல் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும்.


பென்ட்லி தனது புதிய SUV காருக்காக, விசேஷமான புத்தம் புதிய 6.0 லிட்டர் W12 இரட்டை- டர்போ சார்ஜ்ட் இஞ்ஜினை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், 608 PS குதிரை திறனையும், 900 Nm முடுக்கு விசையையும் தயாரிக்க முடியும். இந்த செயல்திறன் அனைத்து சக்கரங்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது, ஏனெனில், 8 வேக பரிமாற்றத்தில், அனைத்து சக்கரங்களும் இயக்கப்படும்படி அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சக்தி எதற்கு உதவும் என்று தெரியுமா? இதன் மூலம், பென்ட்லியின் புதிய SUV –ஐ இயக்கியவுடன், ஆரம்ப நிலையிலிருந்து 4.1 வினாடிக்குள், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். மேலும், மிகவும் அதிகமாக, மணிக்கு 301 கிலோ மீட்டர் என்ற கணக்கில், இதை அதிவிரைவாக ஓட்ட முடியும். இத்தகைய அசுர வேகமானது, அனைத்து போட்டியாளர்களின் சூத்திரத்தையும் தகர்த்தெறிந்து, தனக்கென தனியொரு வெற்றிப் பாதையை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இஞ்ஜினில் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த சிலிண்டர் டி-ஆக்டிவேஷன் அமைப்பு; தானியங்கி இயக்கமுறை (ஸ்டார்ட்), நிறுத்தமுறை (ஸ்டாப்) மற்றும் தானியங்கி ஓடும்முறை (கோஸ்டிங்) போன்ற சிறப்பம்ஸங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், டீசல் மற்றும் கலப்பின ரகங்களில் இந்த SUV மாடல் வரும் என்று தெரிகிறது. பென்ட்லியின் பிரத்தியேகமான ட்ரைவ் டைனமிக்ஸ் முறை மற்றும் விருப்ப தேர்வாக உள்ள, கரடு முரடான சாலைகளுக்கு ஏற்றவாறு ஓட்டும் முறையை மாற்றிக்கொள்ளக் கூடிய ரெஸ்பான்ஸிவ் ஆஃப்-ரோட் அமைப்பை பொருத்தி, மொத்தம் 8 விதமான ஓட்டும் முறைகளை, ஒரு டயல் வழியாக டிரைவருக்கு கொடுத்து, எந்த ஒரு பகுதியிலும் காரை மென்மாருதமாக ஓட்ட உதவி செய்கிறது.

பென்டேகா உட்புற அமைப்புகளைப் பார்க்கும்போது, பென்ட்லியின் தனிச்சிறப்பான அனைத்து அம்ஸங்களையும் தன்னகத்தே கொண்டு, ஒரு ஆடம்பர சேடன் எப்படி இருக்க வேண்டுமோ, அது போலவும் மற்றும் சில இடங்களில், அதை விடவும் அதிகமான சொகுசு பயணத்தை கொடுத்து, இது ஒரு முழுமையான பென்ட்லியின் சின்னமாகவே இருக்கிறது.  பென்டேகாவின் உள்ளே உள்ள மர வேலைப்பாடு, உலோக மற்றும் தோல் வேலைப்பாடுகள் உலகத்திலேயே மிக சிறந்த உட்புற வேலைப்பாடாக இருக்கும் என்று இந்நிறுவனம் பெருமிதத்துடன் பறைசாற்றுகிறது.

பென்டேகாவின் சிறப்பம்ஸங்களான 18 வகையில் மாற்றி அமைக்கவல்ல பின்புற இருக்கைகள்; தோல் விரிப்புகளில் 15 விதமான வண்ண தெரிவுகள்; வெப்பமூட்டும் அமைப்புடன் கூடிய 22 விதங்களில் மாற்றி அமைக்கவல்ல முன்புற இருக்கைகள்; அருமையான காற்றோட்டம்; மற்றும் மசாஜ் அமைப்பு போன்றவை, வெளியே தெரியும் பிரமாண்டமான பனிப்பாறையின் ஒரு சிறிய முனை மட்டுமே. இந்த மகத்தான SUV –இல் 8 அங்குல தொடு திரை (டச் ஸ்கிரீன்) அமைப்பு, முகப்பு பெட்டியில் (டாஷ் போர்ட்) பொருத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, உள்ளமைக்கப்பட்ட (இன்-பில்ட்) 60 GB தகவல் சேமிக்கும் இடத்தை கொண்டு, 30 மொழிகளில் வருகிறது. பின்புற பயணிகளுக்கு, பிரத்தியேகமாக 4G, WiFi, மற்றும் புளுடூத் பொருத்தப்பட்ட 10.2 அங்குல அண்ட்ராய்டு டேப்லெட் உள்ளது.

ஒலி அமைப்பின் சிறப்புகளைப் பார்க்கும் போது, “1,950 வாட்ஸ் கொண்ட 18 ஒலிப்பெருக்கிகளும்; மிகவும் அதிகமான ஒலி அதிர்வு அலைகளை (ஃப்ரீகுவன்ஸி) உருவாக்கக் கூடிய சூப்பர் ட்வீட்டர்களையும் கொண்ட மிகவும் உயர்ரக ஒலி அமைப்பை பொருத்தி உள்ளோம்,” என்று இந்நிறுவனம் கூறுகிறது. இதன் வெளிப்புற பார்வையில் பென்டேகா கார், பெண்ட்லியின் அடையாள சின்னத்தையும், நான்கு LED முகப்பு விளக்குகளையும், கண்ணாடியால் ஆன மேற்கூரையுடனும் உள்ளது. மேலும் இரும்பினால் செய்த கட்டமைப்பை விட, 236 கிலோ எடை குறைவாக அலுமினியத்தால் செய்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் 20 அல்லது 22 அங்குல அலாய் சக்கர விருப்ப தெரிவுடன் வருகிறது.

நிலத்தில்

கரடு முரடான பாதையில்

பனியில்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Bentley பென்டைய்கா 2015-2021

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience